வேக்வம் ஃப்ரையிங் முறையில் உணவு தயாரிப்பது ஆரோக்கியமானதா?





வேக்வம் ஃப்ரையிங் முறையில் உணவு தயாரிப்பது ஆரோக்கியமானதா?

0

பொரித்த சிக்கன், மீன் வகையறாக்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு உயிரிழப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக பகீர் ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. 

வேக்வம் ஃப்ரையிங் முறையில் உணவு தயாரிப்பது ஆரோக்கியமானதா?
இந்த ஆய்வு `பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்’ என்ற மருத்துவ இதழில் அதிகார பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

ஆய்வுக்குட் படுத்தப்பட்ட அனைத்துப் பெண்களின் உணவுப் பழக்கங்களும், அவர்கள் உணவு உட்கொள்ளும் அளவும் ஆராயப்பட்டது. 

அதன் அடிப்படையில், 'பொரித்த சிக்கன், மீன், ஃப்ரெஞ்ச் ஃபிரைஸ், சிப்ஸ் போன்ற உணவுப் பொருள்களை அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு 

இதயநோய், புற்றுநோய், சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்' என்று கண்டறிந்துள்ளனர்.

பொரித்த சிக்கன், மீன் போன்ற உணவுகளை அதிகம் சாப்பிடாதவர்களைக் காட்டிலும் சாப்பிடுபவர்கள் மேற்கூறிய நோய்களால் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் 7 சதவிகிதம் அதிகமாக உள்ளது.

எண்ணெயில் உணவுகளைப் பொாிக்கும் முறை

மழைக் காலத்தின் மாலை வேளைகளில் சுடான மசாலா டீயை அருந்திக் கொண்டு அதற்கு துணையாக, 

எண்ணெயில் பொாித்த பக்கோடாவை சாப்பிடும் வாய்ப்புக் கிடைத்தால், அது ஒரு மிகச் சிறந்த அனுபவமாக இருக்கும். 

டீயோடு பக்கோடாவையும் சோ்த்து சாப்பிட்டால், அது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருந்தாலும், இவை அனைவராலும் அதிகமாக விரும்பப்படுகிறது.

இந்நிலையில் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்றால், உணவின் மீது இருக்கும் மோகத்தை நாம் குறைக்க வேண்டும். 

வேக்கும் ஃப்ரையிங் முறை

உணவின் மீது இருக்கும் மோகத்தைக் குறைக்கிறவா்களுக்கு மற்றும் உண்ணும் அளவைக் குறைக்கிறவா்களுக்கு இந்த பதிவு ஒரு ஆரோக்கியமான தீா்வைத் தரும் என்று நம்பலாம்.

பாரம்பாிய முறையில் அதாவது அதிக வெப்ப நிலையில் சூடாக இருக்கும் எண்ணெயில் உணவுகளைப் பொாிப்பதைக் கைவிட்டு, 

வேக்கும் ஃப்ரையிங் (குறைவான வெப்ப நிலையில் எண்ணெயில் உணவுகளைப் பொாிக்கும் முறை) என்ற புதிய முறையில் உணவுகளைப் பொாித்தால், 

அது உணவின் சுவையை அதிகாிப்பது மட்டும் அல்லாமல் உணவில் உள்ள ஊட்டச் சத்துக்களை வெளிவிடாமல் உணவிலேயே தங்க வைக்கும்.

வேக்கும் ஃப்ரையிங் (Vacuum Frying) என்றால் என்ன?

வேக்கும் ஃப்ரையிங் (Vacuum Frying) என்றால் என்ன?

வேக்கும் ஃப்ரையிங் என்பது உணவைப் பொாிக்கும் ஒரு புதிய முறையாகும். குறைவான அளவுள்ள எண்ணெயை, குறைவான வெப்பநிலையில் வைத்து 

அந்த எண்ணெயில் உணவுகளைப் பொாிக்கும் முறையே வேக்கும் ஃப்ரையிங் என்று அழைக்கப்படுகிறது.

இந்த புதிய முறையில் காற்றின் அழுத்தம் மற்றும் எண்ணெய் ஆகியவை இணைந்து உணவை வேக வைக்கின்றன. 

சாதாரண முறையில் சமைப்பதைவிட இந்த புதிய முறையில் வெப்பநிலை மிகவும் குறைவாக இருக்கும். 

அதனால் இது உணவின் கொதி நிலையைக் குறைத்து, உணவில் உள்ள ஊட்டச் சத்துக்களை வெளியில் விடாமல், உணவிலேயே தங்க வைக்கிறது. 

இந்த புதிய முறையில் உணவுகளைப் பொாிக்கும் போது, அது புற்று நோய்களுக்கான துகள்களை அதிகம் வெளியேற்றுவது இல்லை. 

அதோடு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான உணவை இந்த புதிய முறை உறுதி செய்கிறது.

வறுக்கும் போது என்ன ஆகிறது?

வறுக்கும் போது என்ன ஆகிறது?

எந்த உணவாக இருந்தாலும் அதனை அதிகம் வறுக்கும் போது, அது உணவை சிதைவடைய செய்து அதில் உள்ள புரோட்டின்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை சிதைக்கிறது, 

அதனால் தான் உணவு சிவந்து விடுகிறது. ஊட்டச்சத்துக்கள் சிதைவடைந்த இந்த எண்ணெயை மீண்டும் உபயோகிக்கும் போது அது பல ஆரோக்கிய பிரச்சினைகளை உருவாக்கலாம். 

