குழந்தைகளுக்கு பிடித்த மைக்ரோவேவ் மைசூர் பாக் செய்வது எப்படி?





குழந்தைகளுக்கு பிடித்த மைக்ரோவேவ் மைசூர் பாக் செய்வது எப்படி?

0

மைசூர் பாக் மிகவும் பிரபலமான இனிப்பு வகைகளில் ஒன்று. கர்நாடகாவில் உள்ள மைசூரில் இருந்து வந்ததாகும். இதை வீட்டில் உள்ள 3 பொருட்களைக் கொண்டு செய்து விடலாம். 

குழந்தைகளுக்கு பிடித்த மைக்ரோவேவ் மைசூர் பாக்

அடுப்பில் வைத்து செய்வதற்கு நன்றாக செய்து பழகியவர்கள் மட்டுமே செய்ய முடியும். ஏனெனில் கிளறும் போது மாவு தெளிக்கும்.

மைக்ரோவேவ் மைசூர் பாக் அவசரத்திற்கும், எதிர்பாராத திடீர் விருந்தினர் வரும் போது உடனடியாக செய்வதற்கும் ஏற்றது. 

சூப்பரான பிடேன் காபி தயார் செய்வது எப்படி?

இதற்கு தேவையான பொருட்கள் தயாராக இருந்தால் 3 நிமிடத்தில் செய்து விடலாம். பண்டிகை நாட்களில் சுலபமாக செய்யலாம். யாருக்கும் நீங்கள் 10 நிமிடத்திற்குள்ளாக இதை செய்திருப்பீர்கள் என்று கண்டுபிடிக்க முடியாது. 

10 நிமிடங்கள் என்பது தயாரிப்பு, மற்றும் சமைக்கும் நேரம் இரண்டுக்கும் சேர்த்து மொத்தமாக ஆகக்கூடிய நேரம். தயாரிப்பு நேரம் 3 நிமிடங்கள் மட்டுமே. 

இந்த லாக்டவுன் நேரத்தில் இதை செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்  இப்போது செய்முறையை பார்ப்போம்.

தேவையானவை :

கடலை மாவு - 1/2 கப (1 கப் = 235 மில்லி கிராம்)

பொடித்த சர்க்கரை - 1 கப்

நெய் - ½ கப்

பால்/ தண்ணீர் – 2 தேக்கரண்டி

செய்முறை :

¾ கப் சர்க்கரையை பொடித்துக் கொள்ளவும். நெய்யை உருக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு தட்டு அல்லது ஒரு ட்ரேயை நெய் தடவி மைசூர்பாக்கை கொட்ட தயாராக வைக்கவும்.

மைக்ரோவேவ் மைசூர் பாக் செய்வது எப்படி?

மைக்ரோவேவ் கிண்ணம் அல்லது பீங்கான் கிண்ணத்தில் 1 மேசைக்கரண்டி நெய்யுடன் கடலை மாவை கலந்து மைக்ரோபவர் அதிகமாக வைத்து 1 நிமிடம் வைக்கவும். 

கடலை மாவு வறுத்த மனம் வரும். பாலையும் நெய்யையும் சிறிது சிறிதாக சேர்க்கவும். கட்டியில்லாமல் கிளறி விடவும். ½ தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்க்கவும்.

மைக்ரோவேவில் அதிக வெப்பத்தில் 1 நிமிடம் வைக்கவும். இப்போது மாவு கெட்டியாகி நெய் மேலே மிதக்க ஆரம்பிக்கும்.

கலவையை நன்றாக் கலந்து மீண்டும் மைக்ரோவேவில் 1 நிமிடம் வைக்கவும். மீண்டும் கலந்து விட்டு 30 விநாடிகள் வைக்கவும். மாவு கலவை இப்போது நுரைத்து மிருதுவாகி வரும். 

மாவு கலவையை நெய் தடவி வைத்த தட்டில் கொட்டி 10 நிமிடங்கள் ஆறவிடவும். சுத்தமான கூரான கத்தியால் துண்டுகள் போடவும். மீண்டும் 5 நிமிடங்கள் ஆறிய பின்னர் சுவைத்து மகிழவும்.

குறிப்பு

எனது மைக்ரோவேவ் 900 வாட் கொண்டது. 2.5 நிமிடங்கள் போதுமானது. உங்களுடையது அதிக வெப்பநிலை கொண்டதாக இருந்தால் 2 நிமிடத்தில் கலவையை பார்த்துக் கொள்ளவும். 

உங்களுடையது குறைந்த வெப்பநிலை கொண்டதாக இருந்தால் 30 விநாடிகள் அதிகமாக வைக்கவும். நேரம் மைக்ரோவேவ் வெப்பநிலைக்கு ஏற்ப மாறுபடும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)