சுவையான பூண்டு ஃப்ரைட் ரைஸ் செய்வது எப்படி?





சுவையான பூண்டு ஃப்ரைட் ரைஸ் செய்வது எப்படி?

0

ஃப்ரைட் ரைஸ்  ஒரு சுவையான சைனாவில் இருந்து பெறப்பட்ட உணவு வகை.   முட்டை பிரைட் ரைஸ், சில்லி சிக்கன், சிக்கன் ப்ரை, கோபி மஞ்சூரியன், ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும். 

சுவையான பூண்டு ஃப்ரைட் ரைஸ் செய்வது எப்படி?
இது கேரட், பீன்ஸ், வெங்காயத்தாள், பட்டாணி, போன்ற காய்கறிகளோடு முட்டை சேர்த்து செய்யப்படுகிறது. 

இது தவிர சிக்கன் ப்ரைட் ரைஸ், காய்கறி பிரைட் ரைஸ், இறால் ஃப்ரைடு ரைஸ், மீன் ஃப்ரைட் ரைஸ், போன்றவையும் இந்தியாவின் தெருவோர கடைகளில் மிகவும் பிரபலம். 

வயிற்றுப் பசிக்கு விலை போகும் மாதர்கள் !

அந்த வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய பூண்டு ஃப்ரைட் ரைஸ் செய்வது எப்படி? என்று இங்கு காண்போம்.

தேவையான பொருட்கள்:-

பாஷ்மதி அரசி – 1 கப்

நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

வினிகர் – 2 டேபிள் ஸ்பூன்

வெங்காயம் – ஒரு கப்

மிளகு தூள் – சிறிதளவு

வறுத்து ஒன்றிரண்டாக அரைத்த மிளகாய் – ஒரு தேக்கரண்டி

பூண்டு – 20 பற்கள்

வெங்காயத்தாள் வெள்ளை மற்றும் பச்சை நிறம் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

தென்னிந்தியாவின் எல்லோரா இந்த கழுகுமலை உருவான கதை !

செய்முறை 

சுவையான பூண்டு ஃப்ரைட் ரைஸ்

முதலில் பாஷ்மதி அரிசியை உதிரி உதிரியாக வேக வைத்து, வடித்து தனியாக வைத்து கொள்ளுங்கள். (அரிசியை வைக்கும் போது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்) 

பிறகு பூண்டு, வெங்காயம், வெங்காயத்தாள் ஆகியவற்றை பொடிதாக நறுக்கி கொள்ளவும். பின்பு அடுப்பில் ஒரு கடாய் வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். 

எண்ணெய் சூடேறியதும் பொடிதாக நறுக்கி வைத்துள்ள பூண்டினை முதலில் பொன்னிறமாக வறுத்து கொள்ளவும். நன்றாக பூண்டு வறுபட்டவுடன், அவற்றில் பாதியளவு பூண்டை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். 

பின் அவற்றில் நறுக்கிய வெங்காயம் மற்றும் வெங்காயத்தாள் வெள்ளை பாகம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

உப்பைக் கொண்டு தூளான டிப்ஸ்கள் !

இவை இரண்டு நன்றாக வதங்கியவுடன் இரண்டு ஸ்பூன் வினிகர் சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள். பின்பு இந்த கலவையுடன் வடித்து வைத்துள்ள பாஷ்மதி அரிசியை சேர்த்து நன்றாக கிளறுங்கள்.

பின் வறுத்து ஒன்றிரண்டாக அரைத்த மிளகாய் மற்றும் சிறிதளவு மிளகு தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறி விடுங்கள்.

இறுதியாக வெங்காயத்தாளின் பச்சை நிற பாகத்தை பொடிதாக நறுக்கி இந்த கலவையுடன் சேர்த்து கிளறி விடுங்கள், அவ்வளவு தான் சுவையான பூண்டு ஃப்ரைட் ரைஸ் தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)