சிறு வயதில் தின்பண்டங்கள் என்றாலே நம் கடைக்குச் சென்று முதலில் வாங்கி சாப்பிடுவது எள்ளுருண்டையாகவே இருக்கும்.
நம் முன்னோர்கள் நமக்காக ஏகப்பட்ட நன்மைகள் நமக்கு செய்து விட்டு சென்று இருந்தாலும் அதை எதையும் நாம் கடைப் பிடிக்காமல், இன்று நாம் ஆரோக்கியமற்ற உணவுகளை பின் தொடர்ந்து வருகிறோம்.
நம் நாவிற்கு ருசியை அதிகரிப்பதற்காக நாம் ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக் கொள்கிறோம்.
ஆனால், அதற்கு சற்று இடைவெளி விட்டு ஆரோக்கியமான உணவுகளை நாம் அவ்வப்போது எடுத்துக் கொள்வது நல்லது.
கால்சியம் குறைபாடு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள?
பண்டிகை நாட்களில் வீட்டில் செய்யப்படும் முறுக்கு, சீடை, ஓட்ட வடை, எள்ளுருண்டை போன்ற உணவுகளில் நம்மை அறியாமலேயே எள்ளை கலந்து வருகிறோம்.
எள்ளு சாப்பிடுவதால், புற்றுநோய் வராமல் இருக்கும். அது மட்டுமின்றி, புற்றுநோய் வந்தவருக்கு இது அருமருந்தாக இருப்பதாகவும், இப்போதைய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.
பெண்கள் தினமும் எள் சாப்பிடுவதால், மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கப்படும். மார்பக புற்றுநோய் மட்டுமின்றி, பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் போன்றவற்றையும் இது தடுக்கிறது.
குடலில் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்பை வெளியேற்றி, சுத்தமாக வைக்கிறது. நல்லெண்ணெய்யை பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிக நல்லது.
நல்லெண்ணெய்யில் இருக்கும் மக்னீசியம், ரத்த அழுத்தத்தை குறைக்க, பெரிதும் உதவுகிறது.
கண்களின் கீழ் வரும் வீக்கத்தை தடுக்க எளிய வழிமுறைகள் !
அதிலும், நீரிழிவு நோயாளிகளுக்கு, உயர் ரத்த அழுத்தம் இருந்தால், அவர்கள் நல்லெண்ணெய் சாப்பிடுவது, நல்ல பலனை தரும்.
முக்கியமாக, செரிமான கோளாறு உள்ளோர், தினமும், அரை தேக்கரண்டி எள் சாப்பிடுவது சிறந்தது.
உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நல்லது. உடலில் ஏதேனும் நோய் உள்ளோர், மருத்துவரின் ஆலோசனை பெற்று சாப்பிடுவது நல்லது.
வெள்ளை எள்ளை விட கருப்பு எள்ளே மிக ஆரோக்கியமானது. வெள்ளை எள்ளை விட, கருப்பு எள்ளில் தான் ஊட்டச் சத்துகளும், தாதுக்களும் அதிகம் உள்ளது.
அதிகாலையில் தவிர்க்க வேண்டிய தவறான பழக்கங்கள் !
எள்ளில், இரும்பு சத்து, வைட்டமின், 'ஏ, பி' ஆகியவை நிறைந்துள்ளதால், இளம் நரையை தடுக்கும்.
உங்களுக்கு வேறு ஏதாவது நோய் பாதிப்புகள் இருந்தால் அல்லது வேறு ஏதாவது சிகிச்சைகள் மேற்கொண்டிருந்தால்,
மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகு எள்ளை உட்கொள்ள வேண்டும். அதே போல் கர்ப்பிணி பெண்கள் எள்ளுருண்டையை தவிர்ப்பது நல்லது.