பொதுவாக பிஸ்கட் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். குழந்தைகள் பிஸ்கட்டை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்த கோதுமை பிஸ்கட் செய்ய மிகவும் குறைவான பொருள்களே தேவைப்படும். இந்த கோதுமை பிஸ்கட்டை வீட்டில் நீங்கள் ஒரு முறை செய்தால் போதும் மீண்டும் வேண்டும் என்று விரும்பி சாப்பிடுவார்கள்.
சரி கோதுமை பிஸ்கட் செய்ய என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்பதை பற்றி பார்க்கலாம்.
நெய் - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப் (மிக்சியில் பொடிதாக அரைத்து கொள்ளுங்கள்)
கோதுமை மாவு - ஒரு கப்
கடலை மாவு - ஒரு கப்
ஏலக்காய் பொடி - ஒரு ஸ்பூன்
நட்ஸ் - சிறிதளவு
செய்முறை
பின் ஒரு கப் சக்கரையை மிக்சியில் பொடி செய்து இந்த நெய்யுடன் சேர்த்து திரும்பவும் Hand Beater-ஆள் நன்றாக கலந்து கொள்ளுங்கள், அதாவது நல்ல கிரீம் பதத்திற்கு வரும் அளவிற்கு கலந்து கொள்ளுங்கள்.
பின் ஒரு கப் கடலை மாவு, ஒரு கப் கோதுமை மாவு இவை இரண்டையும் நன்றாக கட்டிகள் இல்லாதவாறு சல்லடையில் சலித்து. பின் இந்த கலவையில் சேர்த்து நன்றாக பிசைந்து விடவும்.
இதனுடன் ஒரு ஸ்பூன் ஏலக்காய் பொடியினை சேர்த்து நன்கு கெட்டியாக பிசைந்து கோதுமை மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி லேசாக தட்டி கொள்ளுங்கள்.
பின் அதன் மீது பொடிதாக நறுக்கியாக நட்ஸினை வைத்து அழுத்தி விடவும்.இவ்வாறு மிதமுள்ள அனைத்து மாவையும் உருட்டி பிஸ்கட் போல் செய்து கொள்ளுங்கள்.
பின் அடுப்பில் ஒரு அகன்ற கடாய் வைத்து அந்த கடாயில் ஒரு ஸ்டாண்ட் வைத்து அந்த ஸ்டாண்ட் மீது செய்து வைத்துள்ள பிஸ்கட்டினை அந்த தட்டுடன் அப்படியே உள்ளே வைக்க வேண்டும்.
பின் கடாயை காற்று புகாத அளவிற்கு மூடி அடுப்பை மிதமான சூட்டில் வைத்து 15 முதல் 30 நிமிடங்கள் நன்றாக வேக வைக்கவும்.
30 நிமிடம் கழித்த பின் அடுப்பில் இருந்து இறக்கி, பிஸ்கட்டினை நன்றாக ஆற விடுங்கள். இப்பொழுது சுவையான கோதுமை பிஸ்கட் தயார்.
இந்த பிஸ்கட் சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாகவும், மொறு மொறுப்பாகவும், மிகவும் சாப்டாக இருக்கும். ஒரு முறை வீட்டில் ட்ரை செய்து பாருங்கள்.
குறிப்பு:-
கடாயில் தண்ணீர் ஊற்றக்கூடாது.