சுவையான மொச்சை பயறு மசாலா செய்வது எப்படி?





சுவையான மொச்சை பயறு மசாலா செய்வது எப்படி?

1 minute read
0

பல்வேறு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய மொச்சை கொட்டை ஆன்டி ஆக்ஸிடண்ட் நிறைந்தது. பார்க்க வழுவழுவென்று இந்த கொட்டை இருப்பதால் இது பட்டர் பீன்ஸ் என்றும் அழைக்கப் படுகிறது. 

சுவையான மொச்சை பயறு மசாலா செய்வது எப்படி?
மொச்சை கொட்டையை இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலை அந்த கொட்டையை பிதுக்கி குழம்பு வைப்பது வழக்கம். இது பிதுக்கம் பருப்பு என்று அழைக்கப் படுகிறது. 

இந்த பருப்பை உலர வைத்து நாம் பயன்படுத்தி வருகிறோம். இதில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இந்த இழைகள் வயிற்றில் இருக்கும் நீரை உறிஞ்சு ஜெல்லாக உருவாக செய்கிறது. 

சோப்பு ஒரு சிறப்பு பார்வை !

இதனால் உணவுக்கு பிறகு இரத்தத்தில் சர்க்கரை அளவானது வேகமாக அதிகரிப்பது தடுக்கப் படுகிறது. இரத்த சர்க்கரை குறைவு, நீரிழிவு மற்றும் இன்சுலின் எதிர்ப்பு பிரச்சனை இருப்பவர்களுக்கு மொச்சை நல்ல தேர்வாக இருக்கும். 

மொச்சை பயறு எடை இழப்பு குறித்து ஆய்வுகள் குறைவாக இருந்தாலும் பொதுவாக பருப்பு வகைகள் எடுத்துகொள்வது எடை இழப்பு மற்றும் உடல் கொழுப்பை குறைக்கும் என்று ஆய்வுகள் காட்டுகிறது. 

இதில் இருக்கும் இரும்புச்சத்து சிவப்பு இரத்த அணுக்களின் சுழற்சியை அதிகரிக்க செய்கிறது. உடலில் ஆக்ஸிஜனேற்றத்தை மேம்படுத்தி ஆற்றலை அதிகரிக்க செய்கிறது. 

கலொரிகள் குறைவாகவும் கொழுப்பு இல்லாமலும் இருப்பதல் இது உடல் செயல்பாட்டை சீராக பராமரிக்கவும் செய்கிறது. மொச்சையில் உள்ள பொட்டாசியம் செரிமான செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

நார்ச்சத்து செரிமானம் மற்று இரைப்பை குழாய்களை மேம்படுத்துகிறது. மலச்சிக்கல் இல்லாமல் பாதுகாக்கிறது. பெருங்குடல் வழியாக உணவை நகர்த்த பெரிஸ்டால்டிக் இயக்கத்தை தூண்டுகிறது. 

நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கி மேம்படுத்துகிறது. எடுத்து கொண்ட உணவு செரிமானம் ஆவதை துரிதப்படுத்துகிறது.

மைக்ரோவேவ் அடுப்பு நல்லதா? கெட்டதா?

தேவையானவை :

வெள்ளை மொச்சைப்பயறு - 200 கிராம்

சின்ன வெங்காயம் - 20

பச்சை மிளகாய் - 2

மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி

மஞ்சள்தூள் -  அரை தேக்கரண்டி

திணை இனிப்பு பொங்கல் செய்வது எப்படி?

அரிசி - 1 தேக்கரண்டி

பொரிகடலை - 2 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 ஆர்க்கு

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி         

செய்முறை :

மொச்சை பயறு மசாலா

மொச்சைப் பயறை முன்தின இரவு தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். மறுநாள் வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

பச்சை மிளகாயை மெல்லிய வட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். அரிசி, பொரிகடலையை வறுத்து, தூளாக்கிக் கொள்ளவும்.

வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

மெலன் மிக்ஸ் ஜூஸ் செய்வது எப்படி?

சிறிதளவு தண்ணீர் ஊற்றி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டுக் கிளறவும். ஓரளவு கெட்டியானதும் தூளாக்கிய பொருட்கள் போட்டுக் கிளறி இறக்கி பரிமாறவும்.

Tags:
Random Posts Blogger Widget

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 5, April 2025