நாவில் நீர் ஊற வைக்கும் ராஜபாளையம் மாங்காய் ஊறுகாய் !





நாவில் நீர் ஊற வைக்கும் ராஜபாளையம் மாங்காய் ஊறுகாய் !

0

மாம்பழத்தை விட மாங்காயில் கலோரிகள் குறைவாக உள்ளது. மேலும் இதில் சர்க்கரை அளவும் குறைந்து இருக்கிறது. இது உடலில் வளர்சிதை மாற்றத்திற்கு வழிவகுக்கும் மற்றும் கொழுப்பை குறைக்க வல்லது. 

ராஜபாளையம் மாங்காய் ஊறுகாய் !

இதை தினமும் சிறிய அளவில் உண்டு வந்தால் உடல் எடை தானாக குறையும். உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தாலும் அல்லது செரிமான பிரச்சினை இருந்தாலும், மாங்காயை சாப்பிட்டு வந்தால் அனைத்து பிரச்சினைகளையும் நீக்கி விடும். 

மாங்காய் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது. உணவியல் நிபுணர் கவிதா தேவ்கன் கூறுகிறார், கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் குமட்டல் மற்றும் காலை சோர்வு ஆகியவை மாங்காய் சாப்பிட சரியாகி விடும். 

வைட்டமின் A மற்றும் வைட்டமின் C சத்துடன் சேர்ந்து மக்னீசியம் சத்து இதில் அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றம் செய்கிறது. இதனால் நம் சருமம் மற்றும் தலைமுடிக்கு நன்மை விளைகிறது. 

இரண்டையுமே பளபளப்பாக மாற்றுகிறது. பச்சை மாம்பழம் உங்கள் உடலில் உள்ள கொழுப்பின் அளவையும் கட்டுப்படுத்துகிறது. 

கவிதா தேவ்கன் கூறுகையில், வைட்டமின்-பி-3 மிகக் குறைவான உணவுப் பொருட்களிலேயே உள்ளது. அதில் பச்சை மாம்பழமும் ஒன்று. இது நிசின் என்றும் அழைக்கப்படுகிறது. 

இதய பிரச்சனைகளை நீக்குவதில் இது மிகவும் பயனுள்ள உறுப்பு. இதய நோய் உள்ளவர்கள் தினமும் மாம்பழத்தை பச்சையாக சாப்பிட வேண்டும். 

நினைக்கும் போதே நாவில் நீர் ஊற வைக்கும் உணவு வகைகளில் ஊறுகாய்க்குத் தனி இடம் உண்டு. கையால் தொட்டு வாயில் இடும்போதே ‘சுர்ர்ர்’ என்று சுண்டியிழுக்கும் சுவை ஊறுகாய்க்கே உரித்தான சிறப்பு. 

தற்போதைய ஊரடங்கு சூழ்நிலையில் கொளுத்தும் வெயிலைப் பயன்படுத்தி இந்த ராஜபாளையம் ஸ்டைல் மாங்காய் ஊறுகாய் செய்து வைத்துக் கொண்டு மதிய உணவைச் சிறப்பாக்கலாம்.

தேவையானவை :

மாங்காய்த் துண்டுகள் - இரண்டரை கப்

உப்பு, மிளகாய்த்தூள் - தலா கால் கப்

வெல்லத்தூள் (அ) சர்க்கரை - கால் கப்

கடுகு - 2 டீஸ்பூன்

வெந்தயம் - ஒன்றரை டீஸ்பூன்

தாளிக்க :

நல்லெண்ணெய் - கால் கப்

கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன்

தோல் சீவி துருவிய இஞ்சி - கால் டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)

கறிவேப்பிலை, பூண்டு - சிறிதளவு

செய்முறை :

மாங்காயுடன் உப்பு சேர்த்து ஊற வைக்கவும். இரண்டு நாள்கள் கழித்து மாங்காயைப் பிழிந்து எடுத்து வெயிலில் காய வைக்கவும். தண்ணீரையும் வெயிலில் வைக்கவும். 

மறுநாள் மாங்காயை மட்டும் வெயிலில் வைக்கவும். மாங்காய்த் தண்ணீரை லேசாகக் கொதிக்க வைக்கவும். ஆறியதும் அதனுடன் மிளகாய்த்தூள், வெல்லத்தூள் (அ) சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். 

கடுகு, வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து அரைத்துச் சேர்க்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டுச் சூடாக்கி தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து மாங்காய்த் தண்ணீர்க் கலவையில் சேர்க்கவும். 

அதனுடன் காய வைத்த மாங்காய்த் துண்டுகள் சேர்த்து நன்றாக கலந்து பயன்படுத்தவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)