பூ விழுந்த தேங்காயை நாம் பார்த்திருப்போம் ஆனால் அதை சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
அதை விட மிக அதிக அளவிலான ஊட்டச் சத்துக்கள் இந்த தேங்காய் பூவில் தான் இருக்கிறது.இளநீரில் இருக்கும் சதைப் பற்றினைப் போல மிகவும் ருசி கொண்டது.
உண்மையில் தேங்காய் பூவின் பலனைப் பற்றி தெரிந்து கொண்டால் தேங்காய் பூவை தேடி தேடி போய் வாங்கி சாப்பிடுவீர்கள். உடைக்கும் போது தேங்காயில் பூ இருந்தால் அதனை நல்ல சகுனமாக சிலர் கருதுவார்கள்.
அறிவியல் பூர்வமாக பார்த்தால் தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சி ஆகும். தேங்காய் பூ நன்மைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
நன்மைகள்:
தேங்காய் பூவில் மிக அதிக ஊட்டச் சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இரு மடங்கு அதிகரிக்கும். பருவ கால தொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை தேங்காய் பூ கொடுக்கும்.
உங்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருந்தால் தேங்காய் பூ சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும். இதிலுள்ள மினரல், விட்டமின் உங்கள் குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மலச்சிக்கலை குனமாக்குகிறது.
உடலுக்கு தேவையான விட்டமின்கள் அதிக அளவு கிடைக்கும். தேங்காய் பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்கும். மன அழுத்தம் அல்லது வேலைப்பளு அதிகம் இருப்பவர்கள் தேங்காய் பூவை சாப்பிட்டால்
முழு எனர்ஜி கிடைப்பதோடு நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும் அளவிற்கு மேஜிக் தேங்காய் பூவில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? ட்ரை பண்ணிப் பாருங்களேன்.
தேங்காய் பூ ரத்தத்தில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்கும். உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும். தேங்காய் பூவில் முக்கியமான அம்சம் முதுமையை தடுக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது.
இதை சாப்பிட்டு வந்தால் சூரியனால் ஏற்படும் சரும பாதிப்புகள் நம்மை நெருங்காது. இப்படி பல நன்மைகள் இதனுள் அடங்கியுள்ளது. எனவே இதனை கட்டாயம் சாப்பிடுங்கள்.