கருவாடு யாருக்கு தான் பிடிக்காது. சிலருக்கு கருவாடு வாசனை தான் பிடிக்காதே தவிர, சமைத்த பிறகு ஒருப்பிடி பிடிக்காமல் விட மாட்டார்கள்.
அசைவ உணவுகளில் அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவு மீன் மற்றும் கருவாடு தான். நீங்கள் இதுவரை பலமுறை கருவாட்டு குழம்பை செய்து சுவைத்திருப்பீர்கள்.
ஆனால் சிவகாசி ஸ்டைல் கருவாட்டு குழம்பை செய்து சுவைத்ததுண்டா? இந்த கருவாட்டு குழம்பானது வித்தியாசமான செய்முறையைக் கொண்டது.
ஆகவே இதன் சுவை சற்று தனித்தே தெரியும். உங்களுக்கு சிவகாசி ஸ்டைல் கருவாட்டு குழம்பை சுவைக்க ஆசையாக உள்ளதா
கீழே உங்களுக்காக சிவகாசி ஸ்டைல் கருவாட்டு குழம்பு செய்வது எப்படி? என்று கொடுத்துள்ளது. சமைத்து மகிழுங்கள்.
புளி - 1 சிறு எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் - 20 (பொடியாக நறுக்கியது)
தண்ணீர் - 1 கப்
நெத்திலி கருவாடு - 2 பாக்கெட்
தக்காளி - 1 (பெரியது மற்றும் பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4 (நீளமாக கீறியது)
சீரகத் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
பூண்டு - 5 பல் (நீளமாக கீறியது)
காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
நல்லெண்ணெய் - 1 /2 கப்
செய்முறை:
பின்னர் அந்த புளி நீரில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றைப் போட்டுக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பையும் தூவி ஒரு கப் நீர் ஊற்றி, கையால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
குழம்பானது ஓரளவு கெட்டியானதும், அதில் சுத்தம் செய்து வைத்துள்ள கருவாட்டை சேர்த்து கிளறி, ஒரு 10 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து இறக்கினால், சுவையான சிவகாசி ஸ்டைல் கருவாட்டு குழம்பு தயார்.
குறிப்பு:
கருவாட்டு குழம்பை தயாரித்த, ஒரு மணி நேரம் கழித்து சாப்பிட்டால் தான் அதன் சுவை நன்றாக இருக்கும்.