வீட்டுக்கு ஒரு கொய்யா மரம் வளர்த்தாலே போதும் உங்க பிணிகளை ஓட்டி விட முடியும். கொய்யா இலையில் நம் உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் அனைத்தும் அடங்கியுள்ளன.
நிறைய ஆண்களுக்கு போதுமான விந்தணுக்கள் இல்லாததால் கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கும். இதனால் கருத்தரிப்பு தள்ளிப் போட்டுக் கொண்டே வரும்.
ஆண்கள் தங்கள் விந்தணுக்கள் உற்பத்தியை பெருக்க கொய்யா இலைகளை டீ போட்டு குடிக்கலாம். இது விந்தணு உற்பத்தியை பெருக்கி சீக்கிரமே கருத்தரிக்க உதவுகிறது.
உடல் பதட்டம் இல்லாமல் இருக்கின்ற வேளையில், உயிரணுக்கள் உற்பத்தி சீராகத் தூண்டப் படுவதற்கு உங்கள் உடல் ஒத்துழைக்கும்.
கொய்யா இலை டீ விந்து உயிரணுக்களின் எண்ணிக்கை சீராக அதிகரிக்கவும் வலிமையாகவும் தொடங்கும். இந்த கொய்யா இலை டீ எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கொய்யா இலை - 5
தண்ணீர் - தேவைக்கேற்ப
தேயிலை தூள் - சிறுதளவு
கருப்பட்டி
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள். பிறகு அதில் சிறுது தேயிலை தூள், கொய்யா இலைகளை போட்டு மறுபடியும் கொதிக்க விடவும்.
பிறகு இந்த தண்ணீரை வடிகட்டி குடித்து வாருங்கள். ஆரோக்கியமான கொய்யா இலை டீ ரெடி.