பால், தயிர், மோர், நெய்... பால் பொருள்கள் நமக்குப் புதிதல்ல. ஆதிகாலத்திலிருந்து தமிழரின் உணவுப் பழக்கத்தில் மிக முக்கியமான இடம் இந்த ஆரோக்கிய உணவுகளுக்கு எப்போதும் உண்டு.
அதிலும், பட்டையைக் கிளப்புகிற வெயிலுக்கு லஸ்ஸி, அமிர்த பானம். மேலும் இது ஆரோக்கியமான புத்துணர்ச்சி ஏற்படுத்தும் பானமாக உள்ளது.
இந்த பாரம்பரிய பானமானது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்க கூடிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த பானமாக உள்ளது.
கோடை காலங்களில் லஸ்ஸிக்கான மவுசே தனி. அப்படி ஓர் ஆனந்தம், மனதுக்கு உற்சாகம், இதம் அத்தனையும் தரும். நம் சுவை நரம்புகளைத் தூண்டி, நம்மை மெய்மறக்கச் செய்யும் சக்தி இதற்கு உண்டு.
சரி... லஸ்ஸி வெறும் தாகம் தீர்க்கும் பானம்; உடனடி சக்தியையும் உற்சாகத்தையும் கொடுக்கும் பானம். அவ்வளவுதானா? இல்லை. அதோடு, `பல மருத்துவப் பயன்களையும் தரக்கூடியது’ என்கிறார்கள் மருத்துவர்கள்.
பலன்களும் சத்துகளும்
உடலை குளிர்ச்சியாக்க
உடலை குளிரூட்டக்கூடிய முக்கியமான பானமாக லஸ்ஸி உள்ளது. தயிர் மற்றும் தண்ணீரை ஒன்றாக கலப்பதன் மூலம் இது தயாரிக்கப்படுகிறது.
பின்னர் அதில் சுவையை கூட்டுவதற்காக உப்பு அல்லது சர்க்கரை சேர்க்கப்படுகிறது. இப்போது எல்லாம் லஸ்ஸி குளிர்விக்கப்பட்டு பெரிய கண்ணாடி டம்பளர்களில் பரிமாறப்படுகிறது.
தமிழ்நாட்டிலும் எளிதாகவும் பரவலாகவும் கிடைக்க கூடிய பிரபலமான பானமாகவே லஸ்ஸி உள்ளது. மேலும் பஞ்சாபி உணவுகளான ஆலு பரோட்டா, போன்ற உணவுகளுடன் இந்த பானம் வழங்கப்படுகிறது.
மிக சுவையான பானம் என்பதையும் விட லஸ்ஸி மிக ஆரோக்கியமான பானமாகும். இது பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.
செரிமான சக்தி
இது குடல்களை உய்வூட்டி அதன் மென்மையான செரிமானத்திற்கு உதவுகிறது. எனவே லஸ்ஸி அருந்துவது உங்கள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
உடனடி எனர்ஜி
வைட்டமின் பி 12 ரத்தத்தில் உள்ள குளூக்கோஸை ஆற்றலாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இதில் வைட்டமின் பி 12 இருப்பதால், ஒரு டம்ளர் லஸ்ஸி குடித்தால் உடனடி ஆற்றல் கிடைக்கும். தொடர்ச்சியாக, லஸ்ஸி சாப்பிட்டு வந்தால், வைட்டமின் பி 12 (Vitamin B12 Deficiency) குறைபாட்டு நோய் நீங்கும்.
புரோபயாடிக்
மேலும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அளவிட உதவும் புரோபயாடிக்குகளை இது கொண்டுள்ளது. இதனால் நமது உடலின் ஒட்டு மொத்த நன்மைக்கும் இது உதவுகிறது.
உடலுறவில் நாட்டம் உண்டாகும்
லஸ்சியில் உள்ள ஊட்டச்சத்துகளுக்கு உடலுறவில் நாட்டம் உண்டாக்கும் சக்தி இருக்கிறது. புரோபயாட்டிக்ஸ் உணவு என்பதால், ஆண்மைக்குறைவைத் தடுக்கவும் உதவும்.
நோய் எதிர்ப்பு சக்தி :
இது நோயெதிர்ப்பு மண்டலங்களின் சக்தியை அதிகரிப்பதோடு பல வித நன்மைகளை செய்கிறது. மேலும் பல்வேறு வகையான நோய்களுக்கு எதிராக போராட உடலை தயார் செய்கிறது.
எலும்பு ஆரோக்கியத்திற்கு
லஸ்ஸி கால்சியம் சத்து நிறைந்த பானமாக உள்ளது. கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்து என்பது பலரும் அறிந்த விஷயமே.
இதனால் எலும்பு வலுவாக இருப்பதற்கு லஸ்ஸி உதவுகிறது. மேலும் அடிக்கடி லஸ்ஸி அருந்துவதால் ஒட்டு மொத்த எலும்புகள் மற்றும் பற்கள் தங்களுக்கு தேவையான கால்சியம் சத்துக்களை பெற முடிகிறது.
இதனால் உங்கள் பற்கள் மற்றும் எலும்புகள் நீண்ட நாட்களுக்கு உறுதியாக இருக்க இது உதவுகிறது.
சருமத்திற்கு நல்லது :
மேலும் இது சரும அமைப்பை மேம்படுத்தவும் சருமம் அழகாகவும் இளமையாகவும் இருக்க உதவுகிறது. இதனால் நாம் நீண்ட நாட்களுக்கு இளமையான தோற்றத்தை பெறலாம்.
எனவே சருமத்திற்கு பெரும் நன்மையை ஏற்படுத்த கூடிய ஒரு பானமாக லஸ்ஸி உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை மிக எளிதாக கிடைக்ககூடிய ஒரு பானமாகவே லஸ்ஸி உள்ளது.
மேலும் வீட்டில் கூட மிக எளிமையாக நம்மால் லஸ்ஸி தயாரிக்க முடியும். இப்போது நாம் அதன் ஆரோக்கிய நன்மைகளை பார்த்து விட்டோம்.
எனவே குறைந்த செலவில் இந்த வெயில் காலத்தில் ஒரு ஆரோக்கியமான பானத்தை செய்ய நினைப்பவர்கள் கண்டிப்பாக லஸ்ஸியை தேர்ந்தெடுக்கலாம். அது உங்களுக்கு பல வகையான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்
மலச்சிக்கல், வயிற்றுப் புண், வயிறு உப்புசம் உள்ளிட்ட வயிற்று உபாதைகளைச் சரியாக்கும்.
கவனம்
மேலும் உப்பு, காரப் பொருள்கள் சேர்த்துத் தயாரிக்கப்படும் லஸ்ஸிகளும் உள்ளன. இவை வெயில் காலத்துக்கு ஏற்றவையல்ல.
பனி மற்றும் மழைக் காலத்துக்கு உகந்தவை. சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்த லஸ்ஸியைத் தான் வெயில் காலத்தில் குடிக்க வேண்டும். இதை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.