ரமலான் நோன்பு இருப்பவர்கள், மாலை வேளை நோன்பு முடித்த பின்பு நல்ல புரோட்டீன் நிறைந்த உணவுகளை உண்பது மிகவும் நல்லது.
இது சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். கேரளா மட்டன் மசாலா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள.
தேவையான பொருட்கள்:
மட்டன் - 500 கிராம்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 2 இன்ச் (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 6 பல் (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
பின்பு அதில் ஒரு கப் நீரை ஊற்றி, குக்கரை மூட வேண்டும். ஒரு விசில் வந்ததும் நெருப்பை குறைத்து, குறைவான தீயில் 30 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
30 நிமிடம் கழித்ததும், அடுப்பில் இருந்து குக்கரை இறக்க வேண்டும். விசில் போனதும் குக்கரை திறக்க வேண்டும்.
அடுத்து ஒரு பௌலில் மட்டன் துண்டுகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் உள்ள எஞ்சிய நீரை ஒரு பௌலில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு 3-4 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
மசாலாவில் இருந்து பச்சை வாசனை போனதும், தக்காளியைப் போட்டு நன்கு மென்மையாகும் வரை குறைந்தது 2-3 நிமிடம் வதக்கவும்.
அதன் பின் தனியாக வைத்துள்ள மட்டன் நீர் மற்றும் மட்டனை சேர்த்து, வேண்டுமானால் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும். நீரானது ஓரளவு வற்றியதும், அடுப்பை அணைத்து இறக்கினால், சுவையான கேரளா மட்டன் மசாலா தயார்.