காலையில் 5 மணிக்கு எழுந்ததுமே ஒரு டம்ளர் காபி/டீ. அதன்பிறகு குளித்து, பூஜை முடித்ததும் ஒரு காபி/டீ. சமையல் முடித்துக் குழந்தைகளும்,
உணவுக்கு மாற்று காபி/டீ என்பது இவர்களுடைய நினைப்பு. ஆனால், இது உண்மை அல்ல. பசி என்பதே ஒரு பிணி தான். அதற்கான மருந்து தான் உணவு. காபி/டீ, உணவுக்கு எந்த வகையிலும் மாற்று இல்லை எனும் நிலையில், பசிப் பிணி அப்படியே தான் இருக்கும்.
இதே நிலைமை தொடர்ந்தால் அவர்களால் பசியோடு வேலை செய்ய முடியாது. அசிடிட்டி போன்ற உபாதைகள் அவர்களுக்கு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புண்டு.
கைகொடுக்கும் சாலட்
அதிலேயே பழங்கள், நட்ஸ், சிறு தானியங்கள், ஸ்ப்ரவுட்ஸ், கொண்டைக் கடலை, ஆலிவ் ஆயில் போன்றவற்றைச் சேர்ப்பதன் மூலம் ஒரு கம்ப்ளீட் உணவாகி விடும்.
சாலட்டில் வெறும் காய்கறிகள் / பழங்கள் மட்டுமன்றி சாலட் டிரெஸ்ஸிங் என்று ஒன்றைச் செய்து கலப்பது வழக்கம்.
இதில் பொதுவாக ஆலிவ் ஆயில், எலுமிச்சைச் சாறு, மயோனைஸ் ஆகியவை சேர்க்கப்படும் (ஆலிவ் ஆயிலுக்குப் பதிலாக ரிஃபைண்ட் ஆயிலை சேர்க்கலாம்).
`டயட்’டை மேற்கொள்பவர்கள், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் ஒரு பவுல் சாலட்டை ஒரு வேளை உணவுக்குப் பதில் சாப்பிட்டால் மிகவும் நல்லது'
அதற்கும் முன்னதாக எழுந்து சமைப்பது இயலாத நிலையில், காலை உணவுக்கும், மதியச் சாப்பாட்டுக்கும் கல்லூரி கேன்டீன்களையே இவர்கள் பெரும்பாலோர் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
கல்லூரி கேன்டீன்களில் அவர்களுக்கு மாவுச் சத்தே அதிக அளவில் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இப்படிப் பட்டவர்கள் காலையில் வெள்ளரி, தக்காளி, கேரட் போன்ற காய்கறி சேர்ந்த சாலட்டை சாப்பிடலாம்.
முதல் நாள் இரவு சுட்ட சப்பாத்தியைச் சிறிது சூடுபடுத்தி காலையில் சாப்பிட்டுக் கொள்ளலாம். கொய்யா, சப்போட்டா, மாதுளை போன்ற பழங்களைச் சாப்பிடலாம்.
மாலையில் கல்லூரி முடிந்தவுடன் பேருந்தில் வரும் போது கூட உலர் பழங்கள், பாதாம் பருப்பு, உப்புக் கடலை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இது சிறந்த மாலைச் சிற்றுண்டியாக அமையும்.
மூன்று வேளை உணவைத் தவிர்க்காமல் சாப்பிடுவது எந்த அளவுக்கு முக்கியமோ அதைவிட முக்கியம், எந்தக் கலனில் வைத்துச் சாப்பிடுகிறோம்.