குழந்தைகளுக்கு எக்லெஸ் சாக்கோ சிப்ஸ் கப் கேக் செய்வது எப்படி?





குழந்தைகளுக்கு எக்லெஸ் சாக்கோ சிப்ஸ் கப் கேக் செய்வது எப்படி?

0

19-ம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் சின்னச் சின்ன கப்கள் மற்றும் மண்ணால் ஆன பாண்டத்தில் கேக் கலவையை வைத்து அடுப்பில் சுட்டு எடுத்தனர். 

குழந்தைகளுக்கு எக்லெஸ் சாக்கோ சிப்ஸ் கப் கேக்
பெர்ரி கேக், பட்டி கேக், கப் கேக் போன்ற பெயர்களில் தயாரிக்கப்பட்ட கப் கேக், பல சுவைகளிலும் செய்யப்பட்டது. சாக்லெட் பிரியர்களின் சந்தோஷத்தை அள்ளும் விதமாக, சாக்லெட் கப் கேக்குகளும் செய்யப்பட்டன.

ஆரம்பத்தில், கப் கேக் என்பதை இருவிதமாக புரிந்துகொண்டனர். அதாவது, கேக் செய்யத் தேவையான மூலப்பொருட்களை, குறிப்பிட்ட கொள்ளளவு உள்ள 

கப்பினால் அளந்து அளந்து செய்வது முதல் வகை. கப் போன்ற சின்னச்சின்ன மண் பாண்டத்தில் மூலப்பொருட்களை நிரப்பி, வெப்பப்படுத்தி எடுப்பது இரண்டாம் வகை.

குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் கப் கேக் என்றால் சொல்லவே வேண்டாம் குஷியாகி விடுவார்கள். இதற்கு மைதா மாவு, சர்க்கரை, எசென்ஸ், கோகோ ஆகியவை இருந்தாலே போதும். கப் கேக்  பல விதமாக செய்யலாம். 

சாக்லேட் கப் கேக், வெண்ணிலா கேக், கேரட் கேக், ஸ்டாபெரி கேக். நான் கீழே மிகவும் சுலபமான முறையில் குறைவான நேரத்தில் செய்யலாம். நீங்கள் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தரலாம் அல்லது காபி அல்லது டீ யுடன் பரிமாறலாம். 

கேக் செய்வதற்கு நீங்கள் அகலமான பாத்திரம் பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது பிரஷர் குக்கரின் washer எடுத்து விட்டு பயன்படுத்தலாம். கேக் செய்யும் பொழுது தீயை மிகவும் குறைவாக வைத்துக் கொள்ளவும் அல்லது கரிந்து போவதற்கு வாய்ப்புள்ளது.

இன்று வீட்டிலேயே எளிய முறையில் எக்லெஸ் சாக்கோ சிப்ஸ் கப் கேக் செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானவை:

மைதா மாவு -  40 கிராம்

சர்க்கரை - 50 கிராம்

கோகோ பவுடர் - 10 கிராம்

பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்

பேக்கிங் சோடா -  கால் டீஸ்பூன்

எண்ணெய் - 50 மில்லி

வெனிலா எசென்ஸ் - அரை டீஸ்பூன்

வெதுவெதுப்பான நீர் -  60 மில்லி

சாக்கோ சிப்ஸ் - 10 கிராம்

செய்முறை:

அகலமான பாத்திரத்தில் மைதா மாவுடன், கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, சாக்கோ சிப்ஸ் சேர்த்துக் நன்றாக கலக்கவும். 

பிறகு சர்க்கரை, எண்ணெய், வெனிலா எசென்ஸ், வெது வெதுப்பான நீர் சேர்த்துக் கலக்கவும்.  `

கப் கேக் லைனர்ஸ்’ ஸில் கேக் கலவையை ஊற்றி 150 டிகிரி செல்‌ஷியஸுக்கு ப்ரீஹீட் செய்த அவனுள் வைத்து 20 நிமிடங்கள் வரை `பேக்’ செய்து எடுக்கவும்.

இப்போது சூப்பரான எக்லெஸ் சாக்கோ சிப்ஸ் கப் கேக் ரெடி.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)