இனி சளி பிடிச்சா டாக்டர் கிட்ட போறதுக்கு முன்னாடி இந்த டீயை குடிங்க !





இனி சளி பிடிச்சா டாக்டர் கிட்ட போறதுக்கு முன்னாடி இந்த டீயை குடிங்க !

0

மழை இப்போது வருவேனா… வரமாட்டேனா என்று போக்கு காட்டிக் கொண்டிருக்கிறது. கோடை வெப்பம் முடிவடைந்தாலும், அனல் காற்று குறையவில்லை. 

இனி சளி பிடிச்சா டாக்டர் கிட்ட போறதுக்கு முன்னாடி இந்த டீயை குடிங்க !
அப்படி வெப்ப சலனத்தில் வரும் முதல் மழையில் நனைந்தால்,  ஜலதோஷம் வரும். அப்படி அடிக்கடி ஜலதோஷம் என்றால் பெரிய தொல்லை தான். 

மூக்கடைப்பு, மூக்கில் சளி என்று வரிசையாக ஒரு வாரத்திற்கு இம்சைபடுத்தி தான் சரியாகும். 

மழை மட்டுமில்லாமல், ஒருவருக்கு அடிக்கடி தலையில் நீர் கோர்த்துக் கொள்வது, ஒவ்வாமை, குளிர்பானங்கள் அருந்துவது என்று பல காரணங்களால் ஜலதோஷம் வருகிறது.  

மேலும் குழந்தைகளை பேணிக் காப்பது அவ்வளவு ஒன்றும் எளிதல்ல. அடிக்கடி இருமல், காய்ச்சல், ஜலதோஷம் என்று அவர்களை துரத்திக் கொண்டே தான் இருக்கும். 

இப்படி அடிக்கடி ஜலதோஷம் காய்ச்சல் வர முக்கிய காரணம் அவர்களின் நோயெதிர்ப்பு மண்டலம் முழுமையாக வளர்ச்சியடையாமல் இருப்பது தான் காரணம். 

உங்க சலதோஷத்தை விரட்ட மாத்திரை மருந்தெல்லாம் தேவையில்லைங்க. கையில சூடாக ஒரு கப் டீ போதும். 

இனி சளி பிடிச்சா இந்த டீயை குடிங்க !

அதிலும் விதவிதமான மூலிகை பொருட்கள் டீ என்றால் கூடுதல் பலன் கிடைக்கும். உதாரணமாக செம்பருத்தி டீ  இருமலை போக்கும், 

லெமன் டீ விட்டமின் சி அடங்கியுள்ளது. எனவே சீக்கிரம் சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்ளும். இப்படி சலதோஷத்தை விரட்ட ஏகப்பட்ட டீ வகைகள் உள்ளன. 

குளிர்காலத்தில், இல்லையென்றால் குழந்தைகளுக்கு அடிக்கடி ஜலதோஷம் பிடிக்குமோ? அப்போ இந்த டீயை மட்டும் சுவையுங்கள் உங்க ஜலதோஷம் குறைத்து விடும். 

இந்த தேநீர் வகைகளில் ஏராளமான ஆன்டி ஆக்ஸிடன்டுகள், ஜலதோஷத்தை போக்கும் பொருட்கள் உள்ளன. அதைப் பற்றிய செய்தியை இந்த பதிவில் காண்போம்.

செம்பருத்தி டீ

செம்பருத்தி டீ

செம்பருத்தி டீயில் தேன் கலந்து பருகுவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. பல்வேறு ஊட்டச்சத்துகள் இந்த டீயில் உள்ளது. இந்த டீ கருப்பை கட்டிகளைக் கரைக்கும் ஆற்றல் கொண்டது. 

செம்பருத்தி டீயிலும் நோயெதிப்பு சக்தியை அதிகரிக்கும் விட்டமின் சி உள்ளது. எனவே அடிக்கடி சளிப்பிடிப்பவர்கள் இந்த செம்பருத்தி டீயை குடிக்கலாம். 

இதற்கு செம்பருத்தி பூவை காய வைத்து பொடியாக்கி டீ போட்டு குடியுங்கள். எளிய வேலை தான் எளிதில் சலதோஷத்தை போக்கி விடலாம். 

என்னங்க இனி ஜலதோஷம் என்றால் மாத்திரையெல்லாம் ஒதுக்கி வச்சுட்டு ஒரு கப் டீயை கையில் எடுங்கள்.

