ருசியான பதார்த்தங்களை கொண்டாடும் சேலம் மக்களின் அன்றாட வாழ்வில் குழம்புக் கடைகளும் தற்போது இடம் பிடித்திருக்கின்றன. சேலத்து மக்களின் உணவுப் பழக்க வழக்கம் மிகவும் சுவாரசியமானது.
இங்கே 200க்கும் மேற்பட்ட குழம்பு கடைகள் உள்ளன. வீட்டு முறைப்படி பெண்களே சமைத்து விற்பனை செய்கின்றனர்.
இங்கு வீட்டில் வைக்கும் சாம்பார், வத்தக்குழம்பு, காளான் குழம்பு, மோர் குழம்பு, எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு, சுண்டைக்காய், புளிக்குழம்பு, ரசம், கீரை குழம்பு வகைகள், பொரியல், சைடு டிஷ் ஆக வடை உள்ளிட்டவை சமைக்கப் படுகின்றன.
அதே போல அசைவத்தில் சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு, சிக்கன் வறுவல், மட்டன் வறுவல், காடை பிரை, குடல் போட்டி, சில்லி சிக்கன், மீன் குழம்பு, மீன் வறுவல், பிரியாணி என்ற வகைகள் செய்யப்படுகின்றன.
காலை, மதியம், இரவு என மூன்று வேளைக்கும் குழம்புகளை சமைத்து, அரசு அனுமதித்த குறைந்த மைக்ரான் கொண்ட பாலிதீன் பைகளில் கட்டிக் கொடுகின்றனர்.
மேலும் கல்யாணம், சீமந்தம், புதுமனை புகுவிழா என்று சின்ன சின்ன விஷயங்களுக்கும், ஆர்டரின் பேரில் இங்கிருந்து சமைத்துக் கொடுக்கிறோம் என்கிறார்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளவர்கள்.
சில வீடுகளில், ஆண், பெண் இருவரும் வேலைக்கு செல்வதால், வீட்டில் சமைக்க நேரம் இருக்காது.
இதனால் வெறும் சாதம் மட்டும் வைத்துக் கொண்டு 20 ரூபாய்க்கு குழம்பு வாங்கிக் கொண்டு போனால் போதும், அதை வைத்து குடும்பமே சாப்பிட்டு கொள்ளலாம்.
அதோடு கொரோனா .சூழலில் வீட்டில் சமைக்கும் வேலையை பெருமளவு குறைத்துள்ளது இந்த குழம்பு விற்பனை கடைகள்.
சேலம் குகை பகுதியில் இத்தகைய கேட்டரிங் நடத்தி வரும் கவிதா கூறியதாவது
குகை பகுதியில் அவரைக்கொட்டை கூட்டு பிரபலம். வேலைக்கு செல்லும் கணவன், மனைவி உள்ள வீடுகளில் குழம்பை மட்டும் வாங்கிக் கொண்டு வீட்டில் சாப்பாட்டை சமைத்து கொள்வார்கள்.
ஒரு நாளைக்கு குழம்பு, ரசம், பொரியல், சுண்டல், உருளைக் கிழங்கு, மசால்வடை, மீல் மேக்கர் சுக்கா என பல்வேறு வகை உணவுப் பொருள்களை விற்போம்.
ஒவ்வொரு நாளுக்கும் ஒரு வகை குழம்பு விற்போம். இந்த பகுதியில் சைவம் மற்றும் அசைவ கடைகள் உள்ளன. வீட்டு சமையல் போல் உள்ளதால் ஏராளமானோர் வந்து வாங்கி செல்வார்கள்.
அதை ஹோட்டலில் வாங்கினால் 4 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை ஆகும். எங்கள் வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் இந்த தொழில் ஈடுபட்டு வருகிறோம்.
இந்த வியாபாரம் கொரொனா காலத்தில் எங்களுக்கு மிகவும் கைகொடுக்கிறது, என்றார் கவிதா.
மற்றொரு கேட்டரிங் நிர்வாகி நந்தகோபாலன் பேசுகையில், வீட்டில் உள்ள பெண்கள் வீட்டு வேலை போக மீதி நேரத்தை சரியான முறையில் பயன்படுத்த இந்தக் கடை தொடங்கினோம்.
இங்கு நெசவு தொழில்தான் அதிகம். அப்படிப் பட்டவர்களுக்கு வீட்டில் சமைக்க போதுமான நேரம் கிடைக்காது. அதனால் இங்கு குழம்பு மட்டும் வாங்கிக் கொள்வார்கள்.
நாள்பட இறைச்சி குழம்பும் விற்பனை செய்ய தொடங்கினோம். கடைக்கு சென்று, இறைச்சி எடுத்து வந்து சமைத்து சாப்பிடும் போது அவர்களுக்கு நேரம் செலவாகும்.
வேலைக்கு செல்பவர்களின் சிரமத்தை குறைப்பதால் இது வரவேற்பு பெற்றுள்ளது என்கிறார் நந்தகோபாலன். வரதராஜன் என்ற மற்றொரு கேட்டரிங் கடை நிர்வாகி, தமது கடையில் சாம்பார், புளிக்குழம்பு, காளான் குழம்பு,
தற்போது கொரோனா காலம் என்பதால் வியாபாரம் சற்று மந்தமாகவே உள்ளது என்கிறார் வரதராஜன்.