சுவையான ஆட்டு மூளை குழம்பு செய்வது எப்படி?





சுவையான ஆட்டு மூளை குழம்பு செய்வது எப்படி?

0

ஆடு, கோழி, மீன், போன்ற மாமிச உணவுகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகையான சத்துக்கள் காணப்படுகின்றன. 

சுவையான ஆட்டு மூளை குழம்பு

கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆட்டு மாமிசம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. 

ஆட்டுக்கறியில் புரதச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. ஆட்டின் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு விதமான பலனை தருவதாக உள்ளது. 

ஒரு சிலர் ஆட்டின் மூளையை தனியாக வறுத்து சாப்பிடுவார்கள். இதன் சுவையே அலாதியானது. இது மனித மூளைக்கு அதிக சக்தியை கொடுக்கும். 

கண்கள் குளிர்ச்சி பெறும். புத்தி தெளிவடையும், நினைவாற்றல் அதிகரிக்கும். விந்தணு குறைபாடு உடைய ஆண்கள் இதை சாப்பிட தாது விருத்தி உண்டாகும். 

இதே போல் ஆட்டின் குண்டிக்காய் சமைத்து சாப்பிட இடுப்புக்கும் குண்டிக் காய்க்கும் பலம் தரும். இடுப்பு நோய் அகற்றும். தாது விருத்தியாகும். ஆண் குறி பருக்கும்.

தேவையானவை :

ஆட்டின் மூளை - 4

சின்ன வெங்காயம் - 200 கிராம்

சீரகம்  - 3 தேக்கரண்டி 

மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி

தேங்காய்த் துறுவல் - 4 மேஜைக்கரண்டி

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

தக்காளி - 1 

கறிவேப்பிலை - 1 ஆர்க்கு

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - 50 மில்லி லிட்டர்

செய்முறை :

சுவையான ஆட்டு மூளை குழம்பு செய்வது எப்படி?

மூளையை சுத்தம் செய்த பின் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.

தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காய்த் துறுவல், சீரகம், மிளகாய்த்தூள் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும். வதங்கியதும் அரைத்த மஸாலாவைப் போட்டு வதக்கவும்.

சிறிதளவு தண்ணீர் ஊற்றி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறி விடவும். தீயை மிதமாக்கி மூளைத் துண்டுகளைப் போட்டு கவனமாகக் கிளறி விடவும்.

அல்லது வாணலியில் இரண்டு பக்கமும் பிடித்து சுழற்றி விடலாம். மூளை வெந்து, குழம்பு கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)