புதினா டீ

புதினா டீ

உணவில் அதிக சுவையையும் மணத்தையும் தர கூடிய உணவு வகைகளில் புதினாவும் ஒன்று. புதினாவை தினமும் டீ போல தயாரித்து குடித்து வந்தால் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். 

சளிப்பிடித்த சமயங்களில் தொண்டையில் லேசான வலி அல்லது கரகரப்பு இருக்கும். அந்த மாதிரியான சமயங்களில் நீங்கள் மிளகுக்கீரை டீ போட்டு குடிக்கலாம். 

இதிலுள்ள மெந்தால் தொண்டைக்கு இதத்தை தருகிறது. மேலும் யு.எஸ்.டி.ஏ விஞ்ஞானிகள் ஆய்வகத்தில் சோதனை செய்த போது, 

மிளகுக் கீரையில் ஆன்டி மைக்ரோபியல் பண்புகளும், வைரஸ் தடுப்பு பொருட்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே ஜலதோஷம் வந்தா ஒரு கப் மிளகுக்கீரை டீயை ருசியுங்கள்.

கிரீன் டீ

கிரீன் டீ

சீனா மற்றும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கிரீன் டீ, அதன் நற்பலன்களுக்காகப் புகழ் பெற்றது. க்ரீன் டீ பொதுவாக எல்லாருக்கும் தெரியும். 

ஆனால் இந்த டீ எடையை குறைக்க மட்டுமல்ல சளியை குறைக்கவும் பயன்படுகிறது. 

இந்த க்ரீன் டீ நோயெதிப்பு சக்தியை அதிகரித்து தொண்டை புண்ணை ஆற்றுகிறது. இதை கேமல்லியா சினென்சிஸ் தாவரத்தின் இலைகளிலிருந்து தயாரிக்கின்றனர். 

இந்த டீ குடிப்பதற்கு இனிப்பு சுவையுடன் மணமாக இருக்கும். கிரீன் டீயில் உடல்நலத்திற்கு நன்மை செய்யும் ஏராளாமான வேதிப்பொருட்கள் நிறைந்திருக்கின்றன.

பிளாக் டீ

பிளாக் டீ

பிளாக் டீ என்பது ஒரு சுலபமான தேநீர் முறையாகும். பொதுவாக அந்தக் காலத்தில் உள்ள மக்கள் இந்த பிளாக் டீயைத் தான் மிகவும் விரும்பி பருகி வந்துள்ளனர்.

உலகளவில் தண்ணீருக்கு பதிலாக குடிக்கும் இரண்டாவது பானம் தேநீர் தான். ஏனெனில் பிளாக் டீயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகளவில் உள்ளன.

இது போடுவதற்கு எளிதான ஒரு டீ. ஆனால் இதன் பலன் அதிகம். கடுமையான சளி, ப்ளூ அறிகுறிகளை குறைக்க உதவுகிறது. சூடாக குடிக்கும் போது சளியை இளக்கி வெளியேற்றுகிறது. 

இதிலுள்ள கேட்சின் நோய்க்கு காரணமான பாக்டீரியாக்களை எதிர்த்து அழிக்கிறது. ஒரு கப் பிளாக் டீ குடிச்சு உங்க தொண்டையை இதமாக்குங்கள், இருமலை குறையுங்கள்.

வொயிட் டீ

வொயிட் டீ

வொயிட் டீ தான் உண்மையில் சுவையான டீ. சுவை மட்டுமல்ல நறுமணமும் இதில் இருக்கும். மூலிகை இலைகளை பாடம் செய்து பவுடராக்கி டீத்தூள் தயாரிக்கின்றனர். 

வொயிட் டீயில் ஏராளமான நியூட்ரிஷியன்கள் நிறைந்திருக்கிறது. ஆரோக்கியமான சருமத்தை பெற விரும்புபவர்கள் வொயிட் டீ குடிக்கலாம். 

வொயிட் டீ தொடர்ந்து குடித்து வர பாக்டீரியா தொற்றிலிருந்து நம்மை காத்திடும். ஜலதோஷம், ப்ளூ வால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நல்ல நிவாரணம் அளிக்கிறது. 

இதிலும் ஆன்டி ஆக்ஸிடன்கள், கேட்சின், அமினோ அமிலங்கள் போன்றவைகள் நோய்க் கிருமிகளை எதிர்த்து போரிடுகிறது.

