தயிர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்று பாலிலிருந்து உருவாவது தான் தயிர். தயிரிலிருந்து உருவாவது தான் மோர்.
இதனால் உடல் எடை குறையும். தயிர் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கிறது. நரம்புகளில் ஏற்படும், இறுக்கத்தை தளர்த்தி, புத்துணர்வோடு இருக்கச் செய்கிறது. மூளையின் செயல்களை தூண்டுகிறது.
இத்தகைய நல்ல குணம் உடைய தயிரில் இருந்து தக்காளி தொக்கு சுவையில் சட்னி செய்வதை இந்த பதிவில் காணலாம்.
தயிர் - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1
மிளகாய் தூள் - 1 tsp
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 tsp
கடுகு - 1 tsp
எண்ணெய் - 1 tbsp
தனியா தூள் - 2 tsp
கரம் மசாலா தூள் - 1/2 tspஉப்பு - தேவையான .அளவு
செய்முறை :
தற்போது கடாய் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு போட்டு தாளியுங்கள். பொறிந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்குங்கள்.
அடுத்ததாக வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வெந்ததும், கரைத்து வைத்துள்ள தயிரை ஊற்றி உடனே கிளறுங்கள்.
அடுத்ததாக தட்டுப் போட்டு மூடி 10 நிமிடங்களுக்குக் கொதிக்க விடுங்கள். கொதிந்ததும் மூடியை திறந்து பார்க்க தயிர் கெட்டியாகி இருக்கும்.
அதை மேலும் கிளறிக் கொண்டே இருந்தால் தண்ணீர் இறுகி கெட்டியாக வரும். பின் கொத்த மல்லி இலை தூவி அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவு தான் சட்னி தயார்.