இது பிரியாணி, வெள்ளை சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக இந்த ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2 (நறுக்கியது)
மிளகு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கிராம்பு - 4
பட்டை - 1 இன்ச் துண்டு
துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 3 (நறுக்கியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
அன்னாசிப் பூ - 1
கறிவேப்பிலை - சிறிது
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 5-6
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - சுவைக்கேற்ப
உடலின் நீர் எடை என்றால் என்ன?
செய்முறை:
நறுக்கிய 1 வெங்காயம், நறுக்கிய ஒரு தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, 2 டம்ளர் நீரை ஊற்றி, குக்கரை மூடி குறைவான தீயில் 5-6 விசில் விட்டு இறக்க வேண்டும்.
நோன்பு காலத்தில் மலச்சிக்கல் ஏற்படுவதை தவிர்கும் உணவுகள் !
அதே சமயம் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், மிளகு, சோம்பு, சீரகம் சேர்த்து வறுத்து இறக்கி,
மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் மல்லித் தூளையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கிராம்பு, பட்டை, கறிவேப்பிலை,
அன்னாசிப்பூ சேர்த்து தாளித்து, எஞ்சியுள்ள ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கிப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
அதன் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கி, தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.
இந்நிலையில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து சில நிமிடங்கள் நன்கு கொதித்ததும், மட்டன் துண்டுகளை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
குழம்பு நன்கு கொதித்து ஒரு பதத்திற்கு வரும் போது, அடுப்பை அணைத்து, குழம்பின் மேல் கொத்த மல்லியைத் தூவினால், சுவையான தஞ்சாவூர் மட்டன் குழம்பு தயார்.