மிதமான வெப்ப மண்டலப் பகுதிகளி்ல் பலா அதிகமாக விளையும். இந்த பலா பிஞ்சைப் பறித்து அதை தோல் சீவி, மற்ற காய்கறிகளைச் சமைப்பது போல கூட்டு செய்து சாப்பிடுவார்கள்.
வேசான துவர்ப்புடன் இருக்கும் பலா பிஞ்சு ஏராளமான மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக கேன்சர் போன்ற நோய்களை எதிர்த்துப் போராடும் தன்மையைக் கொண்டிருக்கிறது.
பலா பிஞ்சை தோல் சீவி விட்டு வெறும் உப்பு, மஞ்சள், சீரகம் மட்டும் சேர்த்து வேக வைத்த நீரை குடித்து உணவுக்கு முன்பாக சூப் போல குடித்து வந்தால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.
கொசு விரட்டி மற்றும் ரூம் ஸ்பிரே அலர்ஜி
குறிப்பாக, வாயுத் தொல்லை மற்றும் செரிமானக் கோளாறினால் ஏற்படும் வயிற்று வலி ஆகியவற்றைத் தீர்க்க உதவும்.நம்முடைய உடலில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்கள் இருக்கும்.
அவற்றின் அளவைப் பொருத்துதான் யாருடைய உடல்வாகு எப்படி என்று ஆயுர்வேத, சித்த மருத்துவத்தில் மருந்தே கொடுப்பார்கள். இந்த தோஷங்கள் சரியான அளவில் இருந்தால் நல்லது.
இதன் சமநிலை கெடும் போது தான் உடலில் ஏராளமான நோய்கள் உருவாகின்றன. இந்த பலா பிஞ்சை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் அந்த தோஷங்கள் மூன்றும் சமநிலையில் இருக்க உதவும்.
அப்பன்டிசைடிஸ் என்பது கல் அடைப்பது அல்ல !
தேவையானவை :
பலாக்காய் - 500 கிராம்
பூண்டு - 6 பல்
இஞ்சி - 1 அங்குலம்
கரம் மஸாலாத்தூள் - 3 சிட்டிகை
தனியாத்தூள் - 1 தேக்கரண்டி
புதினா இலை - 1 தேக்கரண்டி
கொத்த மல்லி இலை - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 3 சிட்டிகை
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
தேங்காய்த் துறுவல் - 2 மேஜைக் கரண்டி
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 1 மேஜைக் கரண்டி
செய்முறை :
இஞ்சி, பூண்டை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளித்து இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும்.
அதன் பின் வேக வைத்த பலாக்காய் துண்டுகளைப் போட்டு, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மஸாலாத்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் இவற்றைப் போட்டுக் கிளறவும்.
சொரியாசிஸ் - தவிர்க்க வேண்டியவை !
5 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து, அதன்பின் கொத்தமல்லி இலை, தேங்காய்த் துறுவல், புதினா இலை போட்டு இறக்கி பரிமாறவும்.