கிராம்பை மென்று சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் !





கிராம்பை மென்று சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் !

1

இந்திய சமையலைப் பொருத்தவரை பட்டை, கிராம்பு, ஏலக்காய் போன்ற வாசனை பொருட்கள் இல்லாமல் செய்ய மாட்டோம். பிரியாணிலிருந்து பாயாசம் வரை இந்த வாசனை பொருட்கள் மிகவும் முக்கியமானது.

கிராம்பை மென்று சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் !

இந்த மசாலா பொருட்கள் உணவில் வாசனைக்காக மட்டும் சேர்க்கப் படுவதில்லை. அதையும் தாண்டி இதில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. பிரியாணி முதல் நாம் பயன்படுத்தும் பற்பசை வரை கிராம்பு பயன்படுகிறது. 

இந்த தம்மா துண்டு கிராம்பில் நீங்கள் எதிர் பாராத நன்மைகள் இருக்கின்றன. கிராம்பு ஆயுர்வேதத்தில் அவற்றின் மருத்துவ பண்புகளுக்காக பல ஆண்டுகளாக பயன்படுத்தப் படுகிறது. 

கிராம்பு ஒரு பூவின் பொட்டு இவை நாம் பயன்படுத்தும் பற்பசைகளில், சோப்புகள், அழகு சாதனப் பொருட்கள், நறுமணப் பொருட்கள் என்று எல்லாத் துறைகளிலும் பயன்படுகிறது. 

இது ஒரு உணவின் சுவையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதன் ஊட்டச்சத்து மதிப்பையும் அதிகரிக்கிறது. 

அதிலும் இரண்டு கிராம்புகளை மென்று சாப்பிடுவதும், படுக்கைக்குச் செல்வதற்கு முன் ஒரு கிளாஸ் வெது வெதுப்பான நீரைக் குடிப்பதும் பல சிக்கல்களிலிருந்து விடுபட உதவும். 

தற்போது அவை என்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோம்.

பூச்சி விரட்டி

கிராம்பை மென்று சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் !

கிராம்பு எண்ணெய் ஒரு சிறந்த பூச்சி விரட்டியாக செயல்படுகிறது. குறிப்பாக எறும்பு மற்றும் அந்துப் பூச்சிகளை விரட்டுகிறது. 

எனவே உங்கள் அலமாரிகள் போன்றவற்றில் இந்த பூச்சிகளின் தொந்தரவு ஏற்பட்டால் சில கிராம்பு களை ஒரு காட்டன் துணியில் கட்டி போட்டு விட்டால் போதும் பூச்சிகள் எல்லாம் ஓடி விடும்.

ஜீரண சக்தி

கிராம்பை மென்று சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் !

கிராம்பு ஜீரண என்ஜைம்களை அதிகரித்து சீரண சக்தியை தூண்டுகிறது. வாய்வு, நெஞ்செரிச்சல், குமட்டல், எதுக்களித்தல் போன்ற பிரச்சினைகளையும் குறைக்கிறது. 

இரவில் கிராம்பை உட்கொள்வது மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, அமிலத் தன்மை போன்ற வயிற்றுப் பிரச்சினைகளை போக்க உதவும். 

(nextPage)

கேன்சர் செல்கள்

கிராம்பை மென்று சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் !

கிராம்பில் உள்ள கூட்டுப் பொருளான பினைல் புரப்போனைடு பொருட்கள் ஆன்டி மியூட்டோஜெனிக் தன்மையை கொண்டுள்ளன. இது செல்களின் மரபணு பிறழ்வுகளை தடுத்து கேன்சர் செல்கள் உருவாகுவதை தடுக்கிறது. 

நுரையீரல் புற்று நோயை ஆரம்ப காலத்திலேயே சரி செய்ய கிராம்பு பயன்படுகிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்லீரலில் கொழுப்பு

கிராம்பை மென்று சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் !

கிராம்பில் அதிக ஆன்டி ஆக்ஸிடன்கள் இருப்பதால் கல்லீரலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற மாற்றத்தை குறைக்கிறது. 

இது மெட்டா பாலிக் வேலையை அதிகரித்து கல்லீரலில் கொழுப்புகள் தங்குவதை அதிகரிக்கிறது. டயாபெட்டீஸ் நோயை கட்டுப்பாட்டில் வைக்கிறது. 

இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைத்து இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகாமல் தடுக்கிறது. இதனால் டயாபெட்டீஸ் நோயாளிகள் கிராம்பை அளவோடு உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

தலைவலி

கிராம்பை மென்று சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் !

தலைவலி ஏற்பட்டால் கிராம்பை பொடியாக்கி பேஸ்ட் செய்து அதனுடன் ராக் சால்ட் சேர்த்து பாலுடன் கலந்து குடித்தால் போதும், உடனடியாக தலைவலி தீரும். 

தொண்டை புண் மற்றும் வலியைப் போக்க கிராம்பு உங்களுக்கு உதவும். கிராம்புகளை வெதுவெதுப்பான நீரில் உட்கொள்வது பல்வலி நீக்க உதவும். உங்கள் பற்களில் ஒரு கிராம்பையும் வைக்கலாம், நிவாரணம் பெற உங்களுக்கு வலி இருக்கும் இடத்தில்.

(nextPage)

ஆன்டி பாக்டீரியல் தன்மை

கிராம்பை மென்று சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் !

கிராம்பு மற்றும் அதன் எண்ணெய் பாக்டீரியா கிருமிகளை எதிர்த்து போராட கூடியது. காலாராவை ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்குமா என்பது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

கிராம்புகளை தினமும் உட்கொள்வது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

வாய் மற்றும் பற்கள் ஆரோக்கியம்

கிராம்பை மென்று சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் !

இது ஒரு வலி நிவாணியாகவும் ஆன்டி செப்டிக் மருந்தாகவும் செயல்படுகிறது. ஈறு அழற்சி மற்றும் பீரியண்டோன்டிடிஸ் போன்ற பாதிப்புகளை குணப்படுத்த கிராம்பு உதவுகிறது. 

பல்வலி இருக்கும் போது இந்த கிராம்பை அந்த இடத்தில் அழுத்தி வைத்தால் வலி குறையும். கிராம்பு எண்ணெய் யும் பல் வலி போக்க சிறந்தது.

வாய் துர்நாற்றம் இருப்பவர்கள் கிராம்பை எடுத்துக் கொள்ளலாம். இதன் நறுமணம் வாய் துர்நாற்றத்தை போக்குவதால் டூத்பேஸ்ட் போன்றவற்றில் பயன்படுகிறது. 

இதிலுள்ள யூஜெனோல் அழற்சியால் ஏற்படும் வீக்கம் போன்ற எடிமா பாதிப்புகளை போக்குகின்றன. இது ஒரு வலி நிவாரணி மாதிரி செயல்படுகிறது.

கை, கால்கள் நடுக்கம்

கை, கால்கள் நடுக்கம்
கை, கால்கள் நடுங்கும் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் படுக்கைக்கு முன் 1-2 கிராம்புகளை உட்கொண்டு பிரச்சினை யிலிருந்து நிவாரணம் பெறலாம். 

இருமல், சளி, வைரஸ் தொற்று, மூச்சுக்குழாய் அழற்சி, சைனஸ் மற்றும் ஆஸ்துமா போன்ற வற்றிலிருந்து விடுபட கிராம்பு உதவும்.

Tags:

Post a Comment

1Comments

  1. இது உண்மையா? யாராவது சொல்லுங்க ப்லீச்

    ReplyDelete
Post a Comment