வேர்க்கடலை கோதுமை ரவை பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி? #Kolukattai





வேர்க்கடலை கோதுமை ரவை பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி? #Kolukattai

0

கோதுமை பஞ்சாபிகளின் முதன்மையான உணவு. தற்போது தென்மாநில மக்களிடமும், கோதுமை தனியிடம் பிடித்து வருகிறது. பொதுவாக தெரிந்த இந்த குணங்களை தவிர சிறப்பு தன்மைகள் பல நிறைந்தது. 

வேர்க்கடலை கோதுமை ரவை பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி?
முதுகுவலி, மூட்டுவலியால் அவதிப் படுபவர்களுக்கு கோதுமையை வறுத்து பொடித்து, அதனுடன் தேன் சேர்த்து உட்கொள்ள கொடுக்க அந்த வலி குணமாகும்.

சுவையான வறுத்தரைத்த காளான் குழம்பு செய்வது எப்படி?

வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமை ரவையை கஞ்சி செய்து குடித்தால் உடனே நிவாரணம் பெறலாம்.

கோதுமை மாவை அக்கிப்புண், நெருப்பு பட்ட இடம், மேல் தோல் உரிந்துபோன இடம் ஆகியவற்றில் தூவினாலும் அல்லது வெண்ணெய் கலந்து பூசினாலும் எரிச்சல் தணியும்.

கோதுமை மாவை களியாக செய்து கட்டிகளுக்கு வைத்து கட்ட அவை சீக்கிரம் குணமாகும்.வியர்க்குருவால் அவதிப்படுபவர்கள் கோதுமை மாவை புளித்த காடி நீரில் கலந்து பூசிவர அவை விரைவில் மறையும். 

கோதுமையை உணவில் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு உடல் பலம் அதிகரிக்கும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும். 

கோதுமையை முந்தைய நாளே நீரில் ஊற வைத்து, காலையில் அடித்து பசையாக்கி, அதை மெல்லிய துணியில் இட்டு வடிகட்டி பிழிந்து வருகின்ற பால் கோதுமைப் பாலாகும்.

இந்த பாலை கப நோயாளிகள் பருக நல்ல பலன் கிடைக்கும். ரொட்டி கோதுமை மற்றும் மக்ரோனி கோதுமையைத் தவிர மற்றும் ஒரு கோதுமை வகைதான் சம்பா கோதுமை.

வேர்க்கடலை பெண்களின் ஹார்மோன் வளர்ச்சியை இது சீராக்குகிறது. இதனால், அவர்களுக்கு மார்பகக் கட்டி ஏற்படுவதையும் தடுக்கிறது. 

போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, வைட்டமின்கள் ஆகியவை நிலக்கடலையில் நிறைந்துள்ளன. உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வேர்க்கடலை சாப்பிடலாம். 

இளமை தோற்றத்தை தக்க வைக்கும் உணவுகள் ! 

பொதுவாக பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்புகளில் தான் சத்து அதிகம் உள்ளது என்று அனைவரும் எண்ணுகிறார்கள். ஆனால், நிலக்கடலையில் தான் இவற்றை யெல்லாம் விட சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்.

இத்தகைய நல்ல சத்துக்களை கொண்ட வேர்க்கடலையில்  வேர்க்கடலை கோதுமை ரவை பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

வேர்க்கடலை ரவை - ஒரு கப் (வேர்க்கடலையை ரவை போல பொடித்துக் கொள்ளவும்),

கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,

தேங்காய் துருவல் - கால் கப்,

காய்ந்த மிளகாய் - 3,

கோதுமை ரவை - அரை கப்,

கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை

வேர்க்கடலை கோதுமை ரவை பிடி கொழுக்கட்டை

கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வறுக்கவும். கறிவேப்பிலை, கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

பிறகு இதில் தேவையான தண்ணீர் விட்டு, உப்பை போட்டு கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் தேங்காய் துருவல், வேர்க்கடலை ரவை, கோதுமை ரவையைப் போட்டு 2 நிமிடம் கிளறவும்.

வெண்டைக்காய் சாப்பிட்டா வெவரமாகலாம் !

பிறகு அடுப்பிலிருந்து இறக்கி சிறிது நேரம் ஆறியதும், கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து இட்லி தட்டில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும். 

வேர்க்கடலை ரவை-கோதுமை ரவை பிடி கொழுக்கட்டை ரெடி. 

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)