பொதுவாக உலக அளவில் நம் இந்திய உணவிற்கு என்று ஒரு தனி பெரும்பான்மை மற்றும் அங்கீகாரம் உள்ளது.
குறிப்பாக நாம் நம் பகுதியில் உள்ள கடை வீதிக்கு சென்று திரும்பும் போது பார்த்தால் பெரும்பாலும் சைனீஸ் வகை உணவு கடைகள் இருக்கின்றன.
மக்களும் அதைத்தான் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதற்கு காரணம் சீனர்கள் அதிகம் அந்த உணவை உண்பது கிடையாது என்பதே ஆகும். மாறாக நம் இந்தியர்கள் அவ்வகையான உணவிற்கு மாறுகின்றனர்.
மேகி நூடுல்ஸ் என்பது அனைத்து வயதினராலும் விரும்பப்படும் மலிவான மற்றும் விருப்பமான உணவாகும். இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த கண்டுப்பிடிப்பாகவும் இதை சொல்லலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
அதே போல் நூடுல்ஸ் அட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்களின் விவரங்கள் இன்னமும் உற்சாகத்தை அளிக்கும் வகையில் உள்ளது.
பாஸ்ட்புட் உணவு வகைகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஆனால் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இதை தான் அதிகமாக கொடுத்து வருகின்றனர்.
ஆனால் இது குழந்தைகளின் உடலுக்கு ஆரோக்கியமானது அல்ல. மைதாவால் ஆன நூடுல்ஸில் மோனோசோடியம் க்ளூட்டமேட் என்னும் நம்மை அடிமையாக்கும் சுவையூட்டிகள் இருக்கின்றன.
இத்தகைய நூடுல்சை நாம் உட்கொண்டால் அது உயர் ரத்த அழுத்தம், தலைவலி மற்றும் குமட்டல் போன்றவற்றை உண்டாக்கும்.
நூடுல்சை அடிக்கடி நாம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலை ஏற்படுத்துவதோடு மலக்குடல் புற்று நோய் வர வழிவகுக்கும். மேலும் குழந்தைகளுக்கு மூளையின் சிந்திக்கும் ஆற்றல் மற்றும் வளர்ச்சியை அதிகமாக பாதிக்கும்.
கொழுப்பு, கலோரி மற்றும் சோடியம் அதிகமாகவும் மற்றும் செயற்கை நிறங்கள், செயற்கை சுவையூட்டல் அதிகமாக பயன் படுத்தி உள்ளனர்.
அதற்கு காரணம், இந்த உணவை அதிகமாக உட்கொண்டவர்கள் பலர் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே நம்மால் முடிந்த அளவு நூடுல்சை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. அதற்கு மாற்றாக இந்திய உணவான நம் பாரம்பரிய உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஆரோக்கியம்.