பர்கர் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள !





பர்கர் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள !

0

பொதுவாக பர்கர் என்ற பெயரை கேட்டாலே இதை சாப்பிடுபவர்களுக்கு நாவில் எச்சில் ஊரும். அந்த அளவுக்கு சாப்பிடுபவர்களை சுவையால் கட்டி போடுகிறது இந்த பர்கர். 

பர்கர் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்
நம்முடைய நாட்டில் இது இப்பொழுது தான் நகரங்களில் பிரபலமாகி வந்தாலும் உலகின் மிக விரும்பப்படும் உணவாக மாறி வருகிறது.

இன்றைய இளைஞர் களுக்கு மத்தியில் அதிகம் வரவேற்பு பெற்ற உணவுகளில் முக்கிய இடம் பிடித்து ள்ளவை பர்கர், பீட்சா. இதனால் ஆபத்து என்று தெரிந்தும் சாப்பிடுபவர்கள் ஏராளம்.

அளவுக்கு அதிகமாக பதப்படுத்தப்பட்டு, நிறைய கொழுப்பு, சர்க்கரை, உப்பு, சுவையூக்கிகள், செயற்கை நிறமூட்டிகள் கலக்கப்பட்ட உணவுகளே ஜங் ஃபுட்.

இந்த உணவுகளில் ஊட்டச்சத்துகளையும் நார்ச்சத்தையும் தேடினாலும் கிடைக்காது. ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் பல பில்லியன் கணக்கான பர்கர்கள் உண்ணப்படுகிறது. 

பர்கர்கள் – ஒரு காலத்தில் அமெரிக்கர்களுக்கான மிகச்சிறந்த உணவாகக் கருதப்பட்ட சூழலில் இன்று உலகளவில் மக்களுக்கு அன்றாட உணவுப் பழக்கத்தின் ஒரு பகுதியாகவே மாறியுள்ளது. 

இப்படி பலராலும் ரசிக்கப்படும் பர்கர் பற்றிய சில சுவராஸ்யமான தகவல்களை பற்றி பார்ப்போம்.

பர்கர் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள !

ட்விஸ்டட் ரூட் பர்கர் கோ என்று ஒரு உணவகம் அமெரிக்காவில் உள்ளது. இங்கு கங்காரு பர்கர்கள், பீவர் பர்கர்கள், தீக்கோழி / ஈமு பர்கர்கள் போன்ற பல பர்கர்கள் கிடைக்கும்.

1996 ஆம் ஆண்டில், மெக்டொனால்டு “ஆர்ச் டீலக்ஸ்” என்று அழைக்கப்படும் ஒரு ஹாம்பர்கரை அறிமுகப்படுத்தினர். இது உயர் மட்ட அந்தஸ்து கொண்ட பர்கர் குறிப்பாக பெரியவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. 

மிகவும் விலையுயர்ந்த விளம்பர பிரச்சாரங்களுடன் வெளியிடப்பட்டது. ஆனால் மிகப்பெரிய தோல்வியை கண்டது. 2008 ஆம் ஆண்டில், பர்கர் கிங் பிளேம் ( Flame ) என்ற இறைச்சி வாசனை கொண்ட வாசனை திரவியத்தை வெளியிட்டனர்.

மெக்டொனால்டின் பர்கர் அழுகாது அதில் இரசாயன பொருட்கள் இருப்பதால் அல்ல அதன் குறைந்த ஈரப்பதம் மற்றும் குறைவான நீர்சத்து இருப்பதால் அழுகாமல் உலர்ந்து போகும். 

2009 ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட் ஜப்பானில் விண்டோஸ் 7 ஐ பர்கர் கிங்குடன் கூட்டு சேர்ந்து 7 பாட்டி வொப்பரை (patty Whopper) வெளியிட்டது.

லிபெர்ட்டி சாண்ட்விச்

2000 மாவது ஆண்டில், வட கொரியாவின் முன்னாள் சர்வாதிகாரி கிம் ஜாங் இல் “ஹாம்பர்கரை” உருவாக்கியதாகக் கூறினார். விளம்பரங்களில் பர்கர்கள் மிகவும் அழகாக இருப்பதற்கான காரணம், அவை குறைவாகவே வேக வைத்திருப்பதே ஆகும்.

முதலாம் உலகப் போரின் போது, தேச பக்தியை ஊக்குவிப்பதற்காக ஹாம்பர்கர்களை லிபெர்ட்டி சாண்ட்விச்கள் (liberty sandwiches) என்று மறு பெயரிட அமெரிக்க அரசு முயன்றது. 

ஜப்பானிய மெக்டொனால்டு பிக் அமெரிக்கா என்ற பர்கரை விற்கிறது. ராபர்ட் டவுனி ஜூனியர், பர்கர் கிங் தனது போதைப் பழக்கத்திலிருந்து தனது உயிரைக் காப்பாற்றியதாகக் கூறுகிறார். 

2003 இல் பர்கர் கிங்கில் அவர் ஒரு பர்கரை சாப்பிட்டார் பர்கரின் ருசியில் மயங்கி போதை பொருளின் சுவை வெறுத்து போகவே கையில் இருந்த போதை மருந்துகள் அனைத்தையும் கடலில் வீசினார். 

பிக் மேக்கிற்கு இரண்டு முந்தைய பெயர்கள் இருந்தன: அரிஸ்டாகிராட் (aristocrat) மற்றும் ப்ளூ ரிப்பன் பர்கர், இவை இரண்டும் சந்தையில் தோல்வியடைந்தன.

