அருமையான திரங்கா புலாவ் செய்வது எப்படி?





அருமையான திரங்கா புலாவ் செய்வது எப்படி?

0

புலாவ் இந்தியர்களின் பிடித்தமான ஒரு உணவு வகை. இவை வெஜிடபிள் பிரியாணிக்கு அடுத்த இடத்தை பிடிக்கின்றன. இது குறிப்பாக காஷ்மீரிகளுக்கு மிகவும் பிடித்த உணவு வகை. 

அருமையான திரங்கா புலாவ்
புலாவில் பல வகை உண்டு. அதில் மட்டர் புலாவ், தவா புலாவ், பன்னீர் புலாவ், மஷ்ரூம் புலாவ், காஷ்மீரி புலாவ், மட்டன் புலாவ், மற்றும் சிக்கன் புலாவ் பிரசித்தி பெற்றது. 

ஆனால் வீட்டில் செய்யும் போது பெரும்பாலும் வெஜிடபிள் புலாவே இல்லத்தரசிகளின் தேர்வாக இருக்கிறது. 

ஆனால் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய இந்த திரங்கா புலாவ் மணமான மற்றும் சுவையானது மட்டுமல்லாமல் சத்தானதும் கூட.  

இதில் சேர்க்கப்படும் கீரை சாறு கண் பார்வைக்கு மற்றும் உடல் உறுப்புகள் சீராக இயங்குவதற்கு தேவையான விட்டமின்களை கொடுக்கிறது.  

இப்பொழுது கீழே சுவையான திரங்கா புலாவ் செய்வது எப்படி என்று காண்போம்.

தேவையானவை 

பாஸ்மதி அரிசி – 1 கப்

நெய் – 2 மேஜைக்கரண்டி

சீரகம் – 1/4 தேக்கரண்டி

இஞ்சி விழுது – 1 தேக்கரண்டி

தக்காளி விழுது – 1/4 கப்

மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி

மிளகாய் – 8

உப்பு - தேவைக்கேற்ப

வெள்ளை நிறத்திற்கு:

பாஸ்மதி அரிசி – 1 கப்

பச்சை நிறத்திற்கு:

நெய் – 2 மேஜைக்கரண்டி

சீரகம் – 1/4 தேக்கரண்டி

இஞ்சி விழுது – 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் விழுது – 1 தேக்கரண்டி

கீரை சாறு – 1/2 கப்

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

அடுப்பில் கடாய் வைத்து அதில் இரண்டு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் அதில் சாதம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். 

மற்றொரு பேனில் அதே போல நெய் ஊற்றி சூடானதும் சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் அதனுடன் இஞ்சி விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின்னர் மிளகாய் தூள், மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் தக்காளி விழுது, உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து சாதம் வேகும் வரை மூடி வைக்கவும். மற்றொரு கடாயில் மஞ்சள் தூள் மற்றும் சாதம் சேர்க்கவும். 

அதில் பச்சை மிளகாய் விழுது, இஞ்சி விழுது மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி, கீரை சாறு சேர்த்து கிளறி மூடி வைத்து வேக விடவும். 

ஒரு தட்டில் ரிங் மோல்ட் வைத்து அதில் பச்சை நிற புலாவ் வைத்து அழுத்தம் கொடுக்கவும். 

அடுத்து அதன் மேல் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிற புலாவ்களை ஒன்றன்மீது ஒன்று வைத்து அழுத்தம் கொடுக்கவும். 

ரிங் மோல்டை மெதுவாக எடுத்து ஒரு தட்டில் இந்த திரங்கா புலாவை சூடாக பரிமாறவும். அருமையான திரங்கா புலாவ் ரெடி.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)