குழந்தைகளுக்கு பிடித்த ஹாப்பி ஹாப்பி பிஸ்கட் கேக் செய்வது எப்படி?





குழந்தைகளுக்கு பிடித்த ஹாப்பி ஹாப்பி பிஸ்கட் கேக் செய்வது எப்படி?

0

குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்று பிஸ்கட். ஆனால் இந்த பிஸ்கட்டுக்கள் நமது உடலுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுத்தும் என்பது தெரிந்தால், இனி சாப்பிட கொடுக்க மாட்டீர்கள். 

ஹாப்பி ஹாப்பி பிஸ்கட் கேக்

பிஸ்கட் தயாரிப்பின் போது அதிக வெப்ப நிலையில் எண்ணெய், டால்டா போன்றவற்றை சூடுபடுத்தும் போது உருவாகும். 

இந்த  டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் எத்தனை சதவிகிதம் இருக்கின்றன என்பதை அதன் உறையில் பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை. 

இந்த அமிலங்கள் உடலில் அதிகம் சேர்ந்தால் கொழுப்பின் அளவு அதிகமாகி இதயநோய்கள் உருவாகும் அபாயம் உண்டு. பிஸ்கெட் கெட்டுப் போகாமல் இருப்பதற்காகவும் சுவைக்காகவும் உப்பை அதிகம் பயன்படுத்துகிறார்கள். 

உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இவற்றை சாப்பிடுவது தேவையற்ற விளைவுகளையே உண்டாக்கும். 

இதை விட சுவை, நிறம், பதப்படுத்துதல் போன்ற காரணங்களுக்காகப் பயன்படுத்துகிற சில வேதிப்பொருட்கள் தடை செய்யப் பட்டவையாகவும் இருக்கலாம்.

கேக் என்றால் அதற்கு ஓவன் தேவைப்படும் என்று நினைப்பீர்கள். இந்த ஹாப்பி ஹாப்பி பிஸ்கட் கேக் செய்வதற்கு மைக்ரோ ஓவன் தேவைப்படாது வெறும் கேஸ் அடுப்பில் குக்கரை பயன்படுத்தி தான் சாக்லேட் கேக் செய்ய போகின்றோம். 

கேக் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே இந்த பதிவில் அனைவருக்கும் மிகவும் பிடித்த பிஸ்கட் கேக் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

ஹாப்பி ஹாப்பி பிஸ்கட் -   4

சீனி - தேவையான அளவு

பால் -  ஒரு கப்

பேக்கிங் பவுடர் - தேவையான அளவு

செய்முறை

முதலில் ஹாப்பி ஹாப்பி பிஸ்கட் மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு அரைத்த கலவையுடன் பால் சேர்த்து ஒரு ஸ்பூன் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக கிளறவு ம்.

அதனுடன் ஒரு கப் சீனியை அரைத்து எடுத்து அதனுடன் சேர்த்து நன்றாக கிளற வேண்டும் இப்போது கலவை ரெடி.

ஒரு குக்கரில் எண்ணெய் தடவி அதில் அந்த கலவையை ஊற்ற வேண்டும் அதன் மேல் நாம் எடுத்து வைத்துள்ள பாதாமை துருவிக் கொள்ள வேண்டும்

பின்பு ஒரு 40 நிமிடம் குறைந்த தீயில் வேக வைத்து எடுத்தால் சுவையான ஹாப்பி ஹாப்பி பிஸ்கட் ரெடி

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)