இட்லிக்கு தொட்டுக் கொள்ள புளி மிளகாய் சாம்பார் செய்வது எப்படி?





இட்லிக்கு தொட்டுக் கொள்ள புளி மிளகாய் சாம்பார் செய்வது எப்படி?

0

அறுசுவைகளில் ஒன்று புளிப்புச்சுவை. புளிப்புச் சுவையை மிகச்சரியான அளவில் நமக்கு கொடுக்கும் ஒரு பொருள் தான் நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்துகிற புளி. 

புளி மிளகாய் சாம்பார்

அதன் முழு அர்த்தமும் தெரிந்து அப்பெயர் வைத்திருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. நம்முடைய முன்னோர்கள் புளியை அன்றாட உணவில் வெறும் சுவைக்காக மட்டுமே பயன்படுத்தி யிருக்கிறார்கள் என்று எண்ணி, நாமும் பயன்படுத்தி வருகிறோம். 

ஆனால் புளிக்குள் ஒளித்திருக்கும் ஏராளமான மருத்துவ உண்மைகளைப் பற்றி நாம் அறிந்து கொண்டதே இல்லை.முன்பெல்லாம் வயதானவர்களுக்குத் தான் மூட்டுவலி பிரச்னைகள் இருக்கும். 

அலங்காரத்தை விரும்பும் ஆண்களுக்கான ரகசியங்கள் !

ஆனால் இன்றைய வாழ்க்கைச் சூழல், உணவுப் பழக்கங்களால் எந்த பிரச்னையும் எத்தனை வயதில் வேண்டுமானாலும் வருகிறது. 

ஆனால் இந்த மூட்டுவலியைப் போக்கும் ஆற்றல் புளிக்கு உண்டு என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.முதலில் நாம் ஒரு நாளைக்கு எவ்வளவு புளியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்ற சந்தேகம் எல்லோருக்கும் வரும். 

அதிகபட்சமாக 100 கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம். புளி எலும்புகள் தேய்மானத்தைக் குறைக்கும் தன்மையுடையது. அதனால், எலும்புகளின் தேய்வால் உண்டாகும் மூட்டுவலி விரைவிலேயே கட்டுக்குள் வரும்.

100 கிராம் புளியில் ஒரு நாளைக்கு நமக்குத் தேவைப்படுகிற இரும்புச்சத்து முழுமையும் கிடைக்கிறது. அதே போல், ஜீரணக் கோளாறுகள், நோய் எதிர்ப்பு ஆற்றல், உடலின் ரத்த ஓட்டம் உள்ளிட்டவைகளை புளி சீராக்குகிறது.

மேலும், உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. அதோடு உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புகளைக் கரைக்கும் சக்தியும் புளிக்கு உண்டு. 

கால்களில் உண்டாகும் நீர்த்தேக்கம், வீக்கம், கீழ்வாதம் போன்றவற்றையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது.அல்வா என்றாலே நினைவுக்கு வருவது திருநெல்வேலி மாநகரம் தான். 

ரசிகர்களை கிறங்கடித்த தெய்வமகள் வாணி போஜன் !

பல்வேறு சிறப்புகளுக்குப் பெயர்போன நெல்லை, தனக்கே உரிய சைவ உணவால் நாவூற வைக்கும். நெல்லையின் அடையாளமாகத் திகழும் சைவ உணவு வகைகளில் புளி மிளகாய் சாம்பாரும் ஒரு வகை . இதை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையானவை :

சாம்பார் வெங்காயம் - 200 கிராம்

மிளகாய் - 150 கிராம்

நல்லெண்ணெய் - 50 கிராம்

புளி, உப்பு, வெல்லம் - தேவையான அளவு

பெருங்காயப் பொடி - சிறிதளவு

கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க

செய்முறை :

வெங்காயத்தைத் தோல் உரித்து சிறிது சிறிதாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். மிளகாயை நீளவாக்கில் இரண்டாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். 

கடாயில் பாதி எண்ணெய் விட்டுப் பச்சை மிளகாயைப் போட்டு, பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும். பின் அரிந்த வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி, கரைத்த புளித்தண்ணீரை ஊற்றி வேக வைக்க வேண்டும். 

சயனைட் கொலையாளி தேள்கள் பற்றிய அதிசய கதை !

நன்றாகக் கொதித்ததும் வெல்லத்தைச் சேர்த்து இறக்க வேண்டும். பிறகு இன்னொரு கடாயில் மீதி எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்துக் கொட்ட வேண்டும். 

தோசை, இட்லிக்கும் தயிர்ச் சோற்றுக்கும் தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)