இப்படி அதே எண்ணெயை மீண்டும் உபயோகிப்பது ஆர்தோகுளோரோசிஸ் என்னும் நோயை உண்டாக்குகிறது. இதனால் உடலில் கெட்ட கொழுப்புகளின் அளவு அதிகரிக்கிறது.

வேக்கும் ஃப்ரையிங் மற்றும் பாரம்பாியமாக உணவுகளைப் பொாிக்கும் முறை

வேக்கும் ஃப்ரையிங் மற்றும் பாரம்பாியமாக உணவுகளைப் பொாிக்கும் முறை

வேக்கும் ஃப்ரையிங் முறையில், எண்ணெய் மிகவும் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுகிறது. 

ஆனால் பாரம்பாிய முறையில் அளவுக்கு அதிகமாக எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. புதிய முறையில் உணவானது எல்லாப் பக்கங்களிலிருந்தும், சமமாக வேக வைக்கப்படுகிறது.

எண்ணெயை குறைவாகப் பயன்படுத்துதல்

எண்ணெயை குறைவாகப் பயன்படுத்துதல்

பாரம்பாிய முறையோடு வேக்கும் ஃப்ரையிங் முறையை ஒப்பிடும் போது, இந்த புதிய முறையில் 70 சதவீத எண்ணெயே பயன்படுத்தப்படுகிறது. 

அதனால் இது நமது உடல் உறிஞ்சும் கொழுப்பின் அளவை குறைக்கிறது. 

மேலும் கெட்ட கொழுப்பின் அளவையும் அதனால் விளையும் நோய்களையும் இது குறைக்கிறது என்று நிபுணா்கள் தொிவிக்கின்றனா்.

ஊட்டச்சத்துக்களைத் தங்க வைத்தல்

ஊட்டச்சத்துக்களைத் தங்க வைத்தல்

வேக்கும் ஃப்ரையிங் முறையில், உணவுகளில் உள்ள நீா் சத்துகள் மட்டுமே வெளியேற்றப் படுகின்றன. 

மேலும் இந்த புதிய முறையில் குறைவான வெப்பநிலையில் உள்ள எண்ணெயில் உணவுகள் பொாிக்கப்படுவதால், 

உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துகள் வெளியேறாமல், அப்படியே உணவுகளில் தங்கி இருக்கும்.

குறைவான வெப்பநிலையில் எண்ணெயை சூடுபடுத்துதல்

குறைவான வெப்பநிலையில் எண்ணெயை சூடுபடுத்துதல்

எண்ணெயின் மறுபயன்பாடு என்பது அதன் தன்மை மற்றும் அது சூடுபடுத்தப்படும் வெப்பநிலையை பொறுத்து அமைகிறது. 

ஊட்டசத்து நிபுணர்களின் கருத்துப்படி சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை அதிக வெப்பநிலையில் சூடுபடுத்தலாம், 

ஆனால் ஆலிவ் எண்ணெய், எள் எண்ணெய் போன்றவற்றை அதிக வெப்பநிலைக்கு சூடுபடுத்துவதை தவிர்க்கவும்.

பாரம்பாியமாக பொாிக்கும் முறையோடு, இந்த புதிய முறையை ஒப்பிட்டு பாா்த்தால், இந்த புதிய முறையில் எண்ணெய் குறைவான வெப்பத்தில் வேக வைக்கப்படுகிறது. 

குறைவான வெப்பநிலையில் உள்ள எண்ணெயில் உணவுகளைப் பொாித்தால், அந்த உணவு கருகி விடாமல் இருப்பதோடு, 

நமது உடலுக்கு ஆரோக்கிய மானதாகவும் அதே நேரத்தில் பாதுகாப்பானதாகவும் இருக்கும்.

உங்களுக்கு தெரியுமா? 

உங்களுக்கு தெரியுமா?

வீட்டில் உபயோகப்படுத்தும் எண்ணெய் கடைகளில் உபயோகப்படுத்தும் எண்ணெயை விட விரைவில் கெட்டு விடும். 

இதற்கு காரணம் கடைகளில் செய்யப்படும் வெப்ப ஏற்பாடுகள் மற்றும் உபயோகிக்கும் பாத்திரங்கள் தான். வீட்டில் வறுக்கும் போது உணவுத் துகள்கள் பாத்திரத்தின் அடியில் சென்று சென்று விடும், 

ஆனால் கடைகளில் செய்யப்பட்டுள்ள அமைப்புகளில் இவ்வாறு நடக்காது. இவ்வாறு எண்ணெயில் உணவு துகள்கள் அதனை விரைவில் அதன் மூலக்கூறுகளை சிதைக்கும்.

எண்ணெயை மீண்டும் உபயோகிக்கலாமா? கூடாதா?

எண்ணெயை மீண்டும் உபயோகிக்கலாமா? கூடாதா?

உபயோகித்த எண்ணெயை நன்கு மூடிய பாத்திரத்தில் சேமிக்கவும். ஒருவேளை சேமிக்கப்பட்ட எண்ணெய் அடர் நிறத்திற்கோ, 

தடிமனாகவோ அல்லது வழவழப்பாகவோ மாறினால் அந்த எண்ணெயை மீண்டும் உபயோகப்படுத்தாதீர்கள். 

உணவு துகள்களுடன் திறந்து வைக்கப்பட்டிருந்த எண்ணெயை எக்காரணத்தை கொண்டும் மீண்டும் உபயோகிக்காதீர்கள்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)