கோடையில் குளிர்பானம் தேவையா.. ஏன் தெரியுமா? இதை படிங்க... !





கோடையில் குளிர்பானம் தேவையா.. ஏன் தெரியுமா? இதை படிங்க... !

0

கோடை காலம் ஆரம்பித்து விட்டாலே வெம்மை தகிக்க ஆரம்பித்து விடும்.  நம் வாழ்வோடு இரண்டற கலந்து விட்டது குளிர்பானங்கள்

கோடையில் குளிர்பானம் தேவையா.. ஏன் தெரியுமா?
குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் வரை இதனை அருந்தாமல் இருக்க முடிவதில்லை. ஒரு தரம் சுவை பழகி போனவர்களுக்கு இன்னும் சொல்லவே வேண்டாம்.

இதனால் வெயிலுக்கு இதமாக நாம் அனைவரும் குளிர் பானங்களை பருக தொடங்கி விடுவோம். 

எல்லோர் வீட்டு குளிர்சாதனப் பெட்டிகளிலும், வண்ண வண்ண குளிர்பான பாட்டில்கள் கண்ணை சிமிட்டிக் கொண்டிருக்கும்.

இந்த வெப்ப காலத்தில் நமக்குக் கூடுதல் தண்ணீர் தான் அவசியத் தேவையே தவிர, குளிர்பானம் அல்ல. 

கார்பன் டை ஆக்ஸைடு

கார்பன் டை ஆக்ஸைடு

நம் உடலில் இருந்து கழிவாக வெளியேறும் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை, நம் ஊரில் களவாடிய தண்ணீரிலேயே கலந்து, அதில் கூடுதல் சர்க்கரை, 

உப்புடன் கூடுதல் சுவை ஊட்டியாக குடிப்பவர்களுக்குத் தெரியாத, அடிமைப்படுத்தும் ரசாயன ‘வஸ்து’ வைக் கலந்து கொடுக்கும் திரவம், இந்தப் புவியையும் நம்மையும் வெப்பப்படுத்துமே தவிர, குளிர்விக்காது. 

கார்பனேற்றம் செய்யப்பட்ட

கார்பனேற்றம் செய்யப்பட்ட

கார்பனேற்றம் செய்யப்பட்ட அந்த குளிர் பானங்களை குடிக்கும் போது உடலும் மனமும் குளிர்வதாக உணர்வோம். ஆனால் அவற்றில் நன்மைகளை விட தீமைகளே அதிகம் உள்ளன.

கார்பனேற்றம் செய்யப்பட்ட சோடா போன்ற பானங்களை குடிப்பதால் உடலில் கெட்ட கொழுப்பு சேர்த்து உடல் பருமன் அதிகரிக்கிறது.

சர்க்கரையின் அளவு

சர்க்கரையின் அளவு

குளிர்பானங்களில் திரவ சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது.  நமது உடலில் உணவு உண்பதால் சர்க்கரை சேரும். 

ஆனால் அதை விட சோடா போன்ற குளிர்பானங்கள் குடிப்பதால் சேரும் சர்க்கரையின் அளவு அதிகமாகிறது.

உடல் எடை

உடல் எடை

இதனால் மற்றவர்களை காட்டிலும் குளிர்பானம் குடிப்பவர்களுக்கு இரண்டு மடங்கு அதிகமாக உடல் எடை அதிகரிக்கிறது. 

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சோமா போன்ற பானங்களை அதிகம் பருகுவதால் குழந்தைகள் 60 சதவீதம் அதிக உடல் பருமனுடன் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

பிரக்டோஸ்

பிரக்டோஸ்

குளிர்பானங்களில் பிரக்டோஸ் எனும் சர்க்கரை அதிக அளவில் சேர்க்கப்படுகிறது. இதனை அதிகமாக உட்கொள்ளும் போது கல்லீரல் வளர்சிதை மாற்றம செய்ய முடியாமல் பிரக்டோசை கொழுப்பாக மாற்றுகிறது. 

இந்த கொழுப்பு கல்லீரலை சுற்றி படிந்து கல்லீரல் கொழுப்பு நோயை உருவாக்குகிறது. 

இதனால் தொப்பை உருவாகி இரண்டாம் வகை நீரழிவு நோய் மற்றும் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

இன்சுலின் செயல்பாடு

இன்சுலின் செயல்பாடு

இன்சுலின் என்ற ஹார்மோன் நமது ரத்த ஓட்டத்திலிருந்து குளுகோசை உயிரணுக்களுக்கு கொண்டு செல்கிறது. 

அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட சோடா போன்ற குளிர்பானங்கள் குடிக்கும் போது இன்சுலின் செயல்பாடு குறைகிறது. 

இதனால் ரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் பிரிக்க கணையம் அதிக அளவில் இன்சுலினை உற்பத்தி செய்கிறது. எனவே வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

மேலும் கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்களில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் எதுவுமில்லை. 

கணையப் புற்றுநோய்

கணையப் புற்றுநோய்

இது மட்டுமல்லாமல் சோடா போன்ற குளிர்பானங்களை அதிக அளவில் குடிக்கும் நபர்களுக்கு மற்றவர்களை காட்டிலும் கணையப் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பு 87 சதவீதம் அதிகம் இருப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. 

இந்த பாதிப்பு ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக உள்ளது. மேலும் பெருங்குடல் மற்றும் கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.

எனவே ஆபத்து தரும் இந்த குளிர்பானங்களை தவிர்த்து விட்டு பழங்கள், இளநீர், பதநீர் போன்றவற்றை பயன்படுத்தி உடல் நலத்தை  மேம்படுத்துவதே சிறந்தது. 

பாரம்பரியம்

பாரம்பரியம்

பருவத்தை ஒட்டி வாழச் சொன்னது நம் பாரம்பர்யம். பொருளை ஒட்டி வாழச் சொல்வது நவீனம். உணவில் அரை டீஸ்பூன் காரம் அதிகமாகி விட்டால் நாம் என்ன ஆட்டம் ஆடுகிறோம்? 

ஆனால், தினமும் சில மில்லியன் ரசாயனங்களை கடலிலும், காற்றிலும், பூமியின் வயிற்றிலும் கொட்டி விட்டு, உடல் சூடு தணிக்க, 

`குற்றாலத்துக்குப் போறேன்; குன்னூருக்குப் போறேன்’ என உல்லாச உலா செல்வது நியாயமா? அங்கேயும் போய் வயிற்றைக் குப்பையாக்க, குளிர்பானம் அருந்துவது தகுமா? 

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)