குறைவான கலோரி உடைய அஸ்பாரகஸ் சூப் செய்வது எப்படி?





குறைவான கலோரி உடைய அஸ்பாரகஸ் சூப் செய்வது எப்படி?

ஒவ்வொரு மனிதருக்கும் தங்கள் உடலை கட்டுடலாக, ஒல்லியாக மற்றும் கவர்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதே விருப்பமாக இருக்கும்.

குறைவான கலோரி உடைய அஸ்பாரகஸ் சூப்

இந்த கட்டுடலைப் பெறுவதற்காக பட்டினியும் கிடப்போம், விதவிதமான உணவுகளையும் சாப்பிட முயற்சி செய்வோம். 

நாம் எதை சாப்பிட்டாலும், அது நமது உடலில் கொழுப்பாக இருந்து வேலை செய்யும் என்பதே உண்மை.

எனவே, நம் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கவும் மற்றும் எடையை குறைக்கவும் நாம் செய்ய வேண்டிய ஒரு ஸ்பெஷல் உணவு முறை தான் சூப். 

சூப்களை உணவுகளில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக உடலில் அதிகபட்ச கலோரிகள் கூடுவதை புத்தி சாலித்தனமாக தவிர்க்க முடியும். அஸ்பாரகஸ், குறைவான கலோரியை உடையதாக உள்ளது. 

இதில் கொழுப்பு சத்து இல்லை மற்றும் இதில் மிகவும் குறைந்த அளவு சோடியம் இருப்பதனால், இது ஆரோக்கியமான உணவாகவும் உள்ளது. 

ஒரு சில கஞ்சி வகைகள் மற்றும் சூப்புகளில் இந்த அஸ்பாரகஸ் ஒரு சமையல் பகுதிப் பொருளாக பயன்படுத்தப் படுகிறது. 

அஸ்பாரகஸ் ஊறுகாய்களாகவும் தயாரிக்கப் படுகிறது. இது பல வருடங்களுக்கு சேமித்தும் வைக்கப் படுகிறது. இந்த அஸ்பாரகஸில் எப்படி சூப் தயாரிப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்.:

அஸ்பாரகஸ் – அரை டின்  (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்), 

மைதா மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்,

வெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்,

மிளகுத்தூள் - தேவையான அளவு, 

கிரீம் – ஒரு கப்,

உப்பு – தேவையான அளவு.

செய்முறை.:

அஸ்பாரகஸ் சூப் செய்வது எப்படி?

கடாயில் வெண்ணெயை சூடாக்கி, உருகியதும் மைதா மாவை சேர்த்து நன்கு கலக்கி, உப்பு, ஆஸ்பரகஸ் சேர்த்து, 

தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் விட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து, மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும். பரிமாறும் போது கிரீம் சேர்க்கவும்.

Tags: