கொண்டைக்கடலையில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று வெள்ளை கொண்டைக் கடலை, மற்றொன்று நமக்கெல்லாம் நன்கு தெரிந்த கறுப்புக் கொண்டைக்கடலை.
கறுப்புக் கொண்டைக்கடலை உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் நாடும் இந்தியா. கறுப்புக் கொண்டைக்கடலை உள்நாட்டு வகையாகத் தற்போது கருதப்பட்டாலும், இது தென்கிழக்கு துருக்கியில் இருந்து வந்தது தான்.
வெள்ளை கொண்டைக்கடலை இந்தியாவுக்கு வரும் முன்னரே, கறுப்பான கொண்டைக்கடலை நம் மண்ணைத் தொட்டு விட்டது.
இப்போது இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்தில் பெருமளவு விளைவிக்கப் படுகிறது. இந்தியாவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் அதே நேரம், உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒன்று.
பழுப்பும் கறுப்பும் கலந்த நிறத்தில் சிறியதாக இருந்தாலும், புரதம் நிரம்பியது. அதன் எல்லா வளர்ச்சி நிலைகளிலும் உண்ணப்படுகிறது.
தசை உறுதி
கறுப்புக் கொண்டைக்கடலையின் காய் பச்சையாக இருக்கும் போதே வேக வைக்கப்பட்டுச் சாலடிலும், வடஇந்தியச் சாட் நொறுவைகளிலும் சேர்க்கப்படுகிறது.
முதிர்ந்த கறுப்புக் கொண்டைக்கடலையை ஊற வைத்த பின்னரே பயன்படுத்த வேண்டும். பஸ்கி எடுப்பவர்கள் பயிற்சிக்கு முன் ஊற வைத்த கொண்டைக்கடலையை சாப்பிடுவது வழக்கம். தசை உறுதிக்கு நல்லது.
அமினோ அமிலங்கள்
கந்தகத்தைக் கொண்ட அமினோ அமிலங்களைத் தவிர அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்கள் கறுப்பு கொண்டைக்கடலை சுண்டலில் குறிப்பிடத்தக்க அளவு உள்ளது.
இதை தினசரி உணவில் சேர்ப்பதன் மூலம் உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்கள் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
ஊட்டச்சத்து
நார்ச்சத்து, ஒலிகோசாக்கரைடுகள் (Oligosaccharides), குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற எளிய சர்க்கரைகளைத் தொடர்ந்து ஸ்டார்ச் முக்கிய சேமிப்பு கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது.
முக்கியமான நிறைவுறா கொழுப்பு அமிலங்களான லினோலிக் மற்றும் ஒலிக் அமிலங்கள் நிறைந்துள்ளது.
முக்கியமான வைட்டமின்களான ரைபோஃப்ளேவின் (Riboflavin), நியாசின் (Niacin), தியாமின் (Thiamin), ஃபோலேட்(Folate), வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற பல நல்ல மூலாதாரங்கள் கறுப்பு கொண்டைக் கடலையில் இருக்கின்றன.
மாரடைப்பு
ஏனெனில், அவை அதிக கலோரிகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் இல்லாதவை. கறுப்பு கொண்டைக் கடலையில் ஃபோலிக் அமிலத்துக்கு அடிப்படையான போலேட்டும் மக்னீ சியமும் போதுமான அளவில் உள்ளன.
இது மாரடைப்பு காரணியான ஹோமோசிஸ்டினை கட்டுக்குள் வைத்து, அந்நோய் வராமல் பாதுகாக்கும் உன்னத உணவு.
கர்ப்பிணிகளுக்கு
கர்ப்பிணிகளுக்கு அவசியத் தேவையான ஃபோலிக் அமிலம், ஆன்டி ஆக்சிடண்ட் தன்மை கொண்ட சாப்போனின் போன்ற ஃபைட்டோ வேதிப்பொருட்கள் அதிகமுள்ளன.
இதன் சாறு இரும்புச்சத்து நிரம்பியது. இரும்புச் சத்து குறைபாடு, ரத்தசோகையைத் தடுக்க உதவுகிறது.
இதில் இரும்புச்சத்து, சோடியம், செலெனியம், சிறிதளவு துத்தநாகம், மாங்கனீசு, தாமிரம் போன்ற கனிமச்சத்துகள் உள்ளன. அளவுடன் சாப்பிட்டால் செரிமானக் கோளாறு, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று மந்தம் தீர்க்க உதவும்.
