நாம் சாப்பிடும் இறைச்சி உணவுகளில், பெரும்பாலானவர்களுக்கு பிடித்தமான உணவு, கோழிக்கறி. குறைந்த விலை, குறைந்த கொழுப்பு காரணமாக கோழிக்கறி பிரபலமாகி உள்ளது.
குறிப்பாக இந்த ரெசிபி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அமைந்துள்ளது. சரி, இப்போது அந்த சைனீஸ் ஸ்பெஷல் டிராகன் சிக்கன் ரெசிபி எப்படி செய்வதென்று பார்ப்போம் .
தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் - 1 கிலோ (சற்று நீளமாக வெட்டியது)
இஞ்சி 1/2டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
பூண்டு - 1/2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
சில்லி ப்ளேக்ஸ் - 1 1/2 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 8 அவுண்ஸ்
சோயா சாஸ் -1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1 கையளவு
வெங்காயம், (நறுக்கியது) வெங்காயத் தாள், குச்சி வெஜிடேபிள், ஆயில் - தேவையான அளவு
ஊற வைப்பதற்கு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 1/2 டீஸ்பூன்
முட்டை - (வெள்ளைக்கரு மட்டும்)
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
பின்னர் அந்த சிக்கனை எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு நாண்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி கொள்ளவும்.
பின்பு சில்லி சாஸ் சேர்த்து கிளறி, தக்காளி சாஸ், சோயா சாஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து, கலவையை கொதிக்க விட வேண்டும்.
இப்போது அருமையான டிராகன் சிக்கன் ரெசிபிஸ் ரெடி. இதன் மேல் கொத்தமல்லி மற்றும் வெங்காயத் தாள் தூவி அலங்கரித்து பரிமாறலாம்.