வயிறு நிரம்ப வகை வகையாகச் சாப்பிடுவதை விட, அரை மூடி தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டுப் பாருங்கள், புத்துணர்ச்சியை அனுபவிப்பீர்கள்.
முற்றாத தேங்காய்களில் உடலுக்குத் தேவையான புரோட்டீனும் குளுகோஸும் அதிகம்.
பெரிய நிறுவனங்களில் பணி புரிபவர்கள் கூட அலுவலங்களில் காபி, டீ போன்றவற்றைத் தவிர்த்து விட்டு, தற்போது இளநீர் பருகத் தொடங்கி யிருப்பது ஆச்சரியப் படத்தக்க உண்மை.
தமிழ்நாட்டில் இட்லி, தோசைக்கு சாம்பாருடன் தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னியும், ஆப்பத்துக்குத் தேங்காய் பாலையும் தேடாதவர்கள் இருக்கிறார்களா என்ன?
தேவையானவை:
இட்லி அரிசி – 250 கிராம்,
தேங்காய் துருவல் – ஒரு கப்,
உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன் (10 நிமிடம் ஊற வைத்து வடிகட்டவும்),
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
வறுத்த வேர்க்கடலை, கறிவேப்பிலை – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.
தேங்காய் எண்ணெய் – 4 டீஸ்பூன்,
கர்ப்பத்தில் இருக்கும் சிசுவின் மூளை வளர்ச்சிக்கு மீன் உணவுகள் !
தாளிக்க:
கடுகு – ஒரு டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன்.
காய்ந்த மிளகாய் – ஒன்று,
செய்முறை:
இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து, சிறிது உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும்.
வாணலியில் நல்லெண்ணெயை விட்டு, கரைத்து வைத்து இருக்கும் மாவை ஊற்றி, கெட்டியாகக் கிளறவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). மாவு வெந்ததும் நன்கு பிசையவும்.
மாவை சிறிய பந்து அளவு உருண்டைகளாக உருட்டி அகலமான பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, உருண்டைகளைப் போடவும் (உருண்டைகள் மூழ்கும் அளவு தண்ணீர் விடவும்).
உருண்டைகள் வெந்ததும், இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து கொள்ளவும் (உருண்டைகளை சரிபாதியாக ‘கட்’ செய்து பார்த்தால், மாவு வெள்ளையாக தெரியக்கூடாது.
வீட்டில் ஆண்கள் ஓதுக்கப் படுகிறார்களா?
இதனுடன் பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, இடியாப்பத்துடன் கலந்து, வறுத்த வேர்க்கடலை, கறிவேப்பிலை சேர்க்கவும்.
குறிப்பு:
முந்திரி, பொட்டுக்கடலை சேர்த்தும் இதை தயாரிக்கலாம்.