சமைக்காத உணவில் உள்ள நன்மைகள் என்ன? #RawFoodism !





சமைக்காத உணவில் உள்ள நன்மைகள் என்ன? #RawFoodism !

0

அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத்தில் முன்னேற்றப் பாதையில் செல்லும் மனித இனம், வாழ்க்கை முறையில் முற்காலத்தை நோக்கி பயனித்துக் கொண்டிருக்கிறது. 

சமைக்காத உணவில் உள்ள நன்மைகள் என்ன? #RawFoodism !
பசுமை புரட்சி எனும் பெயரில் செயற்கை உரம் மற்றும் பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தி அதிக மகசூல் ஈட்டிய அதே மனித இனம் தான் தற்போது மீண்டும் இயற்கை விவசாயத்தை நாடி செல்கிறது. 

நவீன மருத்துவத்தில் பல்வேறு முன்னேற்றங்களை கண்டு வரும் அதே வேளையில் பாரம்பரிய மருத்துவத்தை நோக்கி மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். 

அந்த வகையில், சமைத்து சாப்பிடும் உணவை தவிர்த்து பச்சையாக உணவுகளை எடுத்துக் கொள்ளும் உணவு முறை தற்போது பிரபலமாகி வருகிறது.

சில உணவுகளை பச்சையாக சாப்பிடலாம், சில உணவுகளை வேக வைத்து தான் சாப்பிட வேண்டும். 

சில சமயங்களில் பச்சையாக உண்ணும் போது செரிமானப் பிரச்சனைகள் சிலருக்கு ஏற்படலாம். 

சமைக்காத உணவில் உள்ள நன்மைகள் என்ன? #RawFoodism !

உணவுகளை வேக வைத்து சாப்பிடுவதால், செரிமான பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

சமைப்பதன் மூலம் உணவுகளில் ஊட்டச்சத்துகள் குறையும் என்பதால் பச்சையாக உணவுகள் எடுத்துக் கொள்வதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். 

பச்சை காய்கறிகள், பழங்கள் மட்டுமின்றி சுத்திகரிக்கப்படாத பால், சமைக்கப்படாத இறைச்சி மற்றும் முட்டைகளையும் சிலர் எடுத்துக் கொள்கின்றனர்.

வெயில் காலத்தில் பச்சை உணவுகளை சாப்பிடலாம் என கூறப்படுகிறது. காய்கறி, பழங்கள் போன்றவற்றை மதிய உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. 

சமைக்காத உணவில் உள்ள நன்மைகள் என்ன? #RawFoodism !

மற்றும் இரவு உணவு, குளிர் காலத்தில் பச்சை உணவுகளை தவிர்த்தல் நல்லது. நம் முன்னோர்கள் பச்சையாக உணவுகளை சாப்பிடுவதை பின்பற்றி வந்தார்கள். 

சுமார் 1800 ஆண்டுகளில் இருந்து மக்களிடையே பச்சையாக உணவுகளை எடுத்துக் கொள்ளும் பழக்கம் இருந்து வந்துள்ளது. 

சமைக்காமல் பச்சையாக உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது ஊட்டச்சத்துக்கள் அப்படியே உடலுக்கு கிடைக்கக் கூடும். பச்சையாக உணவுகள் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் என்று வல்லுநர்கள் கூறுபவை:

உணவு சமைத்தல்

சமைக்காத உணவில் உள்ள நன்மைகள் என்ன? #RawFoodism !

ஆனால் நாம் உணவை சமைக்கும் போது வெப்பமானது உணவில் உள்ள பைட்டோ கெமிக்கல்ஸ் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் போன்ற ஊட்டச் சத்துக்களை அழிக்கிறது. 

இதனால் சமைத்த உணவுகளை சாப்பிடும் போது உங்களுக்கு குறைவான ஊட்டச் சத்துக்களே கிடைக்கிறது.

மேலும் பச்சையாக உணவுகளை எடுத்துக் கொள்வது நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நார்ச்சத்து

சமைக்காத உணவில் உள்ள நன்மைகள் என்ன? #RawFoodism !

செல்லுலோஸ், ஹெமி செல்லுலோஸ், லிக்னின் உள்ளவை கரையாத நார்ச்சத்து என்று கூறப்படும். இவை பழங்கள், காய்கறிகள் தானியங்களிலும், காணப்படுகின்றன. 

ஆப்பிள்தோல், முட்டைக்கோஸ், பீட்ரூட், காலிஃப்ளவர், கேரட், போன்றவற்றில் கரையாத நார்ச்சத்துக்கள் காணப்படுகின்றன. இவை ஜீரணத்திற்குப் உதவும், மலச்சிக்கலைப் போக்கும்.

சமைத்த உணவுகளுடன் ஒப்பிடும் போது சமைக்காத உணவுகளில் நார்ச்சத்து மிகுதியாக காணப்படுகிறது. 

நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகள் ஆகியவை உடல் எடை குறைக்க உதவும். மேலும், ரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும்.

பதப்படுத்தப்படாத உணவு

சமைக்காத உணவில் உள்ள நன்மைகள் என்ன? #RawFoodism !

பதப்படுத்தப்பட்ட (Processed) உணவுப் பொருள்களை உட்கொள்வதால் உடல் பருமன் வேகமாக அதிகரிக்கிறது என்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுவையான அத்தகைய உணவுப் பொருள்களில், சுத்திகரிக்கப்பட்ட மாவுச் சத்து, சர்க்கரை, கொழுப்பு ஆகியவை அதிகம் உள்ளன. 

ஆனால் அவற்றில் உடலுக்கு முக்கியமான புரதச்சத்து, விட்டமின், நார்ச்சத்து இருப்பதில்லை. பதப்படுத்தப்பட்ட உணவைச் சாப்பிடத் தொடங்கினால், அதை நிறுத்துவது கடினம்.

குளிர்பானம், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிப்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கலோரி அதிகமாக இருப்பதால் 

அவற்றை உண்பவர்களுக்கு உடற்பருமன், நீரிழிவு நோய், உயர் ரத்தக் கொழுப்பு ஆகியவை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. 

பச்சை உணவுகள் பதப்படுத்தப்படாதவை என்பதால் அவற்றால் நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு.

ஊட்டச்சத்து குறையாது

சமைக்காத உணவில் உள்ள நன்மைகள் என்ன? #RawFoodism !

ஒரு ஆரோக்கியமான உணவு என்பது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல் ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும் உதவுகிறது. 

சமைக்காத பச்சை உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உணவு சமைக்கப்படும் போது ஊட்டச்சத்துகள் இழக்கப்படும். ஆனால், சமைக்கப்படாத உணவுகளில் ஊட்டச்சத்துகள் பாதுகாக்கப்படும்.

குடலில் உள்ள நுண்கிருமிகள் நம் உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்பவையாகும். சமைக்கப்பட்ட உணவுகளால் குடல் நுண் கிருமிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)