பெருங்குடல் புற்றுநோய்
ஆரோக்கியமான பெரியவர்களில் ஒரு நாளைக்கு 200 கிராம் அளவு கொண்டைக்கடலை உட்கொள்வதிலிருந்து இந்த ப்யூட்ரேட் தயாரிக்கப் படுகிறது .
உடல் உறுப்புகளில், உயிரணு பெருக்கத்தை அடக்குவதற்கும், இறந்த செல்கள் படிவதைத் தடுப்பதற்கும் ப்யூட்ரேட் உதவுவதாக பரவலாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இதன் மூலம், பெருங்குடல் புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
மலச்சிக்கல்
இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதால் செரிமான கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. நார்ச்சத்து, குடலின் செயல்பாட்டை எளிதாக்குவதன் மூலம் மலச்சிக்கல் அபாயத்தை குறைக்கிறது.
மலச்சிக்கலைக் குணப்படுத்த, கறுப்பு கொண்டைக் கடலையை இரவில் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் தண்ணீரை வடிகட்டி, அதில், இஞ்சி தூள் மற்றும் சீரகத்தை தூவி குடிக்கலாம்.
குளுகோஸ் பயன்பாட்டை மேம்படுத்தக் கூடியது என்பதால் நீரிழிவு நோயாளிகள் இதைத் தொடர்ச்சியாகச் சாப்பிடலாம்.
மாங்கனீசு குறைபாடு
முளைவிட்ட கறுப்பு கொண்டைக்கடலை துத்தநாகத்தின் ஆதாரமாகும். இது கொரோனா நோய்க்கெதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது.
சிறுநீர் அடைப்பை சரி செய்யும்
முதிராத கொண்டைக்கடலையில் சிறிது நீர் விட்டு அருந்த, சீதக்கழிச்சல் உடனடியாகக் கட்டுப்படும்.
சிறுநீர்ப்பெருக்கி செய்கை இருப்பதால், சிறுநீர் அடைப்பை சரி செய்யும் தன்மை, கறுப்புக் கொண்டைக்கடலை சுடுநீருக்கு உண்டு. இளம் கொண்டைக்கடலை விதைகளுக்குக் காமம் பெருக்கும் செய்கை உண்டு.
நீரிழிவு நோய்
இது இன்சுலின் எதிர்ப்புக்கு பங்களிக்கிறது. இதனால் டைப் -2 நீரிழிவு நோய் வரும் அபாயத்தை குறைக்கிறது.
ஹீமோகுளோபின்
இரும்புச்சத்து நிறைந்த மூலமான, கறுப்பு கொண்டைக்கடலை, ரத்த சோகையைத் தடுக்கவும், உடனடி ஆற்றல் அளவை அதிகரிக்கும்.
இதனால், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கும் வளர்ந்து வரும் குழந்தைகளுக்கும் குறிப்பாக நன்மை பயக்கும். ஹீமோகுளோபின் உற்பத்தியில், இரும்புச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது.
ஹீமோகுளோபின் தான் நுரையீரலில் இருந்து அனைத்து உடல் உயிரணுக்களுக்கும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல உதவுகிறது.
கலோரி
கொண்டைக்கடலை பயன்பாடுகள்
தெற்காசியாவில் பல்வேறு சுவையான உணவு வகைகளில், கறுப்புக் கொண்டைக்கடலை பயன்படுத்தப் படுகிறது. இதை வறுத்துப் பொடி செய்து, நீர் சேர்த்துக் கொதிக்க வைத்துக் காப்பியைப் போலப் பயன்படுத்தலாம்.
கொண்டைக்கடலைச் செடியின் மீது ஒரு வெள்ளைத் துணியை இட்டு, அதன் மீது படியும் பனி நீரைப் பிழிந்து சேகரிப்பது ‘கடலைப் புளிப்பு’ என்று அழைக்கப்படுகிறது.
செரியாமை, வாந்தி போன்ற நோய்களுக்கு இந்தப் புளிப்பு நீர் மருந்தாகப் பயன்படுகிறது.
எட்டு வாரங்களுக்கு தொடர்ந்து கொண்டைக்கடலை எடுத்துக் கொண்டவர்களின் அதிக எடை மற்றும் பருமனான நபர்களின் சிஸ்டாலிக் ரத்த அழுத்தம் குறைந்ததையும் குறிப்பிடுகிறது.