எந்த உணவகத்துக்குச் சென்றாலும், பரோட்டாவின் பெயரை உச்சரிக்காத ஹோட்டல் சர்வர்கள் இருக்க மாட்டார்கள். அவர்கள் வாயிலிருந்து தன்னிச்சையாக வெளிவரும் வார்த்தை அதுவாகத் தான் இருக்கும்.
கோதுமையில் இருக்கும் நுண்ணூட்டச் சத்துகள் அனைத்தும் நீக்கப்பட்டு, வியாபார கட்டாயத்தினால் மங்கிய நிறத்தை வெண்மையாக்க ரசாயனத் தாக்குதலால் ’பிளீச்’ செய்யப்பட்டு,
இறுதியில் வெண்மையாக வெள்ளந்தியாகக் காட்சியளிக்கும் மைதாவால், உடலுக்கு உண்டாகும் ஆபத்துகள் மிக அதிகம்’ என எச்சரிக்கிறது மருத்துவ உலகம்.
மைதா என்பது இயற்கையாக, கோதுமையிலிருந்து உருவாக்கப்படும் மாவு அல்ல. செயற்கையாக, கோதுமையில் பலவிதமான ரசாயனத் தாக்குதல்களை நடத்தி உருவாக்கப்படும் மெல்லிய மாவு.
இதை பிளீச் செய்யப் பயன்படும் ரசாயனம் பென்சாயில் பெராக்ஸைடு (Benzoyl peroxide).எனவே, சர்க்கரை நோயாளிகள் தடை விதிக்கவேண்டிய முக்கிய உணவு பரோட்டா.
பரோட்டோவில் பல வகையுண்டு. கொத்து பரோட்டா, முட்டை பரோட்டா, சில்லி பரோட்டா, சிலோன் புரோட்டா, மலபார் புரோட்டா, வீச்சு புரோட்டா ன்னு ஒரு லிஸ்டே இருக்கு..’
அதுல ஒரு வகை தான் மிக்ஸ்டு வெஜ் பரோட்டா. இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்....
தேவையானவை:
உருளைக்கிழங்கு (வேக வைத்தது மசித்தது), – ஒன்று,
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – ஒன்று, ,
நறுக்கிய தக்காளி – ஒன்று,
கொத்தமல்லி, புதினா – சிறிதளவு,
நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் – தலா ஒரு டேபிள் ஸ்பூன்,
மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்,
எண்ணெய் – கால் கப்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
தக்காளி, கொத்தமல்லி, புதினா, இஞ்சி, பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, பிசைந்து கொள்ளவும்.
மாவை கொஞ்சம் எடுத்து (சிறிய கமலா ஆரஞ்சு சைஸ்) வட்டமாக இட்டு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு தடவி, காய்கறி கலவையில் 2 டீஸ்பூன் அளவு வைத்து மூடவும்.
மீண்டும் சிறிது கனமாக இட்டு சூடான தவாவில் போட்டு, வெந்ததும் திருப்பிப் போட்டு வேக விடவும். சுற்றிலும் எண்ணெய் தடவும். மேலேயும் ஸ்பூனால் லைட்டாக எண்ணெய் தடவவும்.
வெந்ததும் எடுத்தால்…. மிக்ஸ்டு வெஜ் பராத்தா தயார்.
குறிப்பு:
அசத்தலான மணம், ருசியுடன் இருக்கும் இது காலை வேளை டிபனுக்கு ஏற்றது. ஒன்று சாப்பிட்டால் கூட போதும்.