பிஸ்கட் சாப்பிடாதீர்கள் பசி எடுக்காது... எச்சரிக்கும் மருத்துவர்கள் !





பிஸ்கட் சாப்பிடாதீர்கள் பசி எடுக்காது... எச்சரிக்கும் மருத்துவர்கள் !

இன்றளவில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவராலும் விரும்பப்படும் உணவாக இருப்பது பிஸ்கட். 

பிஸ்கட் சாப்பிடாதீர்கள் பசி எடுக்காது... எச்சரிக்கும் மருத்துவர்கள் !
வயது வித்தியாசமின்றி அவரவர்களுக்கு பிடித்த பல வகைகளில் இருக்கும் பிஸ்கட்களை வாங்கி உண்ணுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. 

இன்றுள்ள வளர்ச்சியின் காரணமாக இனிப்பு பிஸ்கட், உப்பு பிஸ்கட் மற்றும் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் வகையில் உள்ள பிஸ்கட் என்று பல வகையான பிஸ்கட்கள் உள்ளது. 

அவரவரின் விருப்பத்திற்கு ஏற்ப இருக்கும் பிஸ்கட் வகைகளை சாப்பிடுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. 

அதுவும் பள்ளியிலிருந்து திரும்பும் குழந்தைகள் தொடங்கி, வீட்டுக்கு வரும்  விருந்தாளிகள் வரை எல்லோருக்கும் பிஸ்கட் கொடுத்து உபசரிப்பது மரபாகி விட்டது. 

பெரும்பாலானோரின் தொலைதூரப் பயணங்களில்  பிஸ்கட் தான் உணவாகவே இருக்கிறது. 

நாலு பிஸ்கட்டில் ஒரு டம்ளர் பாலின் சக்தி

‘நாலு பிஸ்கட்டில் ஒரு டம்ளர் பாலின் சக்தி கிடைக்கிறது’ என்ற அறிவிப்போடு விற்பனைக்கு வரும் பிஸ்கட்டுகள்  நம் கவனத்தை ஈர்க்கின்றன. 
ஹைப்பர் லூப் அதிவேக வளையப் போக்குவரத்து !

உண்மையிலேயே நம் உடலுக்கு ஆற்றலைத் தருகிறதா? உணவுக்குப் பதிலாக பிஸ்கட் சாப்பிடலாமா? நிச்சயம் சாப்பிடக்கூடாது” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கற்பகம். 

“இன்றைய சூழலில் ஆபீஸ் மீட்டிங் தொடங்கி டீ பிரேக் வரை  எல்லா இடங்களிலும் பிஸ்கட் முக்கிய உணவுப்பொருளாக இருக்கிறது. சிலர் பிஸ்கட்டை உணவாகவே உண்டு வாழ்கின்றனர். 

உண்மையில், பிஸ்கட் என்பது கழுத்தைச் சுற்றிய பாம்பு போல ஆபத்தான ஓர் உணவு  என்பதைப் பலர் அறிவதில்லை. பிஸ்கட் மிருதுவாக இருக்க குளூட்டன் சேர்க்கப்படுகிறது. 

பின் இருக்கையிலும் காற்றுப்பைகள் - மெர்சிடிஸ் பென்ஸ் !

பிஸ்கட்டின் வடிவத்துக்காகச் சர்க்கரை, சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பை கார்பனேட், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன. 

பிஸ்கட்டின் ஆயுள்காலத்தை நீட்டிக்க ஹைட்ரஜனேட்டட் கொழுப்புச்சத்து (Hydrogenated Fat) சேர்க்கப்படும். 

பிஸ்கட் என்பது கழுத்தைச் சுற்றிய பாம்பு போல ஆபத்தான ஓர் உணவு

இது காலப்போக்கில் டிரான்ஸ் ஃபேட் (Trans Fat) எனப்படும் மோசமான கொழுப்பாக மாறி, உடல் சார்ந்த பல பாதிப்புகளுக்குத் திறவுகோலாக அமையும்.
விமானத்தின் ஜன்னல் இப்படி இருக்க காரணம் என்ன?

சோடியம் பைகார்பனேட் எனப்படும் உப்பு பிஸ்கட்டில் அதிகளவு உள்ளது. உடலில் சோடியம் அதிகமானால், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல், இதய பாதிப்புகள் போன்றவை ஏற்படும். 

கெட்ட கொழுப்புச்சத்து உயர்வதால், பிஸ்கட் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். 

சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பிஸ்கட்டுகளில், டிரான்ஸ் ஃபேட்அளவு பூஜ்யம் என்று குறிப்பிடப்படுகிறது. இது உண்மையாக இருக்கவே முடியாது.

விமானத்தின் உள்ளே சுவாசிப்பது எப்படி? 

பிஸ்கட்டை ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்வது ஆரோக்கியமான விஷயமல்ல. காலை உணவாக டீ, பாலுடன் பிஸ்கட் சாப்பிடுகிறார்கள். 

சிறுவயதிலேயே இதைச்  சாப்பிடுவதால் செரிமானக் கோளாறுகள், குடல் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

பிஸ்கட் சாப்பிடுவதால் செரிமானக் கோளாறுகள், குடல் பிரச்னைகள் ஏற்படக்கூடும்

குழந்தைகளுக்கு ”நோ” சொல்லுங்க பிஸ்கட்டின் பணியே பசியை அடக்குவது தான், எனவே பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக பிஸ்கட்டை கொடுத்தால் மதியம் பசி எடுக்காது. 

இது மட்டுமின்றி பிஸ்கட்டின் இனிப்பு சுவை பழகி காரம், கசப்பு, புளிப்பு, உவர்ப்பு போன்ற மற்ற சுவைகள் பிடிக்காமல் போய் விடும், குழந்தைகளையும் மந்தமாக்குகிறது. 

குடும்பத்தை மகிழ்விக்கும் சூத்திரம் தெரியுமா?

இப்படி, நம் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருக்கும் பிஸ்கட் இதுவே காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்கள் ஆகியவற்றை குழந்தைகள் வெறுப்பதற்கு இதுவும் முக்கிய காரணம். 

எனவே குழந்தைகளுக்கு தொடக்கத்திலிருந்தே ஆரோக்கியமான நம் பாரம்பரிய உணவுகளை கொடுத்துப் பழக்குவது பெற்றோர்களின் கடமையே

Tags: