தமிழர் உணவு முறையில் தக்காளியின் பங்கு மிகவும் அதிகம். நாம் சமைக்கும் அனைத்து உணவுகளிலும் தக்காளி இடம் பெறும் வாய்ப்புகள் மிகவும் அதிகம்.
அதிக தக்காளி சாப்பிடுவது இரைப்பை அமிலத்தை உருவாக்குகிறது என்பதை நீங்கள் அனைவரும் அறிந்திருக்க மாட்டீர்கள். இதன் காரணமாக நெஞ்செரிச்சல் பிரச்சினை உண்டாகிறது.
மேலும் செரிமான பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு தக்காளி உட்கொள்ளல் பிரச்சனைகளை உண்டாக்கலாம் என கூறப்படுகிறது.
தக்காளியின் நிறம் சிவப்பு என்பது நம் எல்லோருக்கும் தெரியும். இந்தச் சிவப்பு நிறத்துக்கு அதில் உள்ள லைகோபீன் (Lycopen) என்ற நிறமியே காரணமாகும்.
மேலும் பொதுவாக லைகோபீன், நச்சுப்பொருட்களை வெளியேற்றவும், புற்றுநோய் பாதித்த திசுக்களுடன் போராடி நோய்க் கிருமிகளுக்கு எதிராகச் செயல்படக்கூடியது.
தக்காளியை பச்சையாக பயன்படுத்துவதை விட, சமைத்து பயன்படுத்தும் போது இதன் லைகோபீன் அளவு அதிகரிப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.
இன்னும் எளிதாக சொல்லப் போனால், தக்காளியை பச்சையாக சாப்பிடுவதை விட, வேக வைத்து சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கிறது.
ஏன் வேக வைத்த தக்காளி சிறந்தது?
சமைக்கும் போது அல்லது மற்ற செயல்பாடுகளின் போது, தக்காளியில் உள்ள தண்ணீர் குறைந்து லைகோபீன் அளவு அதிகரிக்கிறது.
ஆனால் அதே சமயம் புதிதாக வாங்கிய தக்காளியில் அதிக பலன்கள் கிடைக்கும் . அதனை சமைக்கு போது அதிக நன்மைகள் நமக்கு கிடைக்கும்.
ஆனால் தவறான செயலாக்கம் அல்லது பதப்படுத்தும் முறையால் லைகோபீன் அளவு குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு.
சமைத்த தக்காளி உணவுகளை அதிக வெளிச்சத்தில் அல்லது காற்று இருக்கும் பகுதியில் வைப்பதால் அதன் லைகோபீன் அளவு குறையலாம்.
இதனால் தான் தக்காளி கொண்டு தயாரிக்கும் பொருட்கள் அதிகம் விரும்பப்படுவது இல்லை மற்றும் இதன் நுகர்வும் குறைவாகவே இருக்கும்.
சமைத்த தக்காளி
ஆகவே, நீங்கள் சமைத்த தக்காளியை உட்கொள்ளும் போது, அதிக லைகோபீன் உட்கொள்ளல் உண்டாகிறது. இதனால் உங்கள் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைக்கிறது.
சாலட்
லிகோபீன் ஒரு கொழுப்பு - கரையக்கூடிய கலவை ஆகும். சமைப்பதைத் தவிர, தக்காளி பொருட்களுடன் கொழுப்பு சேர்ப்பதால், லைகோபீன் அளவு அதிகரிக்கிறது.
உதாரணத்திற்கு, எண்ணெய் சேர்க்காமல் தயாரிக்கப்படும் சூப் அல்லது சாலடுடன் ஒப்பிடும் போது, எண்ணெய் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படும் தக்காளி சூப் அல்லது சாலட் இரத்தத்திற்குள் லைகோபீன் நுழைவை அதிகரிக்கிறது.
லைகோபீன்
இதற்குக் காரணம், அவகாடோவில் உள்ள கொழுப்பின் காரணமாக, தக்காளியில் உள்ள லைகோபீன் அளவு அதிகரித்து மேலும் அதிகமாக உறிஞ்சப்பட்டுள்ளது.
என்ன செய்யலாம்?
லைகோபீன் அதிகமாக கிடைக்க, தக்காளியை வேக வைத்து உண்ண வேண்டும். இயற்கையாக கொழுப்பு சத்து அதிகமாக இருக்கும் அவகாடோ போன்றவற்றுடன் சேர்த்து
அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்து சூப் அல்லது சாலட் செய்வதால் லைகோபீன் அளவு அதிகரிக்கும். எனவே மேலே கூறிய முறையில் முயற்சித்து லைகோபீன் அளவை அதிகரித்திடுங்கள் மற்றும் அதன் பலனைப் பெற்றிடுங்கள்.
முடிவு
இவை தவிரச் சரும நலன் முதல் மனஅழுத்தம் வரை தீர்வு தரக்கூடிய தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டு பலன் பெறலாம்.
தக்காளியைப் பயன்படுத்தி ஒரே மாதிரியான உணவைச் சமைக்காமல், ஒவ்வொரு நாளும் விதவிதமாகச் சமைத்து சாப்பிடுவதால் எந்தவித அலுப்பும் ஏற்படாது.
தக்காளி ஜூஸ், தக்காளி சூப், தக்காளி சாதம், தக்காளி சட்னி, தக்காளி குழம்பு என எத்தனையோ வழிகளில் சமைத்துச் சாப்பிடலாம். இதை இரவில் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். தக்காளி நம் அன்றாட உணவில் இடம் பெறட்டும்!