பாதாம் சாப்பிடுவது குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (LDL) எனப்படும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது மற்றும் நல்ல வகையான உயர் அடர்த்தி கொழுப்புப் புரதத்தின் (HDL) அளவை அதிகரிக்க உதவுகிறது.
இதய நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் பாதாமில் உள்ளன. மலமிளக்கிகள், இரத்த அழுத்தம் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் போன்ற மருந்துகளை உட்கொள்பவர்கள் பாதாமை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா?
மேலும் உணவில் பாதாமை சேர்ப்பதற்கு முன்பு உணவியல் நிபுணருடன் கலந்துரையாட வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறிகிறார்கள். தினசரி உணவில் பாதாம் பருப்பை சாப்பிடுவதில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
முதல் முறையாக பாதாம் சாப்பிடும் போது, 2 பாதாம்களை மட்டுமே தண்ணீரில் ஊறவைத்து தோலுரித்து சாப்பிடுவது நல்லது. அதிலிருந்து 5 வேளை சாப்பிட ஆரம்பித்தால் செரிமானத்தில் எந்த பிரச்சனையும் வராது.
வேகன் டயட்டில் இருப்பவர்களுக்கு நல்லதொரு தாவரத்தில் அதாவது பாதாம் பருப்பில் இருந்து கிடைக்கும் பால். பசும்பாலை விட ஐம்பது சதவீதம் கலோரி அளவு குறைவு.
இதில் கொழுப்பு, புரதம், கார்போ ஹைட்ரேட் குறைவாக உள்ளது. அதே சமயம் பாதாம் பாலில் 49% விட்டமின் டி உள்ளது. கால்சியம், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிரம்பியது.
மஞ்சள், பால், மிளகு அருந்துவதால் உண்டாகும் பலன்கள் !
தேவையானவை
பாதாம் பருப்பு - 15
தண்ணீர்
செய்முறை
ஒரு தம்ளர் தண்ணீருக்கு பதினைந்து பாதாம் பருப்புகள் கொண்டு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். நுரை ததும்பும் பாதாம் பால் தயார். அப்படியே குடிக்கலாம் அல்லது பாலினை பயன்படுத்தும் இடங்களில் எல்லாம் பாதாம் பாலை பயன்படுத்தலாம்.
ஓட்ஸ் கஞ்சி, செரியல்களில் மாட்டு பாலுக்கு பதிலாக பாதாம் பாலை பயன்படுத்தலாம். காபி, டீ யில் பாதாம் பாலை சேர்த்து பருகலாம்.
ஐஸ்கிரீம், புட்டிங்களில் பாதாம் பால் சேர்த்து செய்யலாம். பால் சேர்த்து செய்யும் பேக்கிங் உணவுகள் அனைத்திற்கும் பாதாம் பாலை பயன்படுத்தலாம்.
ஸ்மூத்தி, சாலட், சாலட்டிற்க்கு டிரெஸ்ஸிங் ஆகப்பயன்படுத்தலாம்.