சீனா மற்றும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கிரீன் டீ, அதன் நற்பலன்களுக்காகப் புகழ் பெற்றது.
இன்று ஏராளமானோர் பால், டீ குடிப்பதை விட, கிரீன் டீயைத் தான் அன்றாடம் பருகி வருகின்றனர். பலருக்கு கிரீன் டீ குடித்தால், உடலுக்கு நல்லது என்பது தெரியும்.
கிரீன் டீ குடிப்பதால் பல முக்கியமான நன்மைகள் உண்டு. உலகிலேயே ஜப்பானியர்கள் தான் கிரீன் டீயை அதிகம் பருகுகிறார்கள்.
இதனால் தான் அவர்கள் நீண்ட நாட்கள் இளமையுடனும், ஆரோக்கியமாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.
ஆனால் இதை ஒருவர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.
கிரீன் டீ, பிளாக் டீயுடன் ஒப்பிடும் போது, ஏராளமான குணமளிக்கும் வேதிப்பொருட்களைக் கொண்டுள்ளது. கிரீன் டீ மற்றும் அதன் பல்வேறு நற்பலன்களைப் பற்றி அறிந்து கொள்ளவோம்.
உடல் எடை குறைவு
கிரீன் டீயானது உடல் எடையை குறைக்கவும், சரியான அளவிலான உடல் எடையை பராமரிக்கவும் பெரிதும் பயன்படுகிறது. மூச்சு சம்மந்தமான பிரச்சனைகளும் கிரீன் டீயால் சரியாகின்றன.
இதில் உள்ள பாலீஃபீனால் என்னும் சத்து தான் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மேலும் மற்ற டீக்களை விட கிரீன் டீயில் தான் ஏராளமான கேட்டசின்கள் உள்ளன.
உடல் எடை குறைக்க, கொழுப்பு குறைய, இதய ஆரோக்கியம் மேம்பட எனப் பல ஆரோக்கியச் செயல்பாடுகளுக்கு அழுத்தமாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த கிரீன் டீ. சாதாரண காபி, டீ-க்கு நல்ல மாற்றாக மாறிக்கொண்டிருக்கிறது இந்த சீனாவின் தேசிய பானம்.
நோய் எதிர்ப்பு சக்தி
இதனால் உடலைத் தாக்கும் நோய்களின் எண்ணிக்கையும் குறையும்.
சிறந்த டயட்டிற்கு
ஒரு கப் கிரின் டீயில் 30-50 மிகி காப்ஃபைன் உள்ளது. கிரீன் டீ எடையைக் குறைக்கும் என ஒரே நாளில் அளவுக்கு அதிகமாக குடித்தால், பக்க விளைவுகளுடன் தான் உடல் எடையைக் குறைக்க முடியும்.
இதனை அளவாக தினமும் கப் என குடித்து வர பாதுகாப்பான வழியில் உடல் எடை குறையும்.
ஆகவே எடையைக் குறைக்க உதவும் பானங்களுள் சிறந்த ஒன்றாக கிரீன் டீயை சொல்லலாம்.
வலி மற்றும் அழற்சியை சரி செய்தல்
கிரீன் டீ எலும்புகள், குருத்தெலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகமாக்குகின்றது.
மேலும் கிரீன் டீயின் உட்பொருட்கள், ருமட்டாய்ட் ஆர்த்ரட்டீஸ் போன்ற நிலைமைகளை எந்தவொரு பக்க விளைவுகளும் இல்லாமல் குறைக்கின்றது.
மேலும் இவை, குடலில் ஏற்படும் சுய நோயெதிர்ப்பு நோயான கொலிட்டஸ் என்பதன் அறிகுறிகளை சரிசெய்வதிலும் உதவுகின்றன.
கிரீன் டீயில் ஏராளமான வைட்டமின் பி, சி மற்றும் ஈ ஆகியவையும் உள்ளன. இவை செரிமானத்திற்கு முக்கியமானவை.
சர்க்கரை நோய்
கிரீன் டீயில் உள்ள பாலிஃபீனால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்கி, சர்க்கரை நோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.
கொரியன் ஆய்வு ஒன்றில், க்ரீன் டீயை குடிப்பதால், டைப்-2 சர்க்கரை நோயின் அபாயம் 33% குறைவாக தெரிய வந்துள்ளது.
புற்றுநோய்
மேலும் இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் இரத்தத்தை சுத்தம் செய்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டு உடலில் தேவையற்ற கட்டிகளை வளர விடாது.
பெருங்குடல், மார்பகம் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகளை கிரீன் டீ குறைக்கிறது.
வாய் துர்நாற்றம்
கிரீன் டீயை ஒருவர் தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள உட்பொருட்கள் வாயை புத்துணர்ச்சியுடன் வைப்பதோடு, வாய் துர்நாற்ற பிரச்சனையில் இருந்தும் விடுவிக்கும்.
இரத்த அழுத்தம் / இதய நோய்
எனவே இதய நோயின்றி வாழ கிரீன் டீ குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
உடலுக்கு ஆற்றல்
மெட்டபாலிசத்தை தூண்டி, கொழுப்புச் செல்களை கரையச் செய்து, உடல் எடை குறைய வழிவகுக்கும். இதனால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் க்ரீன் டீ அருந்தலாம்.
கொலஸ்ட்ரால்
கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள், கிரீன் டீயை வெறும் வயிற்றில் ஒரு கப் குடித்தால்,
அதில் உள்ள மருத்துவ பண்புகள் உடலில் ஆங்காங்கு தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைத்து, உடலை சிக்கென்று ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
மூளை ஆரோக்கியம்
ஆய்வு ஒன்றில், வாரத்திற்கு குறைந்தது 6 கப் கிரீன் டீ குடிப்பவர்களுக்கு, மூளை சம்பந்தப்பட்ட நோய்கள் தாக்கும் அபாயம் குறைவு என தெரிய வந்துள்ளது. கிரீன் டீயில் சிறிதளவு காஃபின் (Caffeine) இருக்கிறது.
இது மூளையில் உள்ள நியூரோ டிரான்ஸ் மீட்டர்களைத் தூண்டி, நரம்பு இயக்கங்களைப் புத்துணர்ச்சி அடையச் செய்கிறது.இதனால் சுறுசுறுப்பான உணர்வு கிடைக்கும். மூளை நன்றாக இயங்கும்.
ஆரோக்கியத்தையும் மேம்படுத்துமா? இது உண்மையா?
ReplyDelete