உடைத்த கடலை பருப்பில் உள்ள எளிதில் ஜீரணம் ஆக கூடிய புரதசத்து மற்றும் நார்ச்சத்து நாம் சாப்பிடும் உணவு நன்கு செரிமானமாக உதவுகிறது.
புரதமானது செல்கள், திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது. எனவே குழந்தைகள் அதிகம் உடைத்த கடலை பருப்புகளை சாப்பிடுவதால் சிறப்பான உடல் வளர்ச்சியினை பெறலாம்.
கடலை பருப்புகளை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தலைமுடி உதிர்தல் குறைபாடு நீங்குகிறது. மிக இளம் வயதிலேயே தலை முடி நரைத்தல் போன்ற பிரச்சனையும் போக்குகிறது.
பளபள, வழவழ, கொளகொள என தித்திக்கும் அல்வா என்றாலே, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள். இதன்படி, தற்போது அல்வா செய்யும் முறை எப்படி என பார்க்கலாம்.
அதில் கோதுமையினால் செய்யப்படும் அல்வா பிரபலமானது. தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருட்டுக் கடை அல்வா மிகவும் பிரபலம்.
கோதுமையினால் செய்யப்படும் அல்வா தவிர முந்திாி, கேரட், பால், பீட்ரூட் மற்றும் தால் போன்றவற்றால் செய்யப்படும் அல்வாக்களும் உண்டு.
அதிலும் இந்த தால் அல்வா குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.இதை செய்து குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்.
ஆண்டி ஏஜிங் ட்ரிங்க் குடிப்பதால் சரும அழகு கூடும் !
தேவையானவை:
நெய் - அரை கிண்ணம்
சர்க்கரை - ஒரு கிண்ணம்
சோம்புத்தூள் - கால் தேக்கரண்டி
முந்திரி - 10
செய்முறை:
பருப்புகளை ஒன்றாகப் போட்டு, 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைக்கவும். வாணலியில் நெய் ஊற்றி, முந்திரியை வறுத்து எடுக்கவும்.
அதே நெய்யில், அரைத்த விழுதைச் சேர்த்து, பச்சை வாசனைப் போகும் வரை வதக்கவும். பின்னர், சர்க்கரையைச் சேர்த்து நன்றாக கிளறவும்.
சுவையான கேப்பை இனிப்பு பணியாரம் செய்வது எப்படி?
கலவையானது பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது சோம்புத் தூளைக் கலந்து, பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றவும். வறுத்த முந்திரியால் அலங்கரித்து பின் பரிமாறவும்.