குழந்தைகளுக்கு சோயா வறுவல் செய்வது எப்படி? #Roasted





குழந்தைகளுக்கு சோயா வறுவல் செய்வது எப்படி? #Roasted

0

மேற்கத்திய நாடுகளில், பதப்படுத்தப்பட்ட சோயா பொருட்கள் மிகவும் பிரபலமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். புரதத்தை உருவாக்க தேவையான ஒன்பது அமினோ அமிலங்களும் இதில் உள்ளது. 

குழந்தைகளுக்கு சோயா வறுவல் செய்வது எப்படி?
மேலும் இதில் நிறைவுற்ற கொழுப்பு குறைவாகவும், புரதம், வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் போன்றவை அதிகமாகவும் இடம் பெற்றிருக்கிறது. 

கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் தியாமின் போன்ற சத்துக்களும் இதில் அடங்கியுள்ளது. 
மேலும் வேக வைத்த பச்சை சோயாபீன்ஸில் 141 கி கலோரிகள், 12.35 கிராம் புரதம், 6.4 கிராம் கொழுப்பு, 11.05 கிராம் கார்போஹைட்ரேட், 4.2 கிராம் நார்ச்சத்து உள்ளது. 

உடல் எடையை குறைக்க விருப்பம் உள்ளவர்கள் கண்டிப்பாக சோயா பீன்ஸினை எடுத்துக் கொள்வது அவசியம். 

ஆய்வின்படி சோயாபீன்ஸ் சாப்பிடுவதால் உடல் உறுப்புகளை சுற்றி கொழுப்பு படிவதை தடுக்கிறது. மேலும் ஆரோக்கியமான எடையை நிர்வகிப்பதோடு, தசை வளர்ச்சிக்கும் உதவுகிறது.

தேவையானவை :

ஸோயா உருண்டைகள்  (Meal Maker) - 200 கிராம்

இஞ்சி - 1 அங்குலம்

பூண்டு - 6 பல்

மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

வியர்வை நாற்றம் அதிகமா வீசுதா? அப்ப இத யூஸ் பண்ணுங்க !

சோள மாவு (Corn Flour) - 2 தேக்கரண்டி

தக்காளி சாஸ் (Tomaot Sauce) -1 தேக்கரண்டி

ஸோயா சாஸ் (Soya Sauce) - 1தேக்கரண்டி

கரம் மஸாலாத்தூள் - அரை தேக்கரண்டி

உப்பு  - தேவையான அளவு

நல்லெண்ணெய் - 200 மில்லி லிட்டர்

செய்முறை :  

குழந்தைகளுக்கு சோயா வறுவல் செய்வது
தண்ணீரைக் கொதிக்க வைத்து ஸோயாவைப் போட்டு 10 நிமிடங்கள் ஆனதும் வடிகட்டிக் கொள்ளவும். ஆறியபின் ஸோயாவைப் பிழிந்து எடுத்து வைக்கவும்.

மறுபடியும் குளிர்ந்த தண்ணீரில் போட்டு நன்றாக பிழிந்து எடுத்து வைக்கவும். ஸோயாவை 2 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை அரைத்துக் கொள்ளவும்.

ஸோயா துண்டுகளுடன், தக்காளி சாஸ், ஸோயா சாஸ், மிளகாய்த்தூள், கரம் மஸாலாத்தூள், சோள மாவு, தேவையான அளவு உப்புத்தூள், அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு இவற்றைக் கலந்து 30 நிமிடங்கள் ஊற விடவும்.

ஸாஸ் வகைகள் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு வகைகளில் உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்க வேண்டும்.

வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஊற வைத்துள்ள ஸோயா துண்டுகளை கொஞ்சம், கொஞ்சமாகப் போட்டுப் பொரித்து (Deep Fry) எடுத்து பரிமாறவும்.

Post a Comment

0Comments

Post a Comment (0)