குழந்தைகளுக்கு கீரை, மட்டன் குழம்பு செய்வது எப்படி?





குழந்தைகளுக்கு கீரை, மட்டன் குழம்பு செய்வது எப்படி?

0

கண்ணு சரியா தெரியலியா... அப்படின்னா பொன்னாங்கண்ணிக் கீரையைச் சாப்பிடுங்க. பகல்ல கூட நட்சத்திரம் பார்க்கலாம். வயித்துல புண்ணா மணத்தக்காளி கீரையைச் சாப்பிடுங்க. 

குழந்தைகளுக்கு கீரை, மட்டன் குழம்பு
இருமல் குறையவே இல்லையா தூதுவளைக்கீரையைத் துவையலாக்கி சாப்பிடுங்க. வாய்ப்புண்ணா... அகத்திக்கீரை சாம்பார் சாப்பிடுங்க. 

மூட்டு வலியால அவதியா உங்களுக்கு முடக்கத்தான் கீரை தான் சரியான சாய்ஸ்... இப்படி கீரையின் நன்மைகளை சொல்லிக் கொண்டே போகலாம். 

இந்த வகையில் அரைக் கீரையுடன் ஆட்டுக்கறித் சேர்த்து கீரை, மட்டன் குழம்பு செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையானவை :

ஆட்டுக்கறித் துண்டுகள் - 500 கிராம்

கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி

பிரியாணி இலை - 1

அரைக்கீரை - அரை கட்டு

தனியா - 2 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி

தக்காளி - 2

சின்ன வெங்காயம் - 100 கிராம்

இஞ்சி, பூண்டு அரைத்தது - 1 தேக்கரண்டி

பட்டை - 2 + 2

கிராம்பு - 2 + 1

ஏலக்காய் - 1

கறிவேப்பிலை - 1 ஆர்க்கு + 1

மிளகாயத்தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

இதயம் நல்லெண்ணெய் - 50 மில்லி லிட்டர்

செய்முறை :

ஆட்டுக்கறித் துண்டுகளுடன் இஞ்சி, பூண்டு அரைத்தது, மஞ்சள் தூள், உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, 1 ஆர்க்கு கறிவேப்பிலை இவற்றை அரைத்துக் கொள்ளவும்.

வாணலியை காய வைத்து, காய்ந்ததும் தனியா, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, 2 கிராம்பு, 2 பட்டை இவற்றை மிதமான தீயில் வைத்து வறுத்துக் கொள்ளவும்.

வறுத்த பொருட்களை ஆறியதும் நைஸான தூளாக்கிக் கொள்ளவும். கீரையை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலி அல்லது அடி கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீதமுள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றைப் போட்டு வதக்கவும்.

கறிவேப்பிலையை கையினால் கிள்ளிப் போட்டு வதக்கவும். வதக்கியபின் அரைத்து வைத்துள்ள வெங்காயம், தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.

அதன் பின் கீரை போட்டு வதக்கவும். 3 நிமிடங்கள் வதக்கியதும் தூளாக்கிய மஸாலா பொடி, மிளகாய்த்தூள் போடவும்.

அனைத்தும் நன்றாக கலந்து வதங்கியதும் வேக வைத்துளள கறிக்கலவையை சேர்த்து (உப்பு சரி பார்த்துக் கொள்ளவும்) 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து மிளகுத்தூள் போட்டு இறக்கி பரிமாறலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)