தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 20
தக்காளி - 2
சோம்பு - அரை டீஸ்பூன்
பட்டை - ஒன்று
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
நட்சத்திர சோம்பு - 1
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 5 பல்
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்த மல்லித்தழை, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் மஞ்சள் தூள், உப்பு, மூளை துண்டுகள் சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் விட்டு எடுக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, சோம்பு, கிராம்பு, பிரிஞ்சி இலை, ஏலக்காய், நட்சத்திர சோம்பு, பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். இந்நிலையில், மூளை துண்டுகள், அரைத்து வைத்த மசாலா சேர்த்து கலந்து சுமார் 5 நிமிடங்கள் விட்டு இறக்கவும். சுவையான மூளை வறுவல் ரெடி..!