ஆஸ்திரேலியாவில், பர்கர் கிங் “ஹங்கிரி ஜாக்ஸ்” என்று அழைக்கப் படுகிறார். 

மெக்டொனால்டு பிக் அமெரிக்கா

மினசோட்டா கேசினோ இதுவரை செய்த மிகப்பெரிய ஹாம்பர்கருக்கான உலக சாதனையை படைத்தது. இது ஒரு டன்னுக்கு மேல் எடையும் 10 அடி விட்டம் கொண்டது.

மத்திய கிழக்கில் பிஸ்ஸா ஹட் ஒரு சீஸ் பர்கர் கிரஸ்ட் பீட்சாவை (cheeseburger crust pizza) விற்கிறது. 

1968 ஆம் ஆண்டில் இல்லினாய்ஸின் மேட்டூனில், “பர்கர் கிங்” என்ற சிறிய உணவகம், அதே பெயரை கொண்ட மாபெரும் துரித உணவு நிறுவனத்திற்கு எதிராக ஒரு வழக்கை நடத்தி வென்றது. 

ஏனெனில் அவர்கள் முதலில் நிறுவன பெயரை டிரேட் மார்க் முத்திரை பெற்றிருந்தனர் . இன்று, இந்த உணவகத்தின் 32 கிலோ மீட்டர்களுக்குள் பர்கர் கிங்  நிறுவன கடைகள் சட்டப் பூர்வமாக அனுமதிக்கப் படவில்லை. 

அமெரிக்கர்கள் மட்டும் ஆண்டுக்கு சுமார் 50 பில்லியன் பர்கர்களை உட்கொள்கிறார்கள். சராசரி அமெரிக்கர் ஒரு ஹாம்பர்கரை வாரத்திற்கு மூன்று முறை சாப்பிடுவார்.

உலகளவில் விற்கப்படும் அனைத்து சாண்ட்விச்களிலும் கிட்டத்தட்ட 60 சதவீதம் ஹாம்பர்கர்கள். “ஹாம்பர்கர் ஹால் ஆஃப் ஃபேம்” விஸ்கான்சினின் சீமரில் அமைந்துள்ளது.

1900 ஆம் ஆண்டில் கனெக்டிகட்டின் நியூ ஹேவனில் லூயிஸ் லாசன் என்பவரால் ஹாம்பர்கர் கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

ஃப்ளூர் பர்கர் மாட்டிறைச்சி

அமெரிக்காவில் கிடைக்கும் மிகவும் விலையுயர்ந்த பர்கர்களில் ஒன்று லாஸ் வேகாஸில் உள்ள ஃப்ளூர் டி லைஸில் வழங்கப்படுகிறது. 

ஃப்ளூர் பர்கர் மாட்டிறைச்சியுடன் தயாரிக்கப்படுகிறது மற்றும் ஃபோயர் கிராஸ் (foir gras) மற்றும் பிளாக் ட்ரபிள்ஸ் (black truffles) உடன் உள்ளது. இது $ 5,000 விலை கொண்டது.

‘பர்கர்’ என்பது உண்மையில் இன்னொரு பெயரில் இருந்து பறிக்கப்பட்ட பெயர். 

உண்மையான பெயர் ஹாம்பர்கர். ஜெர்மன் குடியேறிகளால் அமெரிக்காவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஹாம்பர்க் ஸ்டீக்ஸிலிருந்து ஹாம்பர்கர் என்ற பெயர் உருவானது.

ஒரு வருடத்தில் அமெரிக்கர்கள் சாப்பிடும் அனைத்து ஹாம்பர்கர்களும் ஒரு நேர் கோட்டில் வைத்தால் நம் பூமியை 32 தடவைக்கு மேல் வட்டமாக வைக்கலாம்.

1921 ஆம் ஆண்டில், முதல் துரித உணவு விடுதி திறக்கப்பட்டது, இது ஹாம்பர்கர்களை வெறும் 5 காசுகளுக்கு விற்றது.

மெக்டொனால்டு இன்று வரை 300 பில்லியன் பர்கர்களை விற்று சாதனையைப் படைத்துள்ளது. நிறுவனம் ஒவ்வொரு நொடியும் 75 அல்லது அதற்கு மேற்பட்ட பர்கர்களை விற்பனை செய்கிறது.

பர்கர்களில், மாட்டிறைச்சி பன்றிக்கறி பயன்படுத்துவதில்லை

சோனியா தாமஸ் என்பவர் சரியாக 27 நிமிடங்களில் 4 கிலோ எடையுள்ள ஒரு பிக் டாடி சீஸ் பர்கரை சாப்பிட்டு உலக சாதனையை படைத்துள்ளார். 

ஹாம்பர்கர் அல்லது பர்கர் என்பது இரு ரொட்டிகளுக்கிடையே அல்லது வெட்டப்பட்ட ரொட்டித் துண்டின் இடையே நன்றாக அரைத்த இறைச்சி வைக்கப்பட்டு 

கூடவே கீரை, தக்காளி, வெங்காயம், வெள்ளரி, பாலாடைக்கட்டி இவற்றுடன் எள் போன்றவையுடன் அலங்காரப் படுத்தப்பட்டு வழங்கப்படும்.

இந்தியாவில் பர்கர்களில், மாட்டிறைச்சி பன்றிக்கறி பயன்படுத்துவதில்லை மாறாக கோழி இறைச்சி அல்லது காய்கறி பயன்படுத்தப்படுகிறது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)