காராமணி (என்பது பயறு வகைகளில் ஒன்று. இதனைத் தட்டைப்பயறு என்றும் கூறுவர். இது கருமை நிறத்திலும், செந்நிறத்திலும் இருக்கும்.
மொச்சைக் கொட்டை போல காராமணிப் பயறும் வளிப் (வாயு) பொருள் எனத் தமிழ் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நீங்கள் ரோட்டுக் கடைகளில் சாப்பிடும் ஆர்வம் உள்ளவரா?
தேவையானவை
இஞ்சி, பூண்டு அரைத்தது - 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
பூண்டு - 6 பல்
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
தனியாத்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
செய்முறை :
காராமணியை 2 மணி நேரம் ஊற வைத்து, வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை நறுக்கிக் கெள்ளவும். பூண்டை உரித்து, முழுதாக வைத்துக் கொள்ளவும்.வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
இஞ்சி, பூண்டு அரைத்தது போட்டு வதக்கவும். தக்காளி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும்.
5 நிமிடங்கள் கழித்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கிளறி, வேக வைத்துள்ள காராமணியைப் போடவும். மஸாலா கெட்டியானதும் இறக்கி, பரிமாறவும்.