​இஞ்சி டீ

​இஞ்சி டீ

இஞ்சி டீ நமக்கு தெரிந்த இயற்கை வைத்தியங்களுள் ஒன்று. பிரபலமானதும் கூட. இதன் காரமான சுவை தொண்டைக்கு இதமளிக்கிறது. 

இஞ்சியை அடிக்கடி டீ அல்லது ஜூஸ் வடிவில் எடுத்து வந்தால், அனைத்து வகையான புற்று நோய்களின் தாக்கம் தடுக்கப்படும்.

சலதோஷத்தின் போது வரும் குமட்டல், வாந்திக்கு இது சிறந்த தேர்வு. காலையில் எழுந்ததும் வாந்தி வரும் என்று நினைப்பவர்கள் இஞ்சி டீ குடிக்கலாம். 

மேலும் இது சளியை வெளியேற்ற உதவுகிறது. சீக்கிரமே சலதோஷத்தில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

எச்சினியா தேநீர்

எச்சினியா தேநீர்

குளிர்காலத்தில் இல்லையென்றால் குழந்தைகளுக்கு அடிக்கடி ஜலதோஷம் பிடிக்குதா? அப்போ இந்த டீயை மட்டும் சுவையுங்கள் உங்க ஜலதோஷம் குறைத்து விடும். 

இது வட அமெரிக்காவில் காணப்படும் ஒரு வகை ஊதா நிற மலர். இந்த மலரைத் தான் கிரேட் ப்ளைன்ஸ் பழங்குடியினர் ஒரு பாரம்பரிய சிகிச்சைக்கு பயன்படுத்தி வந்தனர். 

இந்த எச்சினியா பூக்களை மாத்திரை வடிவிலும் எடுத்துக் கொள்ள முடியும். இதன் மூலம் உங்களுக்கு ஏற்படும் சளித்தொல்லையை 58 சதவீதம் குறைக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். 

எனவே இனி எச்சினா டீ தான் சளித்தொல்லைகளுக்கு அருமருந்து. நம் நாட்டிலும் எல்லா டிபார்மெண்ட்டல் ஸ்டோர்களிலும் இந்த டீ பவுடர் கிடைக்கின்றது.

இந்த தேநீர் வகைகளில் ஏராளமான ஆன்டி ஆக்ஸிடன்டுகள், ஜலதோஷத்தை போக்கும் பொருட்கள் உள்ளன. 

ஜலதோஷம், ப்ளூ போன்றவற்றிற்கு காரணமான வைரஸ்களை எதிர்த்து போரிடுகிறது. 

இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் தொண்டை புண்ணை ஆற்றி இதம் அளிக்கிறது. தீராத இருமலை குறைக்கிறது.

லெமன் பிளவர் டீ

லெமன் பிளவர் டீ

லெமன் சுவையை கொண்டு ஏகப்பட்ட டீ வகைகள் உள்ளன. லெமன் வெர்பெனா தேநீர், லெமன் பாம் மற்றும் லெமன் கிராஸ் டீ போன்ற தேநீர்களில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது.

விட்டமின் சி நம் நோயெதிப்பு சக்தியை அதிகரித்து சலதோஷத்தை சீக்கிரமே விரட்டுகிறது. எனவே விட்டமின் சி அடங்கிய இந்த டீயை குடித்து சலதோஷத்தில் இருந்து விடுபட முயலுங்கள். 

சூடான நீரில் கொஞ்சமாக லெமன் சாறு, தேயிலை சேர்த்து தேன் சேர்த்தால் லெமன் டீ ரெடி

​கெமோமில் டீ (சாமந்தி டீ)

​கெமோமில் டீ (சாமந்தி டீ)

கெமோமில் நமக்கு நல்ல தூக்கத்தை தரும் மலராகும். இதிலுள்ள ப்ளோனாய்டுகள் நம் மனதை அமைதிபடுத்தி தூக்கத்தை தருகின்றன. 

பாதி நன்றாக தூங்கினாலே ஜலதோஷம் போய் விடும். இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. 

எனவே உலர்ந்த கெமோமில் பூக்களைக் கொண்டு 28 நாட்கள் தேநீர் குடித்து வந்தவர்கள் 15 நிமிடங்களில் நிம்மதியான உறக்கத்தை பெற்றதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

எனவே சலதோஷ தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்து.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)