மாங்கொட்டையில் உள்ள நன்மைகள் தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள் !





மாங்கொட்டையில் உள்ள நன்மைகள் தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள் !

0

மாம்பழக் கொட்டைகளில் இருக்கும் விதைகளில் எண்ணற்ற நன்மைகளையும், மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளன. மாம்பழத்தை நாம் பழங்களின் ராஜா என்று அழைக்கிறோம். 

பழங்களின் ராஜா மாம்பழம்

இதில் பல்வேறு சுகாதார நலன்கள் இருக்கிறது. ஆனால் மாம்பழத்தின் விதைகளிலும் ஊட்டச்சத்து பண்புகள் இருக்கிறது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா! 

ஆம் இந்த மாம்பழ விதையில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அடங்கியுள்ளன. கோடையில் மாம்பழங்களுக்கு பஞ்சமிருக்காது. 

சந்தைக்கு சென்றால் எந்த பக்கம் திரும்பினாலும் மாம்பழங்களில் கூவல் சத்தம் கேட்கும். அதை வாங்கி உண்பவர்களின் எண்ணிக்கைக்கும் பஞ்சமில்லை. 

அதன் சதையில் இருக்கும் சுவையை விட அதன் கொட்டை சதையை சிலர் விரும்பி உண்பார்கள். வீட்டில் மாம்பழம் அறிந்தால் கூட கொட்டை பீஸ் எனக்கு வேண்டும் என முந்தியடிப்பார்கள். 

அப்படியொரு சுவை உண்டு அந்த கொட்டை சதைக்கு.. அதன் சுவையில் இருக்கும் ரகசியமே அதன் கொட்டையில் நிறைந்திருக்கும் நன்மைகளால் தான் என்பது தெரியுமா? 

மாங்கொட்டையில் உள்ள நன்மைகள் தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள் !

இந்த மாங்காய் விதையில் நார்ச்சத்து நிரம்பியுள்ளது. மேலும் இதில் புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், மெக்னீசியம், சோடியம் மற்றும் கால்சியம் ஆகிய சத்துக்களும் உள்ளன. 

இந்த மாங்காய் கொட்டையில் பயோ ஆக்டிவ், பினோலிக் நிறைவுறாக் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்சிஜனேற்ற சேர்மங்களும் உள்ளது.

அதாவது மாம்பழக் கொட்டைகளின் விதைகளில் எண்ணற்ற நன்மைகளையும், மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளன. 

அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இனி அதன் கொட்டைகளைக் கூட தூக்கி எறியாதீர்கள். 

பொடுகுத் தொல்லை : 

பொடுகுத் தொல்லை

மாங்காய் விதைகளிலிருந்து எடுக்கப்படும் பட்டர் பொடுகுத் தொல்லையை நீக்க உதவும். இதைப் பயன்படுத்துவதால் இளம் வயதில் ஏற்படும் நரை முடிப் பிரச்னையும் இருக்காது. 

வயிற்றுப்போக்கு : 

வயிற்றுப்போக்கு

பாரம்பரியமாக வயிற்றுப்போக்கு பிரச்சினை உள்ளவர்களுக்கு இந்த மாங்காய் விதை சாறு கொடுப்பது வழக்கம். 

ஒரு ஆராய்ச்சியில் மாங்காய் விதை சாறு ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது என தெரிய வந்துள்ளது.

மாங்கொட்டை பொடி விற்கப்படுகிறது அல்லது நீங்களே காய வைத்து அரைத்துக் கொள்ளலாம். அதைக் கொஞ்சமாகத் தேனில் குழைத்து உண்டால் வயிற்றுப் பிரச்னைகள் நீங்கும். 

இதயப் பிரச்சனை மற்றும் இரத்தக் கொதிப்பு : 

இதயப் பிரச்சனை மற்றும் இரத்தக் கொதிப்பு

மா விதை உண்பதால் இதயப் பிரச்னை, ரத்தக் கொதிப்பு பிரச்னை இருந்தால் குறையும். இதன் அறிகுறிகள் இருந்தால் ஆரம்ப நிலையிலேயே தவிர்த்து விடலாம். 

இந்த மாங்காய் விதையில் கொழுப்பின் அளவைக் குறைப்பதற்கும், உடலில் உள்ள கொழுப்பின் அளவை உறுதிப் படுத்துவதற்கும் தேவையான ஆற்றல் உள்ளது. 

இந்த மாங்காய் விதைகளில் உள்ள பாலிபினால் ஆக்சிஜனேற்ற செயல்பாடே இதற்கு காரணமாகும்.

ஆரோக்கியமான முடி : 

ஆரோக்கியமான முடி

இந்த மாங்காய் விதைகள் கேச ஆரோக்கியத்தை பராமரிக்கவும் பயன்படுகிறது. இது முடி வளர்ச்சியை ஊக்குவித்து, தலை பொடுகு மற்றும் ஆரம்பகால நரைத்தல் போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்த உதவுகிறது. 

மேலும் மாங்காய் விதை மயிர் கால்களை வலுப்படுத்தப் படுத்தவும், முடி உதிர்வைத் தடுக்கவும் உதவுகிறது. மாம்பழ விதைகள் பொதுவாக மாத்திரைகள், எண்ணெய் அல்லது தூள் வடிவில் உட்கொள்ளப்படுகின்றன.

கண்கள் ஆரோக்கியம் : 

கண்கள் ஆரோக்கியம்

மா விதைகளில் வைட்டமின்-ஏ நிறைவாக உள்ளது. இது கண்ணின் விழித்திரையில் நிறமிகளை உருவாக்க உதவுகிறது. வயது செல்ல செல்ல கண்கள் மங்குவதைத் தடுக்க உதவுகிறது. 

ஆரோக்கியமான சருமம் : 

ஆரோக்கியமான சருமம்

மாங்கொட்டை விதையிலிருந்து எடுக்கப்படும் பட்டர் சிறந்த மாய்ஸ்சரைஸர். இதை முகம் மற்றும் கைகால்களில் தடவி வர மென்மையாக இருக்கும். பளபளப்பான ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம். 

புற்றுநோயை தடுக்க :

புற்றுநோயை தடுக்க

இந்த மாம்பழ விதைகளில் ஆக்சிஜனேற்றிகள், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் கல்லிக் அமிலங்கள் நிறைந்துள்ளன. 

இந்த மாங்காய் விதை சாறுகளை உட்கொள்ளும் போது மார்பக புற்றுநோயினால் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் பண்பு உள்ளன என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நீரிழிவு நோயாளிகளுக்கு : 

நீரிழிவு நோயாளிகளுக்கு

மாங்கொட்டை விதை இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது அவை குளுக்கோஸின் உறிஞ்சுதலைக் குறைக்க அவை குடல் மற்றும் கல்லீரலின் நொதிகளை மாற்றுகின்றன. 

பற்கள் ஆரோக்கியம் : 

பற்கள் ஆரோக்கியம்

நீங்கள் நீண்ட நாட்களாக பல் பிரச்னைகளால் பாதிக்கப் பட்டுள்ளீர்கள் அல்லது எதிர் காலத்தில் பல் பிரச்னைகளே இருக்கக்கூடாது எனில் மாங்கொட்டை விதைகளில் தீர்வு உண்டு. 

மாங்காய் இலைகள் சிலவற்றை தீயில் வாட்டி எடுத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். அதோடு இந்த விதைகளையும் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். 

பின் இந்த கலவையை இரண்டு வேலை பற்களில் தேய்த்து கொப்பளித்து வர பல் பிரச்னைகள் சரியாகலாம். 

உடல் எடையை குறைக்க :

உடல் எடையை குறைக்க

உடல் எடையை குறைக்க இந்த மாங்காய் விதைகள் உதவுகின்றன. மாங்காய் விதைகளில் உள்ள குளுக்கோஸ் உடல் பருமனை குறைக்க உதவுகிறது. 

இந்த மாங்காய் விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் சாறினை உட்கொள்வதால் உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு நல்ல வழியாக இருக்கும். 

இது உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி : 

நோய் எதிர்ப்பு சக்தி

தற்போது உயிரை பறிக்கும் கொரோனாவில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். இப்படியான சூழ்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி அவசியமாகிறது. 

அந்த வகையில் மாம்பழ விதைகள் பாக்டீரியாக்களை அகற்றும் சக்தி கொண்டது. இதன் மூலம் சளி போன்ற தொற்று நோய்களை அகற்றும். 

செரிமானத்தை தூண்டும் : 

செரிமானத்தை தூண்டும்

மாங்கொட்டை விதைகள் உடலின் செரிமான ஆற்றலை தூண்டுகிறது. இதனால் செரிமானப் பிரச்னைகள் நீங்கும். அதோடு கொழுப்பு தேக்கத்தால் உண்டாகும் உடல் பருமனும் இருக்காது. 

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)