கொத்து பரோட்டா தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு உணவு வகை. குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் கொத்து பரோட்டாவிற்கென ஒரு தனி கூட்டமே உண்டு.
தேவையான பொருட்கள் . :
பரோட்டா - 3
சிக்கன் எலும்பு - ½ கிலோ
முட்டை - 4
பெரிய வெங்காயம் - 4
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 6 பல்
இஞ்சி - 1 துண்டு
துருவிய தேங்காய் - ½ கப்
ஏலக்காய் - 2
கிராம்பு - 3
பொட்டுக்கடலை - 2 மேஜைக்கரண்டி
மிளகு - 1 மேஜைக்கரண்டி
சோம்பு - 1 மேஜைக்கரண்டி
சீரகம் - 1 மேஜைக்கரண்டி
கசகசா - 1 மேஜைக்கரண்டி
பிரியாணி இலை - 2
மஞ்சள் தூள் - ½ மேஜைக்கரண்டி
மல்லி தூள் - 1 மேஜைக்கரண்டி
மிளகு தூள் - 1 மேஜைக்கரண்டி
மிளகாய் தூள் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
வியப்பளிக்கும் மருத்துவ குணங்களை கொண்ட நெய் !
செய்முறை . :
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், 3 பல் பூண்டு, கருவேப்பிலை, மற்றும் கொத்த மல்லியை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி,
சுவையான வாழைக்காய் கட்லெட் செய்வது எப்படி?
பின்பு ஒரு pan ஐ அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் ஒரு துண்டு பட்டை, ஏலக்காய், கிராம்பு, மிளகு, 2 மேஜைக்கரண்டி சோம்பு, சீரகம், கசகசா, மற்றும் பொட்டுக் கடலையை போட்டு நன்கு வறுக்கவும்.
பிறகு அதில் துருவி வைத்திருக்கும் தேங்காயை போட்டு அது நன்கு பொன் நிறம் வரும் வரை அதை வறுக்கவும். பின்பு அதை இறக்கி கீழே வைத்து சிறிது ஆரிய பின் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு அரைத்து கொள்ளவும்.
பின்பு அதனுடன் நறுக்கி வைத்திருக்கும் 2 வெங்காயம் மற்றும் ஒரு சிட்டிகை அளவு உப்பு சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மல்லி தூள்,
அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மிளகாய் தூள், மற்றும் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் 2 தக்காளியை போட்டு தக்காளி வதங்கியவுடன் அதில் நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கன் எலும்பு சேர்த்து அது நன்கு மசாலாவுடன் சேருமாறு அதை நன்கு கிளறி விடவும்.
பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மூடி போட்டு சிக்கன் எலும்பு நன்கு வேகும் வரை அதை வேக விட்டு பின்பு அடுப்பை அணைத்து விட்டு அதை அப்படியே வைத்து கொள்ளவும்.
அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி, அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்க்கி
அதில் நறுக்கி வைத்திருக்கும் பூண்டு, பச்சை மிளகாய், மற்றும் கருவேப்பிலையை சேர்த்து பூண்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
பின்பு அதில் தக்காளி, தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு மிளகு தூள் சேர்த்து வதக்கி
பின்னர் அதில் சிறு சிறு துண்டுகளாக ஆக்கி வைத்திருக்கும் பரோட்டாவை போட்டு நன்கு கிளறி விடவும்.
சுவையான மதுரை கறி தோசை செய்வது எப்படி?
பின்பு அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கொத்த மல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து நாம் செய்து வைத்திருக்கும் சிக்கன் சால்னாவுடன் அதை சுட சுட பரிமாறவும்.
இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான முட்டை கொத்து பரோட்டா மற்றும் சிக்கன் சால்னா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.