ஆரோக்கியமான செட்டிநாடு மீன் பிரியாணி செய்வது எப்படி?





ஆரோக்கியமான செட்டிநாடு மீன் பிரியாணி செய்வது எப்படி?

மீனில் புரோட்டீன், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் இந்த மீனில் அடங்கியுள்ளது.. 
ஆரோக்கியமான செட்டிநாடு மீன் பிரியாணி செய்வது எப்படி?
வங்காளம், அசாம் மற்றும் நாட்டின் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எப்போதும் எடுத்துக் கொள்ளும் உணவு வகைகளில் மீன் கட்டாயம் இருக்கும். 

அவர்கள் அதிகளவு மீன் உணவுகளை நேசிப்பதை நாம் சில சமயங்களில் வேடிக்கையாக பார்த்திருக்கலாம், இல்லை கேலி கூட செய்திருக்கலாம். 

ஆனால் மீன் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று என்பது உண்மையே. மீன் சாப்பிடுவது முக்கியமானது. மீன்களை வறுத்து சாப்பிட்டாலும், வேக வைத்து சாப்பிட்டாலும், குழப்பு வைத்து சாப்பிட்டாலும் ருசி அருமையாக இருக்கும். 

ஏனெனில் அதன் சதை பகுதிகள் சீக்கிரத்தில் வேகும் தன்மை கொண்டது. மீன் சமைக்க மிகவும் எளிதானது. இந்த மீனைக் கொண்டு எப்படி மீன் பிரியாணி செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

பாஸ்மதி அரிசி – 3/4 கிலோ,

மீன் – 3/4 கிலோ (பெரிய வகை),

வெங்காயம் – 3,

தக்காளி – 3,

பச்சை மிளகாய் – 3,

இஞ்சி, பூண்டு விழுது – 3 மேசைக்கரண்டி,

பட்டை – தலா 2,

கிராம்பு – தலா 2,

ஏலம் – தலா 2,

பிரிஞ்சி இலை – தலா 2,

தயிர் – ஒன்றரை கப்,

மிளகாய் தூள் – 2 + 1 தேக்கரண்டி,

மஞ்சள் தூள் – 1 + 1/2 தேக்கரண்டி,

வெள்ளை மிளகுத் தூள் – ஒரு தேக்கரண்டி,

சீரகத் தூள் – ஒரு தேக்கரண்டி,

சோம்பு தூள் – அரை தேக்கரண்டி,

கரம் மசாலா தூள் – 2 தேக்கரண்டி கெட்டி,

தேங்காய் பால் – ஒரு கப்,

எலுமிச்சை சாறு – ஒரு மேசைக்கரண்டி,

எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி,

புதினா, மல்லித்தழை உப்பு,

செய்முறை :
மீன் பிரியாணி
மீனை சுத்தம் செய்து கொள்ளவும். மீனுடன் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு மேசைக் கரண்டி இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும். அரிசியை ஊற வைக்கவும்.

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். பிரட்டி வைத்த மீனை தவாவில் போட்டு அரை பதமாக பொரித்தெடுத்து வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளிக்கவும். பின் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, பொன்னிற மானதும் இஞ்சி, பூண்டு விழுது, சோம்பு தூள் சேர்த்து வதக்கவும்.

அதனுடன் தக்காளி, மற்றும் தூள் வகைகள் சேர்த்து நன்கு கிளறி விடவும். பின் மல்லித்தழை, உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக விட்டு, தயிர், தேங்காய் பால், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி விட்டு 2 நிமிடம் வேக விடவும்.
பிறகு பொரித்த மீன் துண்டுகளைப் போட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டு, மீனை தனியாக எடுத்து வைக்கவும். குருமாவில் மீன் பொரித்த எண்ணெயை ஊற்றவும். 

பின் அரிசியைக் களைந்து குருமாவில் போட்டு, பன்னீர் சேர்த்து மூடி போட்டு 15 நிமிடம் சிம்மில் வேக விடவும். பின் நன்கு கிளறி விட்டு, மீன் துண்டுகளைப் போடவும். மல்லித் தழை தூவி இறக்கவும்.
Tags: