ரம்ஜான் பண்டிகை வரப்போகிறது. ரம்ஜான் பண்டிகை என்றாலே பலருக்கும் நினைவிற்கு வருவது, பிரியாணி தான். அதோடு அந்நாளில் பல வித்தியாசமான சுவையான ரெசிபிக்களையும் சிலர் முயற்சிப்பார்கள்.
சிக்கன் ரெசலா என்பது சிக்கன் குருமா. இந்த குருமா சப்பாத்தி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
முந்திரி - 10
கசகசா - 2 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
பிரியாணி இலை - 2
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
பட்டை - 1 இன்ச்
வரமிளகாய் - 4
கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
கடுகு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சிக்கன் - 1 கிலோ
தயிர் - 1 கப்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
குங்குமப்பூ - சிறிது (அலங்கரிப்பதற்கு)
செய்முறை:
பின் அந்த மிக்சர் ஜாரை கழுவி விட்டு, அதில் முந்திரி, கசகசா சேர்த்து நீர் ஊற்றி நன்கு மேன்மையாக அரைத்து, அதையும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு சிக்கனை நன்கு கழுவி, ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் அரைத்த பாதி வெங்காய விழுது மற்றும் பாதி முந்திரி விழுதை சேர்த்து, தயிர், தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் எஞ்சிய வெங்காய விழுதை சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும். பின்பு அத்துடன் மீதமுள்ள முந்திரி விழுதை சேர்த்து ஒருமுறை கிளறி விட வேண்டும்.
இறுதியாக ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் 25 நிமிடம் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.