மலம் கழிக்கும் செயல்முறையில், மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகிய இரண்டும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
உடல் செயல்பாடுகளின் பற்றாக்குறை காரணமாக கூட மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், மலச்சிக்கல் இருக்கக்கூடிய இரண்டு நோயாளிகளுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் அல்லது காரணங்கள் இருப்பதில்லை.
இஸ்லாமியர்களின் இந்த நோன்பு காலத்தில் பகல் வேளையில் உணவு, நீர் எதுவும் உட்கொள்ளாமல் இருப்பதால், ஏராளமான உடல்நல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
இதற்கு திடீரென்று உணவுப் பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றம் தான் காரணம். குறிப்பாக ரமலான் நோன்பு காலத்தில் சிலருக்கு மலச்சிக்கல் ஏற்படும்.
ஏனெனில் குடிக்கும் நீரின் அளவு மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகளை எடுக்கும் அளவு குறைவதால், குடலியக்கத்தில் இடையூறு ஏற்பட்டு, மலச்சிக்கலை சந்திக்கக்கூடும்.
உங்களுக்கு மலச்சிக்கல் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள, ஒரு சில அறிகுறிகள் உள்ளன.
அவை, மலம் கழிக்கும் பொழுது சிரமப்படுவது, கடினத் துகள்கள் போன்ற மலம், வாரத்திற்கு மூன்று முறை அல்லது அதற்கும் குறைவாக மலம் கழிப்பது,
நீங்கள் முழுமையாக மலம் கழிக்கவில்லை என்ற ஓரு உணர்வு, மற்றும் வயிறு உப்பசம் போன்றவை. நோன்பு காலத்தில் மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உங்களுக்கு உதவும்
சிறந்த நார்ச்சத்து நிறைந்த உணவில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து கலந்திருப்பதால் தினமும் சாப்பிடுவது மக்களின் மலம் கழிக்கும் செயல்முறையை எளிமையாக்குகிறது.
காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள்
காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதலும் பட்டாயி, பீன்ஸ், கொண்டைக்கடலை போன்றவற்றை நோன்பு மாதத்தில் அதிகம் சேர்த்து வந்தால், அதில் உள்ள நார்ச்சத்துக்களால், மலச்சிக்கல் ஏற்படுவது குறையும்.
காபி எவ்வாறு உதவுகிறது?
கேஃபின் / காஃபின் என்பது ஒரு மலமிளக்கி ஆகும். எனவே, இது உங்கள் மலம் கழிக்கும் செயல்முறையை எளிதாக்கும். காபியைப் போலவே, சில டீ அல்லது தேநீரிலும் கேஃபின்/காஃபின் உள்ளது.
சில வகையான தேநீரில், மூலிகைகள் அல்லது கலவைகள் உள்ளன; மேலும் அவை மலமிளக்கிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
பழங்கள்
பழங்களில் ஆப்பிள், வாழைப்பழம், பப்பாளி, அத்திப்பழம், வெண்ணெய் பழம் அல்லது அவகேடோ போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
ஆகவே இப்பழங்களை அதிகாலையில் நோன்பு ஆரம்பிக்கும் முன் உட்கொள்வது, உடலை நீர்ச்சத்துடனும், ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ளும்.
தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள்
ரமலான் நோன்பு மேற்கொள்ளும் காலத்தில் சேர்த்துக் கொள்வது நல்லது. இவை மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.
கொழுப்பு குறைவான உணவுப் பொருட்கள்
தோல் நீக்கப்பட்ட சிக்கன், மீன் போன்றவற்றில் கொழுப்புக்கள் குறைவாகவும், அதே சமயம் புரோட்டீன் அதிகமாகவும் உள்ளது.
இவற்றை நோன்பு காலத்தில் உட்கொண்டு வந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமைப் பெறும்.
மேலும் நோன்பு ஆரம்பிக்கும் முன் மற்றும் முடிந்த பின் போதுமான அளவு நீரைப் பருக வேண்டும். இச்செயலால் மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.
புரோபயோடிக்ஸ்
ஜூஸ் மற்றும் தண்ணீர்
அதிலும் இளநீர், தர்பூசணி ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், அன்னாசி ஜூஸ், திராட்சை ஜூஸ் போன்றவற்றை பருகுவது இன்னும் நல்லது.
ரமலான் நோன்பு காலத்தில் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் பேரிச்சம்பழத்தை சாப்பிட்டு நோன்பை முடிப்பார்கள்.
ஏனெனில் பேரிச்சம் பழத்தில் வளமான அளவில் நார்ச்சத்து, கார்போ ஹைட்ரேட், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் சர்க்கரை போன்றவை உள்ளது.
ஆகவே இவற்றை உட்கொண்டால், மலச்சிக்கல் தடுக்கப்படுவதோடு, இரத்த சர்க்கரை அளவு சீராக பராமரிக்கப்பட்டு, மயக்கம் அல்லது தலைச்சுற்றல் ஏற்படுவது தடுக்கப்படும்.