சத்தான சுவைமிக்க தவலை அடை செய்வது எப்படி?





சத்தான சுவைமிக்க தவலை அடை செய்வது எப்படி?

0

பச்சரிசி என்பதை நெல்லை அவிக்காமல், நேரடியாக நெல்லில் இருந்து பிரித்தெடுக்கப்படும் அரிசி ஆகும். பச்சை அரிசி ஆனது அதிக கிளைசெமிக் குறியீடு கொண்ட ஒரு உணவு பொருளாக பார்க்கப்படுகிறது. 

சத்தான சுவை மிக்க தவலை அடை

அந்த வகையில் இந்த அரிசி இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து சர்க்கரை நோயாளிகளின் நலனை பாதிக்கிறது. 

பச்சரிசி அதிகம் சாப்பிடுவதால் அதிகரிக்கும் உடல் உஷ்ணம் காரணமாக மலக்குடல் தடிப்பு மற்றும் அழற்சி பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இதன் காரணமாக மலம் கழிக்கலையில் மலத்துடன் இரத்தம் வெளிப்படுகிறது. 

பச்சரிசியில் உமி நீக்கப்படும் போது, அதனுடனே வைட்டமின் பி மற்றும் நார்சத்துக்கள் நீக்கப்பட்டு விடுகிறது. இதன் விளைவாக இந்த பச்சரியை தினம் சாப்பிடும் நபர்கள் எடை இழப்பு மற்றும் உடல் மெலிவு பிரச்சனையை எதிர் கொள்கின்றனர்.

உடல் மெலிவுக்கு காரணமாக இருக்கும் இந்த அரிசி, உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவையும் அதிகரிக்கிறது. 

இதன் விளைவாக இரத்த நாளங்களில் உண்டாகும் அடைப்பு, சீரான இரத்த ஓட்டத்தை பாதித்து இரத்த அழுத்த பிரச்சனைக்கு வழிவகுக்கிறது. 

உணவில் அதிக பச்சை அரிசியை உட்கொள்பவர்களுக்கு வளர்சிதை மாற்ற நோய்க்குறி மற்றும் அது தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் பல தெரிவிக்கின்றன.

அரிசி, பருப்பு வகைகள், சிறு தானியங்கள் அகியவற்றை பல விதமான சேர்க்கைகளில் ஊற வைத்து, மிளகாய், உப்பு சேர்த்து அரைத்துத் தோசையைப் போல வட்டமாகச் சுட்டு எடுக்கும் உணவுப் பண்டம் அடை..

கத்தரிக்காய், வாழைப்பூ, தேங்காய், வெங்காயம் ஆகியவற்றையும் மிகப்பொடியாக அரிந்து, அடையின் மீதுத்தூவிச் சமைப்பர். சம்பிரதாயமாக வெல்லம் அடையுடன் தொட்டுக் கொள்ளப்பட்டது. 

தற்காலத்தில் பலவிதமான சட்டினிகள் அடையுடன் தொட்டுக் கொள்ள அறிமுகப் படுத்தப் பட்டுள்ளன.

தேவையான பொருட்கள் :

பச்சரிசி - ஒரு கப்,

மிளகு - ஒரு டீஸ்பூன்,

சீரகம் - அரை டீஸ்பூன்,

தேங்காய் துருவல் - கால் கப்,

கடுகு - கால் டீஸ்பூன்,

காய்ந்த மிளகாய் - 2,

உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்,

பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,

எண்ணெய்,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

பச்சரிசியுடன் மிளகு, சீரகம் சேர்த்து ரவை போல பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், காய்ந்த மிளகாய் தாளித்து, அதில் தேங்காய் துருவலை சேர்க்கவும்.

அதனை லேசாக வதக்கி, உப்பு, தண்ணீர் சேர்க்கவும். அது கொதிக்க ஆரம்பிக்கும் போது பொடித்த ரவையை மெதுவாகப் போட்டுக் கிளறி, கெட்டியாக வரும் போது இறக்கவும்.

ஆறியதும், சிறுசிறு அடைகளாகத் தட்டி தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். சத்தான சுவையான தவலை அடை ரெடி.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)