உருளைக்கிழங்கு சாறு தயாரிப்பது எப்படி?





உருளைக்கிழங்கு சாறு தயாரிப்பது எப்படி?

0

பொதுவாக உருளைக்கிழங்கில் வைட்டமின் சி, பொட்டாசியம், கார்போஹைட்ரேட், புரதம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. 

உருளைக்கிழங்கு சாறு

உருளைக்கிழங்கில் உள்ள பொட்டாசியம் சத்துக்கள் இதய நோயாளிகளுக்கு மற்றும் ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு மருந்தாகச் செயல்படும். 

அதுவும் உருளைக்கிழங்கின் தோலில் அளவுக்கு அதிகமானப் பொட்டாசியம் சத்துக்கள் உள்ளன. ஆனால் நாம் என்ன செய்வோம்? அதனை நீக்கி விட்டு தான் சமைப்போம். 

சுவையான செட்டிநாடு இறால் பெப்பர் ப்ரை செய்வது எப்படி?

ஆனால் இந்தத் தோல்கள் தான் உடலில் கொழுப்புகள் சேராமல் தடுக்கிறது. அதே போல் உருளைக்கிழங்கு புண்களையும் ஆற்றும். அதாவது வயிற்றுப்புண், வாய்ப்புண், வயிறு தொடர்பான கோளாறுகளை நீக்கும். 

மேலும் இதனால் அசுத்தநீர் தங்காமல் வெளியேறி விடுகிறது. உருளைக்கிழங்கில் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் கூட சிலர் அதனை அதிகமாக எடுத்துக் கொள்ளுதல் கூடாது. 

உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் நேரடியாக எந்த பாதிப்பும் ஏற்படாது என ஒரு ஆய்வில் கண்டறியபட்டது. உருளைக்கிழங்கு சாற்றில் அதிக அளவு வைட்டமின் பி குடும்பத்தின் நியாசின் உள்ளது. 

இந்த வைட்டமின் உடல் உறுப்புகளின் பணியை மேம்படுத்தும். உடலின் பல்வேறு ஆக்ஸிஜனேற்றத்தை மேம்படுத்துவதோடு உறுப்புகள் உடலில் உண்டாகும் சிறிய சேதத்தை சரி செய்து கொள்ளவும், 

சாதாரண செயல்பாட்டுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களை வழங்குகிறது. இது ஹார்மோன் உற்பத்தியை மேம்படுத்துகிறது.

உருளைக்கிழங்கு சாறை தவறாமல் உட்கொள்வது மன அழுத்த ஹார்மோன்களின் அளவை மேம்படுத்த உதவும். பாலினம் சீராக இருக்க செய்யும்.

சரி வாங்க இனி  ​உருளைக்கிழங்கு சாறு தயாரிக்கும் முறைபற்றி பார்ப்போம்.

தேவையானவை :

உருளைக்கிழங்கு - 2

தண்ணீர் - 2 கப்

கீரை, முட்டை கோஸ், செலரி ஏதாவது ஒன்று - தேவையெனில் சேர்க்கலாம்.

மஞ்சள் - சிட்டிகை

கருப்பு உப்பு - சுவைக்கேற்ப

இஞ்சி சாறு - 1 டீஸ்பூன்

செய்முறை :

உருளைக்கிழங்கு சாறு தயாரிக்கும் முறை !

உருளைக்கிழங்கு சுத்தமாக தோல் நீக்கி விடுங்கள். பிறகு இதை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். 

இதை தண்ணீருடன் சேர்த்து 3 நிமிடங்கள் வேக வைத்து மசிக்கவும். பிறகு இதை மெல்லிய துணியில் வடிகட்டி விடவும். 

சுவையான பனீர் தோசை செய்வது எப்படி?

இதனுடன் இஞ்சி சாறு தேவையெனில் சேர்த்து குளிரூட்டப்பட்டு பிறகு குடிக்கலாம். இதை தனித்தும் தயாரிக்கலாம். அல்லது கீரை, முட்டை கோஸ், செலரி போன்றவற்றையும் சேர்த்து தயாரிக